Sunday, December 17, 2023

' VEDU PARI’

VEDU PARI’

வேடு பறி

இது என்னடா தலை வேதனை? என்கிறீர்களா? கவல வேண்டாம் கதையைப்படியுங்கள். காலை மணி 8.30

டம டம என்று கதவை தட்டி அம்பு அம்பு என்று குரல் ஒலிக்க, உள்ளிருந்து இப்பவே என்ன அம்பும் வில்லும் வேடு பறி க்கு இன்னும் நாள் இருக்கே -ஐயோ ராமா என்று அங்கலாய்த்து "இந்தாப்பா, இங்கல்லாம் வில் அம்பு யாரும் வாங்கமாட்டா, நீ கோபுரத்துக்கு வெளித்தெருக்கள்    போய் விசாரி கொஞ்சம் பேர் வாங்குவா -போப்பா என்று குரல் வந்தது. அட ச்சீ கதவைத்திற என்று வெளியில் இருந்து குரல் உள்நோக்கி ப்பாய -- எவன் அவன் அடச்சீயாமே -வெளக்கமாறு பிஞ்சிடும் எவண்டா நீ என்று பாய்ந்து வந்து கதவை திறந்தவள் நிலை குலைந்தாள் - ஐயோ நீங்களா முன்ன பின்ன யோசிக்காம பேசிட்டேன் கோவிச்சுக்காதீங்கோ -சாரி சாரி என்றாள்.  சாரி சாரி னு இப்பிடி நைசா புடவைக்கு அடி போடறயாக்கும் என்றார் கணவர்.

 தெரியாதா இந்த கஞ்ச பிரபுவை -கர்சீப் வாங்கறத்துக்கே 3 நாள் 3 நாழியும் தொங்கணும்- இந்த அழகுல சாரியாவது ஒண்ணாவது.- ரெங்கா நீதான் கண் தெறக்கணும் என்று புலம்பினாள் Mrs அம்புஜம் ராமசாமி.

வந்தவர் வேறுயாருமல்ல குண்டூர்-returned ராமசாமி என்ற கழுகுதான்.

காபி வேணுமா டிபன் வேணுமா அப்பிடீனெல்லாம் கேக்கத்தெரியாது,   வில் அம்பு, சாரி னு தெலுங்குமந்திர வாதி மாதிரி பேச்சு-- அதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல, என்று கிண்டல் செய்தார் ரா சா.    .

அது சரி போன வேலை என்னாச்சு, மீட்டிங் முடிஞ்சுதா அதெல்லாம் சொல்ல 100 நாமாவளி பாடணும் இந்த அழகுல தெலுங்கு மந்திரவாதின்னு 'பட்டம்' வேற பொழுது விடிஞ்சதும் அதுவுமா என்றாள் அம்ஜம். . அய்யாவை என்ன நெனச்ச இதோ பார் என்று ஒரு அட்டையை எடுத்து வெட  வெடன்னு  ஆட்டினார் ரா.சா. சர்ரென்று தனது இடுப்பில் இருந்து spectacle case spectacular ஆக உருவிய அம்ஜம், மூக்கின் முனையில் கண்ணாடியை பொருத்தி 'let me see ' என்று அட்டையை நோட்டம் விட்டு-- ப்பூ  இதுதானா?  உங்களுக்கு"பாரத ரத்னா" வே தரலாம்.

என்ன "பாரத் ரத்னா"வா என்று அதிர்ந்தார் ராமசாமி.

Yes - For being THE BEST EAGLE of the  Nation என்றவள் but  நீங்க eagle vulture -GOD KNOWS என்று கிண்டல் அடித்தாள் . ஒன்னை எப்பிடி மாட்டிவிடணும் னு தெரியும் --இரு ஒன்னை என்று கருவினார் ராமசாமி   

இன்னிக்கு ஆபிஸ் போக வேண்டாமா இப்பிடி கதை பேசி நாழி ஆய்டப்போறது என்றாள் அம்ஜம்.,இன்னிக்கு 2 மணிக்கு அப்புறம் தான் ஆபிஸ் .மெதுவாக போய்க்கலாம் என்றார் ராமசாமி. நான், ஒரு 1 மணி நேரம் தூங்கப்போறேன் என்று கண்ணை கசக்கி கொட்டாவி விட்டார்          ரா சா இந்தாங்கோ காபி சாப்பிட்டுட்டு தூங்குங்கோ என்று காபி தந்தாள் அம்ஜம். அடுத்த 5 நிமிடங்களில், ரா சா கொ ர்ர் கொ ர்ர் என்று முழங்கினார். நன்கு தூங்கி 12.10க்கு எழுந்தார் ரா சா.

நேரே போய் ஒரு குளியல் போட்டார். 12,45க்கு சாப்பிட த்துவங்கினர். ஆமாம் அவனைப்பாத்தேளா? என்றாள் அம்ஜம்.

 எவனை ? ரா  சா  ..ஐயோ அதான் ன்னா அந்த 2400/- மாமியோட பிள்ளை. ஆங் பாத்தேன் பாத்தேன் --ரா சா

என்ன சொல்றான்? --அம்ஜம் .

 பொய் சொல்றான்என்றார்.   ரா.சா.                                                                            பொய்யா? என்றாள் அம்ஜம். ஐயோ நம்பவே முடியல்லியே என்றாள். ‘வேற ஒண்ணும் இல்லை     "கிளிக்கு ரெக்கை மொளைச்சுடுத்து னு ஒரு சினிமாவில வருமே அது மாதிரி அவனுக்கு ரெக்கை மட்டும் இல்ல இன்னும் என்னவெல்லாமோ மொளைச்சுடுத்து -அப்படிதான் தெரியறது. என்றார் ராமசாமி.

அப்படி என்ன பொய் சொன்னான் என்றாள் அம்ஜம் . அவன் எந்த ஊருக்குமே போகலியாம் தீபாவளிக்குக்கூட அப்பிடினு  ஓங்கி புளுகறான்

நீங்க சொல்லவேண்டியது தானே, நீ லோ லோ லோனு அண்ணாநகர்ல திரிஞ்சுண்டு தெருத்தெருவா சினிமா ஹீரோ மாதிரி அலைஞ்சு ஒருத்தி  தலை விரிச்சுண்டு பிடாரி மாதிரி இருந்தவளை விஜி விஜினு கத்த அவ ஹை னு கையை ஆட்டிட்டு 'போடானுட்டு போய்ட்டாளே -நானும் அம்புஜமும் பஸ்ஸுக்குள்ளேர்ந்து   பாத்தமே னு.

அப்படி எல்லாம் சொன்னா --ஐயோ தெரியாம போச்சே --உங்களையே கூட்டிண்டு அவாத்துக்கு வழி தேடாம போயிருப்பேன் னு வீர வசனம்  பேசுவான் என்றார் ராமசாமி. அதுனால, எப்பிடி தெரியும் னு சொல்லாம டேய் பூராவும் தெரியும்டானு அப்பப்ப புளியை கரைக்கணும்.                    பிராமதமா பேசற-- எப்பிடி ஒருத்தனுக்கு, புளியை கரைக்கணும் னு தெரியலியே உனக்கு என்றார் ராமசாமி. அப்பிடீன்னா- இப்ப அவன், கதி கலங்கிண்டு இருக்கான் னு சொல்லுங்கோ. இப்பதான் புரியறது உங்களுக்கு என் இந்தப்பேர் வந்ததுனு. கொஞ்ச நாளைக்கு திண்டாடட்டும் அப்ப தான் சரியாகும்

அந்த ஊர்ல அவனுக்கு friend னு யாராவது உண்டோ?   ரொம்ப கஷ்டம் பாவம்தான் என்றாள் அம்ஜம்

அப்பிடியெல்லாம் இல்லை, சுப்பிரமணி னு ஒரு தமிழ்ப் பையன் இவனோடயே இருக்கான். ரயில்வே லே சாதாரண உத்யோகம் ஆனா பயங்கர கெட்டிக்காரன் நேர்மையானவன் .நேத்திக்கு சாயங்காலம் இந்த கஸ்தூரி ரெங்கனுக்கு உலகம் புரியல்ல சார் நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவரோட தப்பை எல்லாம் மன்னிச்சுடுங்க சார் னு கெஞ்சி கால் விழுந்து நமஸ்காரம் பண்ணி என்னையே கலங்கடிச்சுட்டான். என்று தழுதழுத்தார் ராமசாமி.  ஓஹோ படிச்ச பையன் போல இருக்கு என்றாள் அம்ஜம். அதெல்லாம் இல்ல ஆனா உலக அனுபவம் ரொம்ப இருக்கு, அவனோட இருக்கற வரைக்கும் கஸ்தூரி ரெங்கனுக்கு நல்லது தான். என்றார் ராமசாமி.

நம்ப ஊர்து தான் பித்துக்குளியாக்கும் துளியும்யோசனையே இல்லாத  பிராமண பித்துக்குளி  -அம்மாவும் பிள்ளையும் சரியான அம்மாஞ்சி க்கூட்டம் 2400/- ரூவா இங்கயே வராதே னு ஒரே கரகாட்டம் என்று வாயை  மூடிக்கொண்டு சிரித்தாள் அம்ஜம்.

இப்போது புரிகிறதா கஸ்தூரி ரெங்கனின் பொய் ஏன் ராமசாமியிடம் செல்லுபடி ஆகவில்லை என்று.

நன்றி

அன்பன் ராமன் ராமன்


2 comments:

  1. கழுகு எங்கும் போகவில்லை
    திரும்பி பறந்து அம்புஜத்தைப்பார்க்க வந்துடுச்சு

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...