Wednesday, December 13, 2023

L R ESWARI

 L R ESWARI

எல் ஆர் ஈஸ்வரி

பெருமையாக, தான் எல்லார்க்கும் ஈஸ்வரி என்று பேசும் இந்த பாடகியின் பெயர் லூர்து ராஜேஸ்வரி , சொந்த ஊர் பரமக்குடி என்னும் தென் தமிழநாட்டின் சிற்றூர். குடும்பமே பாடகர்கள் எனவே சென்னையில் தான் இவர்களின் வாழ்க்கை க்கு ஏதுவான இடம். பெயர் நீளமாக இருப்பதனால் திரை உலகம் பெயரைகுறைத்து ஈஸ்வரி என்று அழைக்கலாம் என்று கணக்குப்போட்டால் ஏற்கனவே எம் எஸ் ராஜேஸ்வரி என்றொரு பின்னணி ப்பாடகி நிலை பெற்ற இடத்தில் இருந்ததால் அதையும் சுருக்கி L .R .ESWARI என்று நாமகரணம் சுமார் 1956-57  கால கட்டத்தில். அறிமுகம் செய்வித்தவர் திரு கே .வி .மஹாதேவன் [திரைஉலகினரால் 'மாமாஎன்றழைக்கப்பட்டபிரபல இசை அமைப்பாளர். அவர் [LRE] எப்போதும் மாமாவின் உதவியை நினைவு கூர்பவர்.

எல்லார் ஈஸ்வரி எந்த வகை பாடலையும் அனாயாசமாகப்பாடக்கூ டியவர். அது மட்டுமல்ல குரலில் எந்த .உணர்வையும், சிணுங்கலையும் சர்வ அலட்சியமாக பாடக்கூடியவர். உதாரணம் சொல்கிறேன் -பாருங்கள். சிவந்தமண் படத்தில் 'பட்டத்து ராணி' பாடல் ஜொலித்தது LRE யின்   குரலில் தான்      அதோடு பளிச் என்ற சவுக்கு அடி விழுந்ததும் மூச்சு முட்ட ஹஹ என்று சிணுங்கியவுடன் தானே லா லா என்று எடுத்துப்பாய்கிறாரே  அது அசத்திய அசாத்திய  திறமைக்கு சான்று. ஹிந்தியில் லதா மங்கேஷ் கர், ஐயோ என்னால் இப்படி சிணுங்கிக்கொண்டு பாட முடியாது, வேறு யாரையாவது சிணுங்கச்சொல்லுங்கள் என்று மிரண்டு போனாரே அதற்குமேல் வேறு வேண்டுமா

LRE யின் பாடல்களை பிறர் பாடுதல் எளிதன்று. ஏனெனில் - எந்த வித விரகதாப உணர்வையும் அச்சமோ கூச்சமோ கொள்ளாமல் 'போங்கடா' என்பது போல் எடுத்தாளுவார். சொல்லப்போனால் அவர் இவ்வாறு மேடைநிகழ்ச்சிகளில் பாடுவதைப்பார்த்து சிலர், எளிதாக எண்ணி வம்பிழுக்க, தைரியமாக எதிர்கொண்டு அறைந்து விடுவார்.அவர் பாடுவது தொழில் என்ற அளவில் பார்க்காமல் வக்கிரப்பார்வை காட்டினால்-வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.   LRE சரியான தைரிய சாலி.

ஆரம்ப கால பாடல்களில் கோரஸ் பாடியவர் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்- ஏனெனில் குரலில் வசீகரத்தைப்பிழிய தயங்காதவர். அவரின் உத்திகளும் கூட அவ்வப்போது பாடலை உச்சிக்கு எடுத்துச்சென்ற தகவல்கள் உண்டு. சான்றாக எலந்தப்பழம் பாட லில்    என்று ஆரம்பித்ததும்  எலந்தபயம்  எலந்தபயம்  எனகரம்கரத்திற்கு பதில் கையாண்டு ஒரு யதார்த்தத்தை பாடலில் விதைத்தார். இவ்வாறு அவர் பெரிய அளவில் பிரகாசித்தது எம் எஸ் வி யின் பட்டை தீட்டுதலினால் தான் என்று பெரும்பாலோர் சொல்வதுண்டு.

1 என்ன சொல்ல என்ன சொல்ல SPB -LRE போட்டிபோட்டுக்கொண்டு பாடினர்       LRE  உணர்ச்சி கொப்பளிக்க ப்பாடியுள்ளதை காண்பீர்.

https://www.google.com/search?q=singer+spb+on+lr+eswari&newwindow=1&sca_esv=589683330&sxsrf=AM9HkKnwBdBzhoeMPyNP03pmk-80HXxIFw%3A17022693422 

 

இது போல் பல பாடல்களை பட்டியிலட முடியும்

2 காசே தான் கடவுளடா படத்தில் கோவை சௌந்தரராஜன் உடன் பாடியுள்ள மெல்ல பேசுங்கள் பாடலில் LRE யின் துவக்கமே அதட்டல் மிகுந்தது "கூடாது" என்ற சொல்ல எப்படி கட்டளையாக சொலிகிறார் கேளுங்கள். மேலும் பாடல் முழுவதும் ஈஸ்வரியின் சாம்ராஜ்யம் பொங்கிப்பிரவாகிப்பதை காணலாம்

https://www.youtube.com/watch?v=A8RUCTHNiaE mellapesungal kovai sound, LRE[KAASEDAN]

3 எதிர் காலம் படத்தில் "மௌனம் தான்  பேசியதோ" பாடலில் விரைவான மாற்றங்களும் கற்பனை கொப்பளிப்புகளும் ஏராளம் அனைத்தையும் எளிதாக கையாளும் நேர்த்தியை என்ன சொல்ல  அவர் ஏதோ க்ளப் வகை பாடகி என்பதல்ல  அவர் எதையும் எதிர்கொண்டு பாடும் வல்லமை உடையவர்.

https://www.google.com/search?q=MOUNAM+THAAN+PRSIYADHIO+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=589683330&sxsrf=AM9HkKnc2xpzR4ZKqvkdTposcEtQZRt1VQ%3A1702270379826&source=hp&ei=q5V2ZZrOMJHj1e8P-OCg4AI&iflsig=AO6bgOgAAAAAZXaju5oDwoWqKMzo5rGDsz4XhVwk3fx9&ved=0ahUKEwjaz7Kqy4aDAxW

4 நிலவே நீ சாட்சி படத்தில் எம் எஸ் வி யுடன்[நீ நினைத்தால் இந்நேரத்திலே]  டூயட் பாடி யுள்ளார் . அதீத உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருவரும் பாடி அந்த நாளில் பெரிதும் பாராட்டு பெற்ற பாடல். இப்பாடல் மனங்களின் குரலாக ஒலிப்பது  மிக அற்புதமான இசை அமைப்பு -கேட்டு மகிழ்வீர்

https://www.google.com/search?q=nee+ninaal+inneraththile+video+song+download&newwindow=1&sca_esv=589683330&sxsrf=AM9HkKkYsrtW8BlkPWgCFK2qosAm9BYVvA%3A17022

5 வாராய் என் தோழி பாடல் தான் எம் எஸ்  வி,  ஈஸ்வரிக்கு வாய்ப்பளித்த முதல் பாடல், நல்ல நுணுக்கம் நிறைந்த 'கரணம் தப்பினால் மரணம்' வகைப்பாடல் . கேட்டு மகிழ https://www.google.com/search?q=vaarai+en+thozhi+vaarayo+song+download&newwindow=1&sca_esv=589691683&sxsrf=AM9HkKkfXQsGOwrvceLVKwvxrLGIEfNBPA%

எண்ணற்ற பாடல்களை தனக்கே உரிய கம்பீரத்துடன் கையாண்ட பெருமை LRE அவர்களுக்கு எப்போதும் உண்டு.

 நன்றி

அன்பன்  ராமன்

 

 

1 comment:

SURRENDER -UNCONDITIONAL

  SURRENDER -UNCONDITIONAL பாதம்   பணிந்த ஆடிய பாதம் இவர் யார் ? நீங்கள் நன்கு அறிந்தவர் தான் . சமீபத்தில் பேசப்பட்டவர் . எனின...