Sunday, December 17, 2023

PHOTOSYNTHESIS- BASIC FACTS

 PHOTOSYNTHESIS- BASIC FACTS

ஒளிச்சேர்க்கை - அடிப்படை உண்மைகள்

"ஒளிச்சேர்க்கை "இந்தச்சொல் - அறியாதவர் அநேகமாக இலர் எனலாம். ஆனால் அதன் செயலோ பொருளோ பலருக்கும் தெளிவாக ப்புரியாத ஒன்று என்று நம்பலாம். போகட்டும் இப்போது நாம் அறிய வேண்டுவது என்ன?

 பின் வரும் கருத்துகளை மனதில் நன்றாக நிறுத்துங்கள். இயன்ற அளவு எளிய சொற்களில் விளக்க முயல்கிறேன். அடிப்படைப்புள்ளியில் இருந்து தொடங்கினால்  தான் , இந்த நிகழ்வின் மகத்துவமும் .இயற்கையின் விரிவான செயல்திட்டத்தின் மகோன்னதமும் விளங்கும் . நாம் இதுகாறும் பேசிவந்த ஆற்றல் [எனெர்ஜி] என்பது உண்மையிலேயே என்ன என்ற ஒரு தெளிவு பிறக்க வாய்ப்பும் ஏற்படும் .

இவற்றை விளங்கிக்கொள்ள சில சொற்களை இனம் காண்பதும் இன்றி அமையாத ஒன்று.அவற்றை நிச்சயம் பெயரவிளிலேனும், நாம் அறிவோம்.      ஆம் அவை கார்போ ஹைட்ரேட், ப்ரோடீன் , FAT [கொழுப்பு], வைட்டமின் என்பன.இவை ஒவ்வொன்றுக்கும் உயிர் வாழ் உயிரினங்களுடன்   தொடர்புடைய நீண்ட நெடிய வரலாறு உண்டு. இவற்றில் கொழுப்பு/ப்ரோடீன்மற்றும்   கார்போஹைடிரேட்டிலிருந்தும் நேரடியாக ஆற்றலை பெறுகின்ற திறமை உயிரின ங்களுக்கு நிறைய வே உண்டு. ஆனால் கீழ்நிலை வகை உயிரினங்கள் , பிற அவற்றினும் சிறிய விலங்கு / தாவரப்பகுதிகளை உட்கொண்டு தேவையான எனெர்ஜி [ஆற்றலை]ப்பெறுகின்றன. .

 இவ்வாறு, உண்பதும் உண்ணப்படுவதும் உயிரினங்களிடையே அன்றாட நிகழ்வு. இந்த அமைப்பே உணவுச்சங்கிலி   [FOOD CHAIN ] என்று அறியப்படுகிறது.  ஆயினும், கார்போ ஹைட்ரேட்  வழியே ஆற்றலைப்பெறவே தாவர உணவு வழி செயகிறது. பிற  வகை ப்ரோடீன் உணவுகளை விட பெரும்பாலும் உணவுதான்யங்கள் , பசும் புல் , கீரை வகைகள் என ஆற்றலைத்தரும் உணவாக மனிதர்க்கும் , விலங்குகளுக்கும் தாவரங்களே உதவுகின்றன.  அது ஏன்?

 பசும்  தாவரங்கள் மட்டுமே கார்போஹைடிரேட் வகை உணவு உற்பத்திக்கென தேவையான அமைப்புகளை உடையவனே. அதில் முக்கிய உறுப்பு, பச்சையம் என்னும் CHLOROPHYLL ஆகும். பிற நிறமிகள் [Pigments]  சூரிய ஆற்றலை [சோலார் எனர்ஜியை] ஈர்த்துஅறுவடை செய்து,   பச்சையத்திற்கு வழங்கி உதவும் ஆன்டெனாக்களாக செயல் படுகின்றன.

இவ்வாறு பல அலை வரிசைகளில் வரும் ஒளியை வெவ்வேறு அமைப்புகள் மூலம் தாவரங்கள் பெறுகின்றன. அதை பயன்படுத்தி தானியங்களின்வடிவில்   கார்போஹைட்ரெட் உருவாக்கி சேமிக்க, அதையே நாம் உணவாக உட்கொள்கிறோம் . தானிய உணவு முக்கியமான ஆற்றல் வழங்கும் அமைப்பு [STAPLE FOOD] ,பிற ப்ரோடீன் வகைகள் உடல் வளர்ச்சிக்கும், வைட்டமின்கள் உடல் உறுப்புகளின் முறையான செயலுக்கும் உதவுகின்றனகொழுப்பு சத்து பால் நெய்,சில வகை எண்ணெய்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் பசும்  தாவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கார்போஹைடிரேட் என்பது என்ன?

அதன் பெயரை ப்பாருங்கள், கார்பன் [C], ஹைட்ரஜன்[H] , ஆக்சிஜன் [O ]  இந்த மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்ட பொருள் -என்பதை உணர்ந்து கொண்டால் போதும். இவற்றை இணைக்க என்ன தேவை எனில் இணைப்பு விசை என்னும் பாண்ட் [BOND]. ஒவ்வொரு இணைப்பு உருவாக்கு வதற்கும்   ஆற்றல் [எனர்ஜி] தேவை. அந்த எனர்ஜி -சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. நீர் [WATER =H2O]]மூலக்கூறுகளை பிரித்து ஹைட்ரஜன்  [H ] பிடிக்கப்பட்டு காற்றில் திரியும் [CO2]கார்பன்டை ஆக்ஸைடின் .கார்பன் மூலம் [C ]தனை பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்படுவதே கார்போஹைடிரேட் [CHO] இது ஒன்றோடு ஒன்றை இணைப்பது SYNTHESIS என்னும் செயல். இதை நிறைவேற்ற சூரிய ஆற்றல் [ ஒளி = LIGHT =PHOTO ] பயன்படுத்தும் நிகழ்வு தான் PHOTOSYNTHESIS என்ற உணவுப்பொருள் உருவாக்கும் செயல். அதே நேரம் கார்பன்டை ஆக்சைடில் இருந்த ஆக்சிஜன் [O 2] பகலில் வெளியேறி காற்றில் கலந்து, நாமும் பிற விலங்கினங்களும் சுவாசிக்க  பெரிதும் உதவு கிறது. இவ்வாறு கார்பன்டைஆக்ஸைடு சிதைக்கப்பட்டு காற்று மாசு [AIR POLLUTION] மட்டுப்படுத்த பசும் தாவரங்கள் அமைதியாக செயல் புரிகின்றன.

இது போல் ப்ரோடீன், கொழுப்பு,ஹார்மோன் களை  உருவாக்கும் இயக்கங்கள் முறையே proteinsynthesis , lipid biosynthesis மற்றும் hormone synthesis pathways என்று வெவ்வேறு அமைப்புகள் உயிரினங்களில் சிறப்பாக இயங்குவது இயற்கையின் விரிவான பரிணாம வளர்ச்சிக்கு சான்று.

தொடரும்

அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...