Saturday, December 9, 2023

FUNCTIONS / ENERGY --2

 FUNCTIONS / ENERGY --2

செயல்கள்/ ஆற்றல் --2

 1. எனர்ஜி என்ற ஆற்றல் துவங்கும் இடம் 2. எனர்ஜி அழியாது ஆனால் உருமாற்றம் பெறலாம் என்ற கோட்பாடு உயிரினங்களின்   இயக்கத்தில் எங்கெங்கே நிகழ்கிறது என்ற அடிப்படை செயல் பாடுபற்றியவற்றை நாம் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.இந்த இடத்தில் இருந்து தான் உயிரினங்களில் ஆற்றல் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு , பின்னர் பல வகை உயிரினங்களின் செயல்பாடுகளால் எனெர்ஜி இடம் பெயர்வதும், வடிவமாற்றம் பெறுவதும் சங்கிலித்தொடர் போல் நிகழ்ந்து, இந்த பூமியையும் சூரிய ஒளியையும் , வானிலை நிகழ்வினையும் ஒருங்கிணைக்கின்றன என்று அறிய முற்படுவோம் .

முழு முதல் ஆற்றலின் வெளிப்பாடு சூரியனிலிருந்து தான் தோன்றுகிறது. இதுவே இரவு-பகல் மாற்றத்தின் காரணியும் ஆகும். பூமியின் பல்லுயிர்களும் சூரிய உதயம் உணர்ந்தே நாளைத்துவக்குவதும், இரவின் துவக்கத்தில் செயல் விடுத்து அடங்குவதையும் பறவைகள் விலங்குகள் வாயிலாக அறியலாம், சில மரங்கள் - புளி , தூங்கு மூஞ்சி, வாத முடக்கி போன்ற வை மாலைப்பொழுதினை  உணர்ந்து   இலைகளை மூடி உறங்குவது போல் கட்சி தர "தூங்கு மூஞ்சி' வகைகள் எனப்படுவன, அவை நண் பகலில் உறங்குவதில்லை      

  [மனிதரில் சிலர் உறங்குவதே வேலைநேரத்தில் தான்]. சரி எவ்வாறு பிற உயிரினங்கள் காலை மாலை போன்ற நிலைகளை உணர்கின்றன என்பது இவ்விடத்தில் பல நுணுக்கங்கங்களை உள்ளடக்கியுள்ளன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

உணர்வு என்னும் SENSITIVITY - பல உயிரினங்களை சுற்று சூழலை எதிர்கொள்ள வைக்கின்றது. பல உயிரினங்கள், மழை வெள்ளம், நிலநடுக்கம் புயல் போன்ற பேரிடர்களை முன்னரே உணர்ந்து பாதுகாப்புகளை நோக்கி இடம் பெயர்ந்து பிழைத்துக்கொள்கின்றன.

தாவரங்களின் முக்கிய உணர்வுகள் புவிஈர்ப்பு மற்றும் ஒளி சார்ந்தவையே. மனிதர்க்கு ஒளி என்று தான் தெரியும் அதன் உள்ளடங்கிய நிற ப்பகுதிகளை VIBGYOR -உணர்வால் பிரிக்க இயலாது . ஆனால் தாவரங்கள் பிரித்து அறிவதுடன்,  குறிப்பிட்ட நிறப்பிரிவு நன்கு உணரப்படும்   போது , அந்த அடிப்படையில்  ---உறங்குதல் அல்லது விழித்தல் என காலை மற்றும்  இரவை பிறழாமல் உணரும்  திறமையின.

காலை / மாலை சூரியஒளி  ஒரு சாய் கோணத்தில் பூமி மீது படர்வதால் vibgyor பகுதிகள் பலவாறாக சிதறி ஈர்க்கப்பட்டு R என்னும் செங்கதிர்கள் அதிக அளவில் படர்வதால் ஒளி சிவந்த  காலை [மற்றும் மாலை]சூரியன் தோன்றுகிறது    பசும் தாவரங்களில் இவ்வகை கதிர்களை ஏற்க PHYTOCHROME என்ற சிறப்பு புரோட்டீன்கள் உள்ளன. அவை இரு வடிவங்களில் இருக்கும் ஒன்று Pfr  மற்றது Pr . இவை ஒன்றிலிருந்து மற்றது என்ற வடிவம் பெறும்       சிவப்பு கதிர் பட்டதும் Pr வடிவம் Pfr நிலையையும் Pfr வடிவம் Pr நிலையையும்  பெறும்    இந்தஉரு மாற்றம் Pr  [உறக்க நிலை] மாலை    அல்லது Pfr [செயல் நிலை] காலை என்றுணர்த்தும். இவ்வாறு பல நிறமிகளை பயன்படுத்தி தாவரங்கள் தங்கள் அன்றாட செயல்களை நிர்வகிக்கின்றன. 

  பசுமை நிற க்ளோரோபிளாஸ்ட் வகையின சூரிய ஒளியை விரைவாக ஏற்கும் திறன்    கொண்டவை. இப்போது கலர்    என்ற வண்ணங்களை புரிந்து கொண்டால் பல எனெர்ஜி குறித்த கருத்துகள் எளிதாகும்

எந்த நிறமும் தன்னுடைய நிறத்தில் இருக்கும் ஒளியை ஏற்காது அல்லது ஏற்க முடியாது.பசுமை நிறம் பச்சை நிற ஒளியை ஏற்காமல் புறம் தள்ளுவதால் அது பசுமை நிறம் பெருகிறது. அதே போல் சிவப்பு மலர் சிவப்பு கதிர்களை வெளி விடுவதால் அது சிவப்பு நிறம் பெறுகிறது .

பச்சை நிறம் தான் ஒளிச்சேர்க்கையின் நாயகன் எனவே தான் பசுமை காடுகள் தேவை என்று உலகெங்கும் பேரியக்கங்கள் துவங்கியுள்ளன. ஒவ்வொரு இலையிலும் உள்ள பச்சை நிற குளோரோபிளாஸ்ட்கள் ஒளிச்சேர்க்கையின் முதல் படியாகிய ஒளி அறுவடை [light harvest] பணியை நேரடியாக நீல மற்றும் சிவப்பு கதிர்களை வெகு விரைவாக ஏற்று செயல் பட துவங்குகின்றன.  . பிற நிற .அமைப்புகள் [pigments] வெவேறு ஒளி அலைகளை ஏற்று ஆண்டெனா போல் செயல் பட்டு க்ளோரோபிளஸ்டுகளுக்கு ஒளி யை பிடித்துத்தந்து ஒளிச்சேர்க்கை க்கு உதவுகின்றன, அது ஏன் ஒளிச்சேர்க்கை என்கிறோம்? அடுத்த பதிவில்

நன்றி அன்பன் ராமன்      

1 comment:

  1. Sleep activity is controlled by external factors but actually in the absence of these factors sleep is endogenous ,(Circadian rhythm)

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...