Wednesday, December 6, 2023

SRIDHAR AGAIN

 SRIDHAR AGAIN

மீண்டும் ஸ்ரீதர்

1 வாடிக்கை மறந்ததும் ஏனோ -கல்யாண பரிசு -1957 - பட்டுக்கோட்டை -ஏ எம் ராஜா

[குரல்கள் ஏ எம் ராஜா -பி சுசீலா]

ஸ்ரீதர் இயக்குனர் ஆனா முதல் படம். காதல் காட்சியில் யதார்த்தம் மிளிர்வதைப்பார்க்கலாம் அந்த 1957ல் வின்சென்ட் காமெராவைக்கொண்டு காதலர்களை துரத்தி இருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காதல் பாடலிலும் கூட தன்னை இழக்காத பெண்ணின் மனமாக "நன் கருங்கல் சிலையோ -காதல் எனக்கிலையோ  வரம்பு மீறுதல் முறையோ என்று தடுக்கும் பாவம் நிறைந்த கவிதை. நல்ல இசை ஏ எம் ராஜா .அந்தக்காலத்திய கருப்பு வெள்ளை சுதந்திர பறவைகள் சரோஜா தேவி -ஜெமினி கணேசன் .

பாடலுக்கு இணைப்பு இதோ https://www.google.com/search?q=YOUTUBE+%22VAADIKKAI+MARANDHADHUM+YENO+VIDEO+SONG&newwindow=1&sca_esv=584400697&sxsrf=AM9HkKlyxOM-WxyjpTrZZh KALYANA PARISU 1957

2 பொன்னென்பேன் சிறு பூ வென்பேன் - போலீஸ் காரன் மகள் -1963 கண்ணதாசன் -வி -ரா, எஸ் ஜானகி , பி பி ஸ்ரீனிவாஸ்

பெண்கள் ஏமாற்றும் ஆண்களிடம் வசமாக ஏமாற காத்திருப்பர் போலும் ; நல்ல வானை எகிறி அடித்து துரத்திவிட்டு நல்ல வலையாகப்பார்த்து வீழ்வதில் சமர்த்தர். அப்படி ஒரு காமுகனிடம் நதி மயங்கி சாய்ந்த பெண் மனம் பறிகொடுத்து வீழ்ந்த காலம். இவ்வளவு பேசும் நாம் பாடலில் மயங்கி இருப்பதும் உண்மையே.

இணைப்பிற்குஇதோ https://www.google.com/search?q=p0nenben+sirupoovenben+video+song+&newwindow=1&sca_esv=585391571&sxsrf=AM9HkKmI4TXvztRuCAXs0Z_Ec-ArZm03NQ%3A  ponenben policekaaran magal

3 நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா - காதலிக்க நேரமில்லை 1964  -கண்ணதாசன் -வி-ரா- குரல்கள் கே ஜெ யேசுதாஸ் -பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி , எல்.ஆர்  அஞ்சலி .எம் எஸ் ராஜு

இத்துணை பாடகர்களா ? ஆம் சந்தேகமென்ன ? ஆஅ ஆஅ ஆஅ ஆஹா ஹா எனமூச்சுவிடாமல் ராஜஸ்ரீக்கு பின்னணி ஆலாபனை எல்.ஆர்  அஞ்சலி [ எல் ஆர் ஈஸ்வரியின் தங்கை , ரவிச்சந்திரனுக்கு நீண்ட நெடிய மற்றும் குறுகிய விசில் ஒலி வழங்கிய மாண்டொலின் ராஜு ] ஊட்டியில் வின்சென்ட் -சுந்தரம் நிகழ்த்திய கமெரா விளையாட்டு -காட்சி முழுவதும் பளிச் - வேறென்ன சொல்ல  இணைப்பு பாடலுக்கு இதோ https://www.google.com/search?q=you+tube+nenjaththai+allikkonjam+thaa+thaa++video+song+download&newwindow=1&sca_esv=584506005&sxsrf=AM9HkKkLjqXsFvJsD nenjaththai alli konjam thaathaa

4 பூ மாலையில் ஓர் மல்லிகை -ஊட்டி வரை  உறவு -1967 -கண்ணதாசன் -எம் எஸ் விஸ்வநாதன் -டி எம் எஸ் . பி .எஸ்

ஆலாபனையிலேயே எங்கோ உயர்ந்து உலவும் பாடல் முற்றிலும் எம் எஸ் வியின் இசை சாம்ராஜ்யம். இது போன்ற ஆலாபனைக்கு வேறொருவர் காரணம் என்று சொன்னவர்களின் வாயில்ஆளுக்கு  அரைக்கிலோ களிமண் வைத்து அடைத்தபாடல் . பாடலின் கம்பீர நடை கவிதையை  விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இப்பாடலில் அனுமந்துவின் சுறுசுறுப்பு மறைக்கவோ மறக்கவோ இயலாதது. முந்தைய பாடலின் அதே களம் [ஊட்டி தாவரவியல் பூங்கா] ஆனால் மாறுபட்ட கோணங்களில் -இம்முறை கமெரா விளையாட்டு                           என் பாலகிருஷ்ணன்  . பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D&newwindow=1&sca_esv=588609601&sxsrf=AM9HkKnXFPjv7WqUq23z7vDV3oL

5 மங்கையரில் மஹராணி [ அவளுக்கென்று ஓர் மனம் -1972] கண்ணதாசன் , விஸ்வநாதன் ,எஸ் பி பாலசுப்ரமணியன் - பி சுசீலா

ஸ்ரீதரின் கை வண்ணத்தில்--- இது ஒரு வினோதமான சூழல் கொண்ட நால்வர் பாடல் -இருவர் காதலில் திளைக்க ஒருத்தி மனம் நொந்து வருந்த, அவளை ஆட்டிப்படைக்கும் வில்லன் குரூர குதூகலம் கொள்ள -ஒரே அணைக்கட்டுப்பகுதியில்- சுகமும் சோகமும் என்று எம் எஸ் வியின் அதகளம் இப்பாடல் -கவிஞர் சுகத்துக்கு கவிதை வழங்கிட, மெல்லிசை மன்னர் ஆலாபனையில் சோகத்தை குழைக்க -என்ன ஒரு கற்பனை. பாடல்

குதூகலமும் குமுறலும் சுசீலாவின் குரலிலேயே--- எம் எஸ் வியின் ஆளுமையை என்னென்று சொல்ல? பாடல் முழுவதும் அனுமந்துவின் தபலா சும்மா நர்த்தனமாடி இருக்கிறது. பார்த்து / கேட்டு ரசிக்க   இணைப்பு இதோ.                                                                 https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U mangaiyaril maharani  skewed moods

Mangayaril Maharani HD Song - YouTube

இன்றைய தேர்வுகள் அனைத்தும் டூயட் காட்சிகளை காலத்திற்கேற்ப காட்சிப்படுத்திய ஸ்ரீதரின் தொழில் மேலாண்மைக்கு சான்று

மீண்டும் வேறு காட்சி களுடன் சந்திப்போம்

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. நெஞ்சம் மறப்பதில்லை
    நெஞ்சில் ஓர்ஆலயம்
    படப்பாடல்களை மறந்துவிடாதேயும்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...