Monday, December 11, 2023

GUNTIR VIJAYAM -3

 GUNTIR VIJAYAM -3

குண்டூர் விஜயம் -3

சாப்பிட்டு முடித்து சுப்பிரமணி -கஸ்தூரி ரெங்கன் இருவரும் . கே சார் அறைக்கு சென்றனர். சுப்பிரமணி டேபிள் என்ன சார் வெக்கணும் என்றான். தயாராக ஒரு சீட்டு -சர்ர் என்று கிழித்து இந்தா  என்றார். 4 சீட்டுகள் பிளவர் வாஸ் , 4 குடிநீர் பாட்டில் [புதியது] 4 எழுதும் PAD , டாக்டர்கள் போன் நம்பர் லிஸ்ட் [சுப்பிரமணி தயாராக பாக்கெட்டில் இருந்து பி கே சாரிடம் காட்டி ஒப்புதல்  பெற்று க்கொண்டான் , 4  வெள்ளை வெளேர் டவல் . பக்கத்து மேடையில் சரஸ்வதி படம் ஒரு கட்டு ஊது பத்தி மற்றும் கதவுகள்  சுமார் 5 நிமிடம் முன்பு திறந்தால்  போதும் . நீங்கள் ஆளுக்கொரு ஓரத்தில் கூப்பிட்ட குரலுக்கு வரத்தயாராக நில்லுங்கள் என்று எழுதி கையெழுத்திட்டு சுப்பிரமணியிடம் தந்தார். இன்னும் 25 நிமிடங்களில் நிகழ்ச்சி   துவங்கும் .  பித்து பிடித்தவன் போல் சுப்பிரமணியின்   பின்னே போய்க்கொண்டிருந்தான்.

திடீரென்று    பரபரப்பு மத்திய அமைச்சர் வந்து இறங்க பி.கே வரவேற்று VIP LOUNGE க்கு கூட்டிச்சென்றார். .10 நிமிடம் உரையாடி விழா ஹால்பகுதிக்கு வந்தனர்.  சுப்பிரமணி பன்னீர் தெளித்து வணக்கம் சொன்னான். அமைச்சர் பதில் வணக்கம் தெரிவித்தார். டேபிள்  கச்சிதமாக   அமைத்திருந்தான்  சுப்பிரமணி.. நிகழ்ச்சி துவங்க இறை வணக்கம் அக்கவுண்ட்ஸ் கோதாவரி என்ற பெண்மணி.

 வரவேற்று நன்றி சொன்னார் குண்டூர் நிலைய சூப்பரி ண்டன்ட்   சலபதி ராவ்.

மத்திய அமைச்சர் பேசியது

பொதுமக்கள் நலன் கருதி இயக்கப்படுவது ரயில்வே துறை. எனவே ஊழியர்கள் பங்களிப்பு இன்றி இவை  சாத்தியம் இல்லை. எனவே தான் நமது நாட்டின் வரலாற்றில் முதல் முதலாக, பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற ஊக்கமளிக்கும் நிகழ்வுகள் அரசின் பல துறைகளிலும் ஏற்பாடு செய்தால் உண்மை ஊழியருக்கு மதிப்பும் மரியாதையும் பெருகும். இதனை நாங்கள் மிகுந்த ஊக்கத்துடன் தொடர இருக்கிறோம்.. உங்கள் ஒவ்வொருவருக்கும், இந்திய அரசின் சார்பில், நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறேன்.   நன்றி --என்று பலத்த கை தட்டலுடன் அறிவித்து அமர்ந்தார்.

பின்னர் விளக்க உரை பஞ்சாபகேசன்:  ஏன் இந்த கூட்டம் இப்போது என விளக்கினார். நமது துறையில் குறை இருந்தால் மாய்ந்து மாய்ந்து எழுதும் பத்திரிகைகள் /பொது மக்கள்/ TV விமரிசகர்கள் நம்மிடையே அமைதியாக கடமை தவறாத ஊழியர்களை பற்றி ஒரு நன்றி அறிவிப்பு கூட செய்வதில்லை. எனவே ரயில்வே அமைச்சகத்தினருக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன்  இந்த விழாவுக்கு ஒப்புதல் தந்து , நம் துறையின் இணை அமைச்சர் வந்துள்ளார் -அவருக்கு நன்றி.

தென்னக ரயில்வே யில் ஒரு சீனியர் TTE --திரு. மாடசாமி அவர்கள் வெகு நேர்த்தியாக செயல் பட்டு சில அரசு அதிகாரிகள் குறுக்கு வழிகளில் எளிதில் சலுகைகளை ஏமாற்று வதை கண்டுபிடித்து ஊழலைக்களைய அதி துணிச்சலுடன் செயல் பட்டு நீதி மன்றம் வாயிலாக ஊழல் அதிகாரிக்கு தண்டனை கிடைக்கும் அளவுக்கு -தப்பி க்கவே முடியாத படி வலுவான ஆதாரங்களை வைத்து ரயில்வே துறைக்கு மாபெரும் சேவை புரிந்துள்ளார். இதே போன்று மேற்கத்திய ரயில்வே யில் திரிபாதி என்பவர் ஒப்பந்ததாரர்கள் செய்யும் ஊழலை    வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பொருள் விரயத்தை  வெகுவாக குறைத்துள்ளார்  பாராட்டுக்ககள்.

நீங்கள் அனைவரும் கூட ஒவொரு வகையில் நிர்வாகத்திற்கு சிறப்பாக சேவை புரிகிறீர்கள். திருச்சி நிலையத்தில், திரு. ராமசாமி அவர்கள் 22 ஆண்டுசேவையில் ஒருநாள் கூட லீவ் எடுத்ததே இல்லை. . இது போல், மொத்தம் ஐவர் மேடைக்கு அழைக்கப்பட்டு அமைச்சர் கையால் பதக்கம் மற்றும்,பாராட்டு தெரிவிக்கும் முகமாக ஒரு நேர்த்தியான  பத்திரம்                                                                                                                    வழங்கப்பட்டு, சிறப்பு போட்டோ எடுப்பும் கிடைத்தது.                                                                                                                                                                                                                                                           பின்னர் அற்புதமான தேநீர் விருந்து -புஜங்க ராவ் கேட்டரர் என்ற நிறுவனத்தினரைக்கொண்டு வழங்கப்பட்டது. ஏற்பாடு சுப்பிரமணியே தான்.  PK  க்கு   பெரும் மகிழ்ச்சி. மாலை 4.30கு விழா நிறைவடைந்தது.

சுப்பிரமணி ஒரு நல்ல தருணம் பார்த்து மிகுந்த பவ்யமாக ராமாசாமியிடம் பேச்சை துவங்கினான். அப்போது மாடசாமி , ரெ இருவரும் பி கே  அறையில் இருந்தனர். சார் உங்க கிட்டு நின்னு பேசக்கூடாது தான் ஆனா சந்தர்ப்பம் அப்பிடி நெருக்குது. என்ன விஷயம் சொல்லு என்றார் ராமசாமி.

அவரு--கஸ்தூரிரெங்கன் சார் உங்களால முன்னுக்கு வந்தவர் . உலகு நடப்பு தெரியாம அவரும் அவுங்க அம்மாவும் சிறுபிள்ளைத்தனமான வேலைகளை செய்றாங்கன்னு புரியுது. உங்களைப்போல பண்பானவுங்க எவ்வளவு வேதனைப்படுவீங்க னு தெரியும். இதை எல்லாம் சொல்ல நீ யார் னு கேட்கலாம் . உங்க எல்லார் வாழ்விலும், நான் ஒரு வழிப்போக்கன் தான். என்னவோ தெரியல்ல உங்களையும், மாடசாமி சாரை யும் பத்தி நெறைய சொல்லி இருக்கார் கஸ்தூரி ரெங்கன் சார் . மேலும், PK சார் உங்களல்லாம் பாராட்டுறார் னா வேற சொல்ல என்ன இருக்கும்?  என்னுடைய சிறு வேண்டுகோள் கஸ்தூரி சார கண்டியுங்க -தண்டிச்சுராதீங்க / துண்டிச்சுறாதீங்க . ரொம்ப நல்ல வரு ,ஊழல் /ஏமாத்து தெரியாத வரு. உலகத்துல நண்பர்கள் அவசியம்னு இப்ப இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கு. நேத்து நீங்க அவர்கிட்ட பேசுன தனுல ருந்து நீங்க வருத்தப்படுறீங்கன் னு தெரிஞ்சு நேத்தே அவர்கிட்ட எல்லாம் சொல்லி புரிய வெச்சிருக்கேன், நிச்சயம் உங்க நட்போடு அவருக்கு கடவுள் ஆசியும் தேவை, இதுல எனக்கு ஒரு சுயநலமும் இருக்கு. அவர் இங்க இல்லைன்னா நான் திரும்பவம் இங்கே நெருங்கின நட்பு இல்லாம ஆயிடுவேன்.

பி கே சார் எல்லாம் செய்வாரு--- ஆனா நட்பு?

அதுக்காக, இவ்வளவு பேசிட்டேன். உங்களால என்றாவது எனக்கும் பலன் கிடைக்கலாமே .இதை எல்லாம் பார்த்து அவருக்கு மன்னிப்பு குடுங்க, எனக்குன்னு இப்ப இருக்குற ஒரே நண்பர் கஸ்தூரி சார் தான்.

 என் போன் நம்பர் தரேன் எனக்கு ஆலோசனை ஏதாச்சும் வேணும்னா கேட்டுக்கறேன் சார் கொஞ்சம் உதவு னீங்கன்னா, நாம எல்லோருமே சந்தோசமா இருக்கலாமே என்று வணங்கி காலில் விழுந்தான்.  ராமசாமி அதிர்ந்தார். சிரித்துக்கொண்டே, ஓடிப்போய் ராசா,மாசா பெட்டிகளை தலையில் சுமந்து வந்து 2 ம் பிளாட்பா ரத்தில் எஸ் 8 க்கு நேராக வைத்து விட்டு ஓடிச்சென்று மாடசாமியை அந்த இடத்துக்கு அழைத்து வந்து , வண்டி வந்ததும் அவர்கள் பெட்டிகளை ஏற்றி அமர வைத்து கீழே இறங்கினான். பேச வாய் இழந்த ரெ, வெளியில் இருந்தே வணக்கம் சொன்னான், வண்டி நகர்ந்தது.

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

CHEBULIC MYROBALAN BLACK MYROBALAN

CHEBULIC MYROBALAN BLACK MYROBALAN Tam= Kadukai ,Hindi= harad, Haritaki, Mal=Kadukka, Kannada=AAlalae kaayi Several unrelated plants ar...