DEAR STUDENTS
அன்பார்ந்த மாணவர்களே
வாழ்க்கையில் முறையாக முன்னேற
சில அடிப்படை தேவைகளை நீங்கள்
அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை நீங்கள்
வடிவமைத்துக்கொள்ள வேண்டும். தீதும்
நன்றும் பிறர் தர வாரா என்பதைப்போலவே ஒழுக்கமும் கல்வியும்
ஒட்டிப்பிறந்த அறிவு சார் பலன்களே. இதை உணராது
பெற்ற கல்வி அட்டைகளை
அடைய உதவலாம், வேறு நற்பலன்
எதையும் பெற உதவாது .பெருமையும் கல்வியின்
பலனும் முற்றாக அமைந்திட ஒழுக்கம் இன்றியமையா
த்தேவை .ஒழுக்கம் என்பது
கை கட்டி வை பொத்தி நிற்பது அல்ல. யாரும் நம்மை
கண்காணிக்காதபோதும் தவறு செய்யாமல்
நேர்மையாக இயங்குவதே ஒழுக்க நெறி.
ஒழுக்கத்தின் அடிப்படை நேர்மை. நேர்மை
என்பதில் செயல் மட்டும் அல்ல சொல்லும் அடங்கும். அதாவது
பொய் சொல்பவனால் ஒழுக்கம் தவறாது
செயல் பட இயலாது. சொல்லப்போனால் பொய்
பேசுதல் தான் பல வித குற்றங்களுக்கும் தாய்
என்று சொல்லலாம். பொய் பேசாமல்
இருந்தால் மனதில் ஒருவித தன்னம்பிக்கைக்குயம், எவரையும்
எதிர் கொள்ளும் மனோவலிமையும் ஏற்படுவதை
உணரலாம் . இது
தான் மனித முன்னேற்றத்தின் துவக்கப்புள்ளி. துவக்கம் சரியில்லாத
எந்த ஆட்டமும் வெற்றி தராது;
மாறாக குழப்பங்களை தோற்றுவிக்கும். அதனால்,
பிறர்க்கு தலை வணங்க வேண்டி வரலாம். தன்னம்பிக்கையை அடகு வைக்க நேரிடும்
இது போன்ற
நிலை தான் கூழைக்கும்பிடு போட்டு வாழும்
நிலைக்கு அஸ்திவாரம். B E ,MBA என்று
சொல்லிக்கொண்டு கூழைக்கும்பிடு போட்டு
வாழும் கூட்டங்களை பல அலுவலங்கங்களில் காணலாம்.அவர்களில் பலர் முறையான
வழி முறைகளை பின் பற்றாமல் குறுக்கு வழி
சித்தாந்தங்களை பின் பற்றி
இடம் பிடித்தவர்கள். அதன் பின்னர்
பியூன் முதல் அனைவரிடமும் கூழைக்கும்பிடு ஒன்றே
வாழ்வியல் நெறி என்று வாழ்பவர்கள்.
ஒழுக்கம் என்பது
பிறரிடம் நாம் பழகும் முறை மட்டும் அன்று ; நம் செயல்களை
நாமே நிறைவேற்றுவதில் காட்டும்
சீரான வழிமுறைகளும் தனி நபர்
ஒழுக்கம் சார்ந்தது. தனி மனித
ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கங்களை நிர்வகிக்கும் ஆதாரம். தனி நபர்
ஒழுக்கம் சீர்குலைந்தால் சமூக ஒழுக்கம்
பாழ் படுவதைத்தவிர வேறு வாய்ப்பு
மிகமிகக்குறைவு..
தனி நபர்
ஒழுக்கம் என்பது ஒவ்வொரு நிலையிலும் பின்பற்றிப் போற்றப்பட
வேண்டியது. காலையில் துயிலெழுதல்
தொடங்கி இரவு ஓய்வெடுக்கும் வரை நாம்
பல இடங்களில் வெவ்வேறு பணிகளில்
செயல் படுகிறோம்.. எதுவும், நேர
அடிப்படையில் நிகழ்வது அல்லவா? அதே
போல நமது அனைத்து செயல் தேவைகளையும் ஒரு அட்டவணைப்படி செயல் ஆற்ற பழகிக்கொண்டால் நம்மிடம் ஒரு
பெரும் ஆளுமை உருவாவதை பிறர் பார்க்கக்கூடும், ஆனால் நாம் அறியாமலே இது
ஈடேறும். இதன் காரணமாக,
நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் , நாமே
சிறுவன்/சிறுமி நிலையில் இருந்து வாலிபன் / யுவதி நிலை நோக்கி
நகர்வது வெகு சீராக அமையும். மனக்குழப்பங்களும் போராட்டங்களும் நம்மிடம் இருந்து விலகியே
நிற்கும். இந்த வகை
குழந்தைகள் பள்ளி இறுதிக்கட்டத்திலேயே கல்லூரி
பயில்வோர் போன்ற வசீகர உடல் பெறுவதைக்காணலாம்
இது போன்ற
மாணவ மாணவியர் நேர்முக தேர்வுகளில்
சிறப்பான கவனம் ஈர்ப்பது மிக எளிது..
இந்த நிலையில் ஒழுக்கம் நிறைந்த
உரையாடல் உங்களின் தகுதியை வெகுவாக
உயர்த்திக் காட்டும் திறன் கொண்டது.
இது உங்களின் second nature என்று
அனைவரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற
உதவும். இதனால்,
உயர் நிலை கடந்த கல்விக்கூடங்களில் சில
பொறுப்புகள் உங்களைத்தேடி வரும். இவற்றை
மறுக்காமல் ஏற்று செயல் பட்டால் நீங்கள் எளிதாக தலைமைப்பண்பு எனும்
leadership qualities சார்ந்த தகுதிகளை
வளர்த்துக்கொள்ள முடியும் அல்லது
அவையே உங்களின் திறமையுடன் ஐக்கியம்
கொள்ளும். இத்துணை பண்புகளும்
உங்களிடத்தில் குடியேற, உயர் கல்வி
மிக எளிதாக வயப்படும்.
இவற்றை இயல்பாக
அடைய உங்களுக்கு பெரிதும் துணை
நிற்க இருப்பது 'நாவன்மை', எனும்
பேச்சுத்திறன். அதனால் தான், எப்போதும்
மொழியின் வலிமையையும், தேவையையும் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறேன். எனவே மொழிகள்
பயில்வதை தள்ளிப்போடாதீர்கள். எந்த நிலையிலும்,
மொழிதான் நட்பின் திறவு கோல்.மேலும் உங்களின் திறமைகளை வெளி
உலகில் பரிமளிக்க வைக்க வல்ல
அற்புத சக்தி. மொழிதான்,
பேசுபவரின் குரல். அதுவே உங்களின்
தூதுவர் [Ambassador] . எனவே வாழ்வில்
முறையான முன்னேற்றம் பெற ஒழுக்கம்
நிறைந்த முயற்சி ஒன்றே ஈடில்லா ஆசான், இதனை,
நினைவில் கொள்வீர்.
நன்றி
அன்பன் ராமன்
ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
ReplyDeleteஉயிரினும் ஓம்பப்படும் என்ற
வள்ளுவன் சொல்லை அறிவுறுத்தியதற்கு நன்றி