Sunday, December 17, 2023

SIR –WE WOULD MEET SOON

 SIR –WE WOULD MEET SOON

சார் -- விரைவில் சந்திப்போம்

இது என்ன? ஒன்றும் இல்லை குண்டூர் சுப்பிரமணி ஒரு ஆபிஸ் வேலையாக திருச்சி வர இருக்கிறான். அந்த மகிழ்ச்சியில் ராமசாமியிடம் போனில் அவன் சொன்னது தான் இன்றைய தலைப்பு அவன் -- ஏன் வருகிறான், கஸ்தூரி ரெங்கனை அனுப்பவில்லை போலும் என்று புரிந்து கொண்டார் ராமசாமி. சரி, சுப்பிர மணி என்ன சொன்னான்? சார் ஒரு 2.--3 நாள் திருச்சியில் இருந்து முடிச்சிக்கிட்டு வா னு பஞ்சாபகேசன் சார் ஏற்பாடு செய்கிறார் .நான் தான் வருவேன் னு நினைக்கிறேன். உங்களையும் மாடசாமி சாரை யும் நேர்ல சந்திக்க ரொம்ப ஆவலா இருக்கேன் சார். ஆனா உங்க வீடு தெரியாதே என்றான் சுப்பிரமணி.

நீ ட்ரெய்ன்ல தானே வருவ , நாங்க உன்னை ஸ்டேஷன்லேயே சந்திச்சுட்டு அப்புறமா வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போறோம் என்று மாடசாமியின் சார்பிலும் சேர்த்து ராமசாமி யே  சொல்லி விட்டு மாடசாமிக்கும் தெரிவித்து விட்டார், அவன் வியாழன் கிளம்பி வெள்ளியன்று காலை 10.00 மணிக்கு திருச்சி ஜங்க்ஷனிலிறங்க மாடசாமி அவனை வாங்க தம்பி னு ஸ்டேஷன் கேன்டீனுக்கு கூட்டி சென்று நல்ல டிபன் வாங்கித்தந்து விட்டு ராமசாமிக்கு போன் போட சரியாக கேப்ரியல் சாரும் வந்து சேர்ந்தார்  .ஹ ஹ் ஹா  வாங்கோ ராம்சாமி , இந்தோ தம்பி யாரூ நம்போ குண்டூர் பையன் -அவன்தான் கஸ்தூரி -சொல்லி பொம்பளே பேர் வச்சிர் ப்பானே அவனிக்கீ தம்பியா இதூ என்று கேட்டார் சுப்ரமணியை பார்த்து. இல்ல சார் தம்பி இல்ல பஞ்சாபிகேஷன் சார்கிட்ட ஸ்டாப் [staff] என்று மாடசாமி சொல்ல ஹஹ் ஹஹ் ஹா என்று எழுந்து நின்று சுப்பிரமணியிடம் கை குலுக்கி -புஞ்சாப் கேசன் சார் நல்லா இருக்கிறாங்ளா, நா ரொம்போ கேட்டே சொல்லுங்கோ என்று வணக்கம் தெரிவித்தார்.கேப்ரியல். ஆ நம்ப சாருக்கு எவ்வளவுமாரியாதை எல்லா ஊர்லயும் என்று வியந்தான் சுப்பிரமணி, நேரே செக்ஷன் போனதும் ஒரு முக்கிய file ஒன்றை மாடசாமியிடன் தந்து ஒரு கடிதத்தையும் யாரும் பார்க்காத போது கொடுத்தான். மாடசாமி கன  கச்சிதமாக  லெட்டரை படித்துவிட்டு செக்ஷன் அதிகாரியிடம் காட்டி விவரம் தெரிவிக்க அவர் சற்று அதிர்ந்தாலும் பரவா இல்லை சார் இவ்வளவு முக்கிய மேட்டரை நம்ப கிட்ட சொல்லி பார்க்க சொல்லியிருக்காங்க , நம்ப நல்லபடியா  செஞ்சு குடுக்கணும் -சரி லெட்டர் எப்படி என்று இழுத்தார் அதிகாரி.சார் ஒரு மெசேன்ஜ்ர் -ரயில்வே ஸ்டாப் தான் கொண்டு வந்திருக்கார்.ஒரு 2, 3 நாள் ல outline பிளான் போட்டு அதே மெஸன்ஜ்ர் கிட்டயே கொடுத்து அனுப்பிடலாம் எனக்கு மண்டே  அல்லது ட்யூஸ் டே தான் டூட்டி வரும் அதுக்குள்ள outline  போட்டு  உங்க கமெண்ட் சேர்த்து அனுப்பிடலாம் சார் என்றார் மாடசாமி. ஓ ஷ்யூர் என்றார் அதிகாரி.   . செக்ஷனில் மாடசாமி அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து , தம்பி தான் எங்களுக்கு குண்டூர்ல எல்லா ஏற்பாடும் பாத்துக்கிட்டாரு, சொந்த ஊரு சேலம் என்றதும் செக்ஷன் டைப்பிஸ்ட் சுந்தரி நான் கூட சேலம் தான் செவ்வாய்ப்பேட்டை என்றாள்  அப்பிடியாக்கா நாங்க குகை.என்றான் சுப்பிரமணி

[உள்ளூர நினைத்துக்கொண்டான் நம்ப பொழப்பே குகை மாதிரி தான் , இந்த பி கே சார் வராமலே போயிருந்தா எங்க குடும்பமே  செத்து சுண்ணாம்பா போயிருக்கும். நமக்கு ஏதோ கடமை இருக்கு போல இருக்கு அதான் நம்பள சாக விடாம காப்பாத்திக்கிட்டே இருக்கார் அனுமார் [கண் மூடி அனுமனை நினைத்துக்கொண்டான் சுப்பிரமணி ] .உடனே க ரெ யின் நினைவு வர மணி பார்த்தான் 12.50,க ரெ வுக்கு போன் போட்டான் -சார் உங்க ஊர் ரயில்வே ஆபிஸ் சூப்பரா இருக்கு.அதிகாரிங்கல்லாம் அன்பா பேசுனாங்க சார். கேப்ரியல் சார் சிரிப்பார்னு சொல்வீங்க இல்ல அதே மாதிரி பயங்கரமா சிரிக்கிறார் சார் -ஆனா நல்ல மனுஷன்.அப்புறம் சார் குடுத்த மேட்டரை மாசடாமி சார் கிட்ட குடுத்துட்டு இப்ப அவங்க ஆபிஸ் ல தான் இருக்கேன்.   ஈவ்னிங் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க -பெரிய மனுசங்க பெரியவங்க தான் சார். பைலை குடுத்துட்டேன்னு -நான் சொன்னதாக பி கே சார் கிட்ட சொல்லிடுங்க சார் - நானே போன் பேசுனா மரியாதைக்குறைவா இருக்கும் கோவிச்சுக்காம சொல்லிடுங்க சார் என்றான் சுப்பிரமணி.

கண்டிப்பா சொல்றேன் என்றான் க. ரெ, அதே போல் சொல்லி விட்டான்.  மணி 3.00 ராமசாமி மாடசாமியை தேடி வர மூவரும்  கேன்டீன் சென்றனர் . ஹஹஹஹ் ஹா என்று சிரித்துக்கொண்டே கேப்ரியல் அல்லாரும் வன்டீன்களா, நம்ப குண்டூர் கெஸ்ட் வந்திருக்காங்க இல்லே அதுனால ஒரு சின்ன பார்ட்டி தறேன்,  அல்லாரும் சாப்ப்டுங்கோ - ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா என்று சிரித்தார். சூடான ஜாமூன், வெங்காய பகோடா, காபி என்று சுவையான பார்ட்டி.. தம்பி   கஸ்தூரி ராஜன் கிட்டே நா   கேட்டேன் னு  சொல்லுங்கோ குட் லக்   என்று கை குலுக்கி கிளம்பினார். கேப்ரியல்

மாடசாமி இடம் ஏதோ சொல்லி விட்டு சுப்பிரமனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார் ராமசாமி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் பார்த்து சுப்பிரமணி வியந்தான் அம்மாடி ரொம்ப பெரிய கோயில் போல என்று எண்ணிக்கொண்டே 1 டஜன் நல்ல வாழைப்பழம் வாங்கிக்கொண்டான் சுப்ரமணி 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...