Sunday, December 17, 2023

MEMORY TRAINING- 2

MEMORY TRAINING- 2

நினைவாற்றல் -சில முயற்சிகள்-2

அப்படியெனில் முறையான அணுகுமுறைக்கு என்ன வழி?                                   ஒரே வழி தான். வகுப்பில் --ஆசிரியர்  விளக்கும்  போது முழு கவனத்துடன் ஈடுபடு வதும், பின்னர் அந்த பகுதியை நேரடியாக புத்தகத்தில் இருந்தே படித்து பொருள் விளங்கிக்கொள்ளுதலும் ஆகும். உடனே இது போன்ற ஆலோசனையை எவனோ ஒன்றுமே அறியாதவன் முன்வைக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு, நேரம் எங்கே இருக்கிறது என்று போருக்கு ப்புறப்பட முயலாதீர்கள்.

நான் சொல்லி இருப்பதை உள்வாங்கி செயல் முறை அறிந்து கொண்டு பயில வழி தேடுங்கள். வீடு வீடாக ட்யூஷன் படிக்கப்போனால் நேரம் இருக்காதுதான். புத்தகத்தையும் வகுப்பையும் கல்விக்களங்களாக  கொண்டு பயில முயன்றால் ஒவ்வொரு நாளும் காலை 3 பாடங்கள் மாலை 4 பாடங்கள் என அன்றாடம்  படிக்க, காலப்போக்கில் புரிதலும் நினைவாற்றலும் மேம்படும், படிப்பில் நாட்டம் அதிகரிக்கும், . ஏனெனில் இப்போது புரிந்துகொள்ளாமல்; மேற்கொண்டு படிப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதனால் புரிதல் முன்னுரிமை பெறுவதுடன், புரிந்துகொண்டு பயில்வதன் மீது நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படும்.

அன்றாடம் படிப்பவருக்கு பாடம் ஒன்றுக்கு அரைமணி நேரம் ஒதுக்கி படித்தாலே போதுமானது. பலநாட்கள் சுற்றித்திரிந்து விட்டு தேர்வுக்கென படிக்க அமர்ந்தால் அச்சமும் ஆத்திரமும் நிச்சயம் தலை தூக்கும்    பிடிப்பில்லாப்படிப்பு வீண் என்பதை நீங்களே உணர்வீர்கள்.இதன் அடுத்த கட்டம் தான் கேள்விகளை ப்புரிந்து கொண்டு விடை எழுதும் திறன், இவை எதையும் மனனம் செய்யாமல் புரிந்து கொண்டு செயல் படப்பட, மார்க் உங்களை நோக்கி வரும். நீங்கள், மார்க்கை துரத்த வேண்டியதில்லை.  அன்றாடம் உள்வாங்கிப்படித்தல் என்பது, மூளையைக்கசக்கிப்பிழியாமல், மென்மையாக தகவல் சேகரிக்கும் வழி முறை என்று உணருங்கள், சிறிது சிறிதாக உள்வாங்குவதால் சுமையோ அழுத்தமோ தோன்றாது. மென்மேலும் கல்வியில் போட்டியிடும் ஆர்வம் வேரூன்றும்

இதனால் நம்மை அறியாமல் சுயமதிப்பீடு செய்து கொள்ளும் பக்குவம் வரும் . பிற அன்பர்க;ளை  விட எனது புரிதலும், புரிதலின் வேகமும் மேம்பட்டுள்ளது என்று உணர்வோம். அதனால் எந்த பாடத்தையும் நேரடியாக புரிந்து கொள்ள முடியும் என்ற ஊக்கமும், அதிக உயரங்களை எட்ட முடியும் என்ற பேரார்வமும் நம்மை இயல்பாக பற்றிக்கொள்ளும். பரீட்சை என்றாலே நடுங்கும் பலவீனம் மறைந்து, பல வித கேள்வித்தாள்களை தேடி பெற்று சுயமாக விடை தரும் ஆரோக்கிய மனநிலை வேரூன்றும்      

அடிப்படை த் தவறு

எதையும் முயன்று பார்க்காமலே யே -இல்லை , எனக்கு வராது, முடியாது என்றெல்லாம் கதவை மூடி விட்டு,எனக்கு மார்க்கு வாங்க வழியில்லை ட்யூஷன் படிக்கிறேன் என்று கிளம்புகிறோம். இதில் ட்யூஷன் எப்படி நமது செயலை மேம்படுத்தும் என என்றேனும் நினைத்தது உண்டா . பலர் ட்யூஷன் படிக்கிரறார்கள் எனவே நானும் ---- என்பது தாழ்வுமனப்பான்மையை வெகு விரைவிலும் ஆழமாகவும்   வேரூன்றச்செய்து ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கை இல்லாத குருடர் நிலையை அடைவோம்.

நினைவாற்றலை செம்மைப்படுத்த சில நடை முறைகள் உதவும்

கற்றதை நினைவு கூர்தல்.

ஒவ்வொன்றையும் வாசகங்களாக ஒப்பித்து மீண்டும் மனப்பாட பிசாசிடம் சிக்காமல்,அறிந்த உண்மைகளை உங்கள் உள்மனதுடனேயே உரையாடலாக சொல்லிப்பாருங்கள். சரியாக நினைவுக்கு வர வில்லை எனில் மீண்டும் புத்தகத்தை பார்த்து நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.  இரண்டொருமுறை இவ்வாறு செய்ய, நினைவாற்றல் மேம்படும்; தொடர்ந்து நினைவில் தங்காமல் இருக்கும் பகுதிகளை எழுதிப்பாருங்கள் இரண்டு முறை எழுதுவது ஐந்தாறு முறை படிப்பதற்கு ஒப்பாகும்.இதற்கென சிலேட்டு பலகை உபயோகித்தால் தவறில்லை..    சில பாடங்களுக்கு படம் வரைய வேண்டிவரும்.

அவற்றை பல முறை சிலேட்டில் வரைந்து வரைந்து மனதில் பதிவேற்றுங்கள்   

இப்படி எந்த கருத்தும் உள்மனதில் குடிகொள்ள, உங்களின் அறிவுத்திறன் விரிவடைந்துள்ளதாக உணர்வீர்கள். இந்த நிலை நோக்கி நகர நகர, எந்த உயர் கல்வியும் நம் வசப்படும் நம்பிக்கை யோடு நேர்மையாக முயலுங்கள். அறிவுப்பொக்கிஷம் உங்களிடம் குடியேறியுள்ளதை அனைவரும் வியப்புடன் ரசிப்பர்.

எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் களம் இறங்குங்கள். களமும் காலமும் நிச்சயம் வசப்படும்                           வெற்றிபெற வாழ்த்துக்கள் .

நன்றி அன்பன் ராமன்


No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...