Sunday, December 17, 2023

MEMORY TRAINING

 MEMORY TRAINING

நினைவாற்றல் -சில முயற்சிகள்

அனைவரும் ஆண் பெண் வேறுபாடின்றி, ஏங்குவது -நினைவாற்றல் -ஐயோ எனக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கிறதே இதை சரி செய்ய இயலுமா -அல்லது எல்லாவற்றையும் மறந்து கொண்டே இருப்பேனா-- ஒன்றும்புரியவில்லையே என்ற மிரட்சியோடு தான் [நான் உள்பட] வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது அடிப்படையில் மன ஓட்டம் தானே அன்றி, இதுவே நம் நிலை அல்ல.                             ஆமாம் பேசவந்துவிட்டான், -இவனுக்கே நினைவாற்றல் குறித்த மிரட்சி இருக்கிறது -என்று விலகி ஓடாதீர்கள்.              நினை வாற்றல் என்பது இயற்கையின் கொடை அன்று-மாறாக நாம் எடுத்த முயற்சிகளின் பிரதிபலிப்பே. நீ பேசுவதுஒன்றும் புரியவில்லை, என்று தப்பிக்கப்பார்க்காதீர்கள். இதுவும் ரத்த பரிசோதனையை நாளை என்று தள்ளிப்போடுவதும் ஒன்றே தான். நமது குறைபாடுகள் நமக்கே கசப்பானவை; இதுதான் எதையும் தள்ளிப்போடச்சொல்லும் ஆழ்மனக்கோளாறு.         பலவற்றையும் எளிதில் மறந்துவிடும் நாம் "இந்த தள்ளிப்போடுதலை" மறவாமல் கடைப்பிடிக்கிறோமே -அது எப்படி? . .  

 நினைவாற்றலின் ஆதாரமே நமது ஈடுபாடு அல்லது interest எனும் ஆர்வத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் ஒரு செயல் திறன் தான். அதே சமயத்தில் இந்த ஆர்வத்துடன் 'புரிதல்' என்ற அடிப்படை தேவையும் ஒன்றுபடும் போது மறதி குறையும்,நினைவு அதிகரிக்கும்.

ஐயோ ஏன் குழப்புகிறாய் என்று சிலர் அலறுவது தெரிகிறது. நினைவாற்றல் என்பது," விதிக்கப்பட்ட" ஒன்று அல்ல.[It is not destined to be so].

பலவற்றிலும் 'உதவாக்கரை' என்று குடும்பத்தினராலேயே உதாசீனம் செய்யப்பட பையனோ /பெண்ணோ ஏதோ ஒரு துறையில் கால்பதித்து பலரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனரே அது எப்படி. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். நம்மவர்க்கு சினிமாவை சொன்னால் மண்டையில் எளிதாக ஏறும் என்ற தாரக மந்திரத்தை அறிந்தவன் தான் அடியேனும்.

ஆகச்  சிறந்த திறமைசாலிஎன்று   நீங்கள் மதிக்கும் ஒரு சினிமா நபரின் கல்வித்தகுதிகள் யாவை அவர் சினிமாவில்/அந்த குறிப்பிட்ட துறையில்  MBA பெற்றவரா அல்லது ஏதேனும் பயிற்சிப்பட்டறையில் தன்னை தயார் படுத்திக்கொண்டு வந்தவரா/. இருக்கலாம் சில துறைகளில் இந்த பயிற்சி தவிர்க்க வேண்டிய தவறுகளை தவிர்த்து , உருப்படியான செயலாக்கத்தை போதிக்கும் -நான் மறுக்கவில்லை. குறிப்பாக ஒளிப்பதிவு த்துறை. அது போன்ற தேர்ந்த ஞானம் பெறாமலேயே உலகினரை வியக்கவைத்த ஒளிப்பதிவாளர்கள்-எவ்வாறு தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள் என்று யோசியுங்கள்.

அதற்கும் நினைவாற்றலுக்கும் ஏன் / என்ன தொடர்பு   என்போர் கவனிக்க-- -தொழில் களம் -சமையல் உள்ளிட்ட எதிலும் சமாளிக்க வேண்டிய இன்னல்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். நினைவாற்றல் சரியாக இல்லாமல் இன்னல் களைவது எளிதன்று என்பதை காட்டிலும் புதிய குழப்பங்கைளை தோற்றுவிக்கும் மகத்தான ஆற்றல் கொண்டது. வெற்றி ஈட்டிய எவரும் அந்தந்த துறை சார்ந்த தெளிவான நினைவாற்றல் இன்றி பரிமளிக்க முடியாது. அவ்வாறு இருக்க கல்விக்கு மட்டும் குறுக்கு வழியில் ட்யூஷன் படித்து வெற்றி ஈட்ட முடியுமா?

மார்க் வங்குவதே வெற்றி என்று நினைப்போருக்கு இதை புரிந்துகொள்ள இரண்டொரு பிறவிகள் தேவைப்படலாம். .

அப்படி  எனில் நினைவாற்றல் வயப்படவும், வளப்படவும்    வழி முறைகள் உளவா ? எனில் உண்டு என்பதே யதார்த்தம்.

இதற்கான அடிப்படை தேவைகள் சில 1. குழப்பம் இல்லாத நிதானமான அணுகுமுறை 2. எதையும் புரிந்துகொள்ளாமல் ஒரு அங்குலம் கூட தாண்டிச்செல்லாத சுய கட்டுப்பாடு 3. புரிந்துகொள்ள த்தேவையான எந்த முயற்சியையும் விடாமல் முயலுதல் 4, எதுவாயினும் நிர்ணயிக்கப்பட்ட பாடப்புத்தகத்தை நேரடியாக படித்து புரிந்து கொள்ள பரிபூரண முயற்சி.  இன்றேல் அது பறி போன முயற்சி ஆகும் நினைவில் கொள்க. [நோட்ஸ் என்னும் அரைகுறை செய்தியை நம்பி காளமிறங்குதல் -மண் குதிரையை நம்பி ஆற்று வெள்ளத்தில் இறங்குவதையும் விட மணல் குதிரையை நம்பி ஆற்று வெள்ளத்தில் இறங்கியது போன்ற, மோசமான நிலையை ஏற்படுத்தும்]. சரி, முறையான அணுகுமுறை தான் என்ன?                     அடுத்த பதிவில், காண்போம்.

நன்றி                                          அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...