Tuesday, December 26, 2023

CINE MUSIC----BORN VICTORIOUS

 BORN VICTORIOUS

பிறந்ததும் வெற்றி

இதென்ன பகவான் கிருஷ்ணன் பற்றிய தகவலா? இல்லை -குருடன் ராஜ விழி விழிப்பதும் , பகவான் கிருஷ்ணன் பற்றி நான் எழுத கிளம்புவதும் பெரும்  வேறுபாடற்றவை என நான் அறிவேன். அப்படி எனில் இது 

என்ன ? என்று இருவர் அதிகாலையில் புலம்புகின்றனரே -- என்கிறீர்களா ? அவர்கள் எதற்கும் புலம்பும் ராகம். சரி நம்ம வேலையைப்பார்ப்போம்.

வெற்றி அடிப்படையில் திரைப்படப்பட ப்பாடல்கள் பல வகையின. பொதுவாக வெற்றிப்பாடல்கள் என பல வற்றை குறிப்பிடலாம் ;ஆனால் அவற்றுள் பல உட்பிரிவுகள் உண்டு -அதாவது, காதல் பாடல், சோகப்பாடல், கிண்டல் பாடல் , நடனப்பாடல், போட்டிப்பாடல், பக்திப்பாடல் , டப்பாங்குத்து, குத்துப்பாடல், கிராமியப்பாடல், மேற்கத்திய நடன வகை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 

ஆனால் அவற்றில் சிலவே,  வந்தவுடன் வெற்றி என்ற பேரானந்த எல்லையை தொடமுடியும். எத்துணையோ வெற்றிப்பாடல்கள், நீண்ட நாள் கேட்டபின்னரே வெற்றி வாகைக்குரிய இடத்தை தொட்டன. இதை எந்த ஆய்வின் துணை கொண்டும் விளக்க முடியாது. ஒரு வேளை  அவை படக்காட்சியாக மனதில் இடம் பிடித்த பின்னரே வெற்றி பெருகின்றனவோ என்று எண்ண தோன்றுகிறது.   நீ என்ன பெரிய இசை விற்பன்னனா என்று கோபம் கொள்ளாதீர்.

பொறுமை காத்து பெருமையை அள்ளிய பாடல்  

1 ஒரு உதாரணம் காதலிக்க நேரமில்லை படத்தின் பல பாடல்களும் எல்லார் மனங்களிலும் இடம் பிடித்த பின்னர் மெல்ல மெல்ல பேராதரவரைப் பெற்ற பாடல்நாளாம்நாளாம் திருநாளாம் -சுசீலா -பிபி ஸ்ரீனிவாஸ்  குரல்களில் பீடு நடை போட்ட பாடல் ஆனால் பல நாள் கழிந்த பின்னரே பெரிதும் பேசப்பட்ட பாடல்.

இசை விமரிசகர் சுப்புடு இந்தப்பாடலை மேற்கோள் காட்டி பல வித்வான்களை    குடு மியைப்பிடித்து   உலுக்குஉலுக்கென்று உலுக்கிய சம்பவங்களே இந்த பாடலின் மேன்மைக்கு சான்று விஸ்வநாதனுக்கு இசையில் மண்டையெல்லாம் சூசகம் என்று சுப்புடு சிலாகித்த அமைப்பில் வெளிவந்த பாடல் எனில் பாடல் தரம் பற்றி பேசவும் வேண்டுமோ?

ஒப்பனை, உடை தேர்வு, வண்ண ஒளிப்பதிவு, கௌரவமான காதல் என எதிலும் குறை இல்லாத  இந்தப்பாடல் வெற்றிபெற நெடு நாள் காத்திருந்தது விளக்க வொண்ணா அதிசயம்.    எவரேனும் அறிந்தால் சொல்லுங்கள் கார ம் என்னென்று?

 பாடலுக்கு இணைப்பு அதன் நளினத்தை நினைவு கூர  

https://www.google.com/search?q=YOUTUBE+NAALAM+NAALAM+THIRUNAALAM+VIDEO+SONG&newwindow=1&sca_esv=593697585&sxsrf=AM9HkKl0G6xm29PVPTeezpH7நாளாம்நாளாம் திருநாளாம்

வந்தவுடன் வெற்றி வகையின

2 கண்ணன் என்னும் மன்னன் பேரை -வெண்ணிற ஆடை -1965 -கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி -பி சுசீலா

அதி அற்புதமான காட்சி அமைப்பு, வந்தவுடன் வெற்றிப்படிக்கட்டில் கால் பதித்த பாடல். படத்திற்கு முழு முதல் AMBASSADOR  இப்பாடல். இலங்கை வானொலியில் 1964முதல் 1இரண்டு ஆண்டுக்கு இப்பாடல் ஒலிக்காத நாளே இல்லை. மிகவும் எளிய சொல்லாடல். ஆனால் ஒவ்வொரு சொல்லாக பாடப்படும் வெகு சில பாடல்களில் இது தலையாய பாடல் எனில் மிகை இல்லை. ஒவ்வொரு சொல்லும் சற்றே இசைபாவத்துடன் பாடப்பட்டதனால் கேட்க மிகவும் குதூகலமாக அமைந்த பாடல். நறுக்குத்தெரித்த இசை ;ஒவ்வொரு சொல்லுக்கும் இசை வழங்கப்பட்டு, சில சொற்களின் பின்னனணியில் பியானோ சிணுங்குவதை எவ்வளவு நேர்த்தியாக அமைத்துள்ளனர் இசை அமைப்பாளர்கள் வி-ரா. அது மட்டுமா பாடல் முழுவதும் இசை கருவிகள் கூட்டாக ஒலிக்காமல் பெரும்பாலும் தனித்தே ஒலித்து  அழகூட்டப்பட்டுள்ளது . மேலும் ஏதோ நடன அசைவுகளுக்கெனவே அமைக்கப்பட்ட பாடல் என்பது போல ஜெயலலிதா பின்னி எடுத்துள்ளார் பாடல் முழுதுதும். பாடலில் நஞ்சப்ப ரெட்டியாரின் குழல் ஒலி தனி   வசீகரம் அதிலும் பாடல் நிறைவடையும் போது கருவிகள் வேறோர் உலகில் மிதப்பது போன்ற ஒலிக்கலலவை. பி. சுசீலா நீங்கலாக ஏனையோயோர் அனைவரும் இறைவனடி சேர்ந்த நிலையம் பாடல் உயிர்த்துடிப்புடன் பவனி வருவதை மறுக்கல்க இயலுமோ?

https://www.dailymotion.com/video/xxx6hp  KANNAN ENNUM

3 முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை 1966 ]TMS -P SUSEELA எம் எஸ் வி - கண்ணதாசன்                                                                                                                                              பிறந்த அன்றே பலரையும் கொள்ளை கொண்ட வசீகரம் இப்பாடல். சொல் நயம், பொருள் கண்ணியம்,  மற்றும் இசையின் அதீத மகோன்னதம் மற்றும் இடை இசையும் குழலின் ஒலி யும் பின்னிப்பிணைந்த மலைக்க வைக்கும் அற்புதம். மேக்-அப் இல்லாத நடிகர்கள் எனினும் அமோக இசைக்கோலம் அள்ளித்தெளித்த கலைஞர்களின் பங்களிப்பு இன்றும் நின்று பேசும் கம்பீரம் இப்பாடல்

https://www.google.com/search?q=MUTHUKKALO+KANGAL+VIDEO+SONG+l&newwindow=1&sca_esv=593716544&sxsrf=AM9HkKnZQst2aSVW4miTb5mptv2mYPDC1A% MUTHUKKALO KANGAL

4 பௌர்ணமி நிலவில் கன்னிப்பெண் -1969 -வாலி, எம் எஸ் வி, SPB , ஜானகி

இளமைத்துள்ளாள் நிறைந்த பாடல். பாடலின் சிறப்பு என்னவெனில், சொல்லுக்கேற்ற இசை நடை. பௌர்ணமி போல பாடல் துவக்கமே உச்சியில் இருந்து கீழ்நோக்கிப்பாய்வதை ப்பார்க்கலாம். அதே போல தண்ணீர் அலைபோல் என்ற இடத்தில் இசை நீரோடைபோல் வளைந்து நெளிந்து பயணிக்க , பிற இடங்களிலும் சொல்லுக்கேற்ற பாவம் வெளிப்படும் மேன்மை என எம் எஸ் வி யின் அதகளம் பாடல் நெடுகிலும். அதே போல் பொன்னோவியம் என்ற இடத்தில் இசையின் பரிமாணம் வீறுகொள்வதை கவனியுங்கள். ஜானகியும் SPB யம் காதலித்துவிட்ட நெருக்கம்பாடலில் மிளிர்வதை  .காணலாம் . இதெல்லாம் அத்திப்பூத்தவகை பாடல்கள் . இணைப்பு 

https://www.dailymotion.com/video/xh54vd POURNAMI NILAVIL

தொட்டதும் வெற்றி

5 இயற்கை என்னும் இளைய கன்னி-1969 சாந்தி நிலையம் [1969] SPB -பி. சுசீலா - கண்ணதாசன் -எம் எஸ் வி

ஆம் திரையில் அறிமுக மான பாடலிலேயே வானுயர பட்டொளி வீசிய          பாடல் கள் சில உண்டு.

அவ்வரிசையில் SPB அவர்களின் [1969] இயற்கை என்னும் இளைய கன்னி ஒரு சிறப்பான இடம் பெற்றதை மறக்க இயலுமா?

சாந்தி நிலையம் [1969] SPB -பி. சுசீலா - கண்ணதாசன் -எம் எஸ் வி வழங்கிய உன்னத டூயட். இன்றளவும் ரசிக்கப்படும் வசீகர குரல் மற்றும் இசை நளினம் மற்றும் சிறப்பான இசைக்கட்டமைப்பு கொண்ட பாடல் .

இதுவும் ஒரு மார்க்கண்டேய வகை சரக்கு தான்

எப்போது கேட்டாலும் இளமை -கேட்பவர்க்கும் சேர்த்துதான்

https://www.google.com/search?q=IYARKAI+ENNUM+ILAIYA+KANNI+VIDEO+SONG&newwindow=1&sca_esv=593716544&sxsrf=AM9HkKnjluq-QY_4wr8zfHbQ5uJe8Uvh IYARKAI ENNUM

6 மல்லிகை என் மன்னன் மயங்கும் [தீர்க்கசுமங்கலி -1974] வாலி- எம் எஸ் வி வாணி ஜெயராம்

வாணியின் முதல் தமிழ் திரைப்படப்பாடல் ஆயினும் கொடிகட்டிப்பறந்த குரல் இனிமை , இசையில் முற்றிலும் புதிய அமைப்பில் எம் எஸ் வி காட்டிய பெரும் ஆளுமை இப்பாடலில். ஆம், பாடலின் துவக்க இசை நாம் அறிந்திரா அமைப்பில். இந்தப்பாடலை வெற்றிப்பாடல் ஆக்கியதென்னவோ குரலும், இசையும் தான். பாருங்கள் மல்லிகை என்ற சொல்லை மல் ....லிகை இன்று விலக வைத்து ஒரு போதை கொள்ளவைக்கும் ஒலி அமைப்பும் முதலில் என் மன்னன் ..... மயங்கும் எனவும் இரண்டாம் முறை

என் மன்னன் மயங்கும், என்று நெருக்கம் காட்டியும் பாட வைய்த்துள்ளார்.

இவ்வேளையில் உன் தேவை என்னவோ --என்னும் இடத்தில் முத்துராமன் விஜயாவின் காதில் ஏதோ கிசுகிசுப்பதாக அமைத்து அது என்ன என்று நம்மால் உணர முடிகிறது -இப்படித்தான் நடுத்தர வயது தம்பதியினரை நடிக்க வைக்க முடியும். டைரக்டர் [ACT என்று நினைக்கிறேன்] வெற்றிகண்டுள்ளார்.

அதே போல நம் இல்லம் சொர்க்கம்தான் என்ற இடத்தில் பரவசத்தின் வெளிப்பாடாக DRUMS கருவி துடிப்பாக இயங்குவது என பல நுணுக்கங்களை க்கொண்ட பாடல , வெற்றியிலேயே பிறந்தது என்றே சொல்லலாம்.

கேட்டு ரசியுங்கள்

https://www.google.com/search?q=MALIGAI+EN+MANNAN+MAYANGUM+VIDEO+SONG&newwindow=1&sca_esv=593716544&sxsrf=AM9HkKkNKhQEotaqFLi2B2ZQnOYl0_Pw MALLIGAI

இது போல் பல ஆக்கங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. சந்தர்ப்பம் வாய்த்தால் பேசுவோம்.

நன்றி                            அன்பன் ராமன்

1 comment:

  1. அபாரமான அலசல், விளக்கம், வெற்றிக்கொடி கட்டிப் பறக்கும் பாடல்கள் பற்றி. MSV பாடல்கள் எல்லாமே தனிரகம் என்றாலும், வெற்றி உடனேயா அல்லது நாள் கழித்தா என்ற தங்கள் விவரம் interesting. நன்றி.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...