Sunday, December 17, 2023

KEY EVENTS –PHOTOSYNTHESIS

KEY EVENTS –PHOTOSYNTHESIS

ஒளிச்சேர்க்கை- முக்கிய நிகழ்வுகள்

ஒளிச்சேர்க்கையின் செயல் பாடுகள் இரு பெரும் நிகழ்வுகளாக பிரித்துப்பார்ப்பது மரபு. அவற்றை  1  LIGHT REACTION என்றும் 2 DARK  REACTION என்றும் குறிப்பிடுவர். பெயர் அடிப்படையில் பார்த்தால் நிகழ்வு [1] ஒளியின் உதவியால் நிகழும் LIGHT REACTION என்பது புரியும். ஆனால் DARK  REACTION என்பது இரவில் நடைபெறுவது அல்ல [அந்த நிகழ்வுக்கு ஒளி தேவை இல்லை என்பதால் DARK  REACTION என்று பெயர் வைத்திருக்கின்றனர்].

1 Light  reaction  என்னும் நிகழ்வில் பச்சையம் [குளோரோபில் ] ஒளியை பெற்றதும் ஒரு எலக்ட்ரான் எனர்ஜியால் உந்தப்பட்டு உயர் நிலை அடைந்து, பின்னர் படிப்படியாக கீழே சரியும் போது தான் பெற்ற அதிக ஆற்றலை பிற எலெக்ட்ரா ன் ஏற்கும் பொருளுக்கு கொடுத்து இயல்பு நிலைக்கு வீழ்ந்து மீண்டும்சூரிய ஒளியின் ஆற்றலினால் உந்தப்பட்டு சலனப்பட்டு எனர்ஜியை பரிமாற்றம் செய்து கொண்டே இயங்கும்.இதன் விளைவாக ஒரு நொதி [என்சைம் ] NADPH2 மற்றும் ATP என்ற உயர் ஆற்றல் மூலக்கூறும்[HIGH ENERGY MOLECULE] ம் LIGHT REACTION பலனாக உருவாகும். 

இவ்வாறு தோற்றுவிக்கப்படும் NADPH2, ATP இவற்றைக்கொண்டு DARK REACTION செயல் பாடுகள் நிறைவேற்றப்படும்.

இவற்றைக்கொண்டு கார்பன் கற்றைகளை ஹைட்ரஜன் ,மற்றும்  ஆக்சிஜென்உடன் சேர்த்து இணைத்து கார்போஹைட்ரேட்  உருவாக்கப்படும் அதுவே சர்க்கரை [க்ளுகோஸ் C 6 H 12 O 6] என்ற பொருள்வடிவில்  மாற்ற ப்படும் அது அதிக ஆற்றல் கொண்டது. இப்போது ஒளிச்சேர்க்கை என்ற முழு செயல்பாடுகளையும் கவனியுங்கள். உயிரினங்களுக்கு வேண்டிய கார்போஹைடிரேட் மூன்று பொருள்களை இணைத்து [கார்போன், ஹைட்ரஜன் , ஆக்சிஜன் ] உருவாக்கப்பட்டு சர்க்கரையாக மாற்றப்படுகிறது. ஆகவே தான் கார்போஹைடிரேட் ஆற்றல் மிக்க முக்கிய உணவுப்பொருள் என்ற  அங்கீகாரம் கொண்டது. இந்த நிகழ்வில் முக்கிய உறுப்பினர்கள் பசும் தாவரங்கள் அதிலும் குறிப்பாக பச்சையம் -சூரிய ஒளியை ஏற்று அந்த எனெர்ஜியை பயன்படுத்தி உணவுப்பொருள் உருவாக்கித்தருகிறது. இதன் அறிவியல் கோட்பாட்டினையும் நினைவு கொள்வோம். ENERGY is neither created nor destroyed . 2 But it can be  transformed  ஒளி வடிவம் இப்போது உணவு என்ற கார்போஹைடிரேட் வடிவ மற்றம் பெற்றுள்ளது. ஆக இயற்கையின் ஆற்றல் கோட்பாடுகள் [energy  principles .] முறையாகப்பின் பற்றப்பட்டு , அனைத்து உயிரினங்களுக்கும் பயன் தரும் வகையில் எனர்ஜி சுழற்சி [energy cycle ]அமைதியாக அரங்கேறி உலக உயிரின இயக்கம் சீராக நடைபெறுகிறது. இதற்கான சில பொருளாதாரக்கணக்குகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 

ஒரு தனி மரம் மாதம் ஒன்றுக்கு வெளிவிடும் ஆக்சிஜன் அளவை கணக்கிட்டால் சுமார் 35-50 லட்சம் ரூபாய் மதிப்பு உடையது. இதையே தொழிற்சாலை அமைத்து தயாரித்தால் பல கோடிகள் முதலீடு தேவைப்படும். அதனை இயக்க ஆற்றல் தரும் மின்சாரம் அல்லது எண்ணெய் அல்லது விறகு, கரி என்று மென் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தேவை இல்லாத சப்தமும் நெரிசலும் ஏற்படும்.

 இன்னும் உணவுப்பொருள் தயாரிப்பு என்று இறங்கினால் மூலப்பொருள் பற்றாக்குறை, கடன் சுமை என பல இன்னல்கள் ஏற்படுவது திண்ணம். இவை அனைத்தையும் உயிரினங்கள் வெகு அமைதியாக சப்தமின்றி , மாசு இன்றி பகிர்ந்து மனிதகுல தேவைகளையும் ஒரு நாள் கூட விடுப்பு , வேலை நீறுத்தம் , ஊதிய உயர்வு போராட்டம் என்ற தொழிற்சங்க நடைமுறைகள் இல்லாமல் செம்மையாக ஈடேற்றுகின்றன. அது மட்டுமல்ல அனைத்தும் இயற்கை மூலப்பொருள் ஆதரவில் நடப்பதால் மறு  சுழற்சி என்னும் RECYCLING இயல்பாக செயல் படுவதையும் , THERMODYNAMIC LAWS என்ற வெப்ப இயக்க விதிகளும் பின்பற்றப்பட்டு EXCESS எனர்ஜி என்ற அபாயகர நிலை தோன்றாமல் காக்கப்பட்டு வருகிறது [அதாவது ENERGY DISTRIBUTION =ஆற்றல் பகிர்மானம் முறையாக நடைமுறைப்படுகிறது].

இதில், இன்னொன்றையும் பார்க்கலாம். ஏதோ மதக்கோட்பாடுகளை திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்பன இறைப்பணி என்றெண்ணாமல் இயற்கைப்பணி என்று நிறுவமுடியும். சூரியஒளியையும், பிற வாயுக்கள் [கார்பன்டைஆக்ஸைட், HYDROGEN, + நீர் கொண்டு கார்போஹைடிரேட் தோற்றுவித்தல் ஆக்கல் [PRODUCTION ] எனக்கொள்க.[பசும் தாவரங்கள் ஆக்குபவர்கள்]

2 ஆற்றல் சிதைந்து வீண் போகாமல் அனைத்து உயிரினங்களும் நேரடியாகவோ மறை முகமாகவோ தாவர உணவை உண்டு ஆற்றல் பெற்று தங்களையும் , தங்கள் செயல்களையும் காத்துக்கொள்வது -காத்தல் [பசும் தாவரங்கள் அல்லாத பிற உயிர்கள் -மனிதர்கள் உட்பட - காத்தல் [CONSUMPTION ]-சார்ந்துவாழ் உயிரினங்கள்.இது ஆற்றல் பகிர்மானத்தில் முக்கிய செயல்.

3. அழித்தல் .ஏராளமான மூலப்பொருட்கள், உயிரினங்களின் உடலில்சிறைப்பட்டிருப்பதை வெளியேற்ற அவை இறந்துபட வேண்டும். அவ்வாறு இறந்த உயிர் உடலங்களை -பூச்சி புழுக்கள் பாக்டீரியா இணைந்து வெகு விரைவாக சிதைத்து மூலப்பொருள் வெளியேற்றம் [மீட்டெடுப்பு]  என்ற அழித்தல் செயலுக்கு பங்களிக்கின்றன

இவை எதிர் கால புதிய பிறப்புகளுக்கு மூலப்பொருள் வழங்கி மீண்டும் ஆற்றல் சுழற்சி தொடர்ந்திட வழிவகை செய்வன - இவ்வகை நுண் உயிர்கள் உலக நலனுக்கு இன்றியமையாத DECOMPOSITION என்ற தூய்மைப்பணியை முறையாகவும் முற்றாகவும் செய்து அழுகிய உடல்கள் குவிந்துவிடாமல் காக்கும் அழித்தல் பணியாளர்கள் -நுண் உயிர்கள்[பாக்டீரியா] /பூச்சி புழுக்கள் .

இவ்வாறு இயற்கை தான் படைத்த உயிர்களுக்கு உத்திரவாதமும் பாதுகாப்பும் நல்கி அனைத்தையும் முறையாக ஈடேற்றுவதையே "உயிரினங்களின் பேரியக்கம்' என்ற தலைப்பில் விளக்க முற்பட்டேன். இன்னும்பல தகவல்கள் பகிர்ந்திட வேண்டியன, ஆனால் அன்பர்கள் ஏற்க வேண்டுமே--போதுமய்யா  சயன்ஸ் -ஆளை விடு என்று சொல்லிவிடப்போகிறர்கள் .

நன்றி

அன்பன் ராமன்

 

1 comment:

  1. இருட்டில் சுவாசமும் பகலில் ஒளிச்சேர்க்கையும் நடக்கும்என்றுதான் பலர் நினைத்ததை தெளிவு படுத்திவிட்டீர்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...