Sunday, December 17, 2023

MSV-- THE SINGER

 MSV-- THE SINGER

எம் எஸ் வி என்னும் பாடகர்

மெல்லிசை மன்னர்  எம் எஸ் விஸ்வநாதன் ஒரு மாபெரும் இசை ஆளுமை என்பதை பலரும் அறிவோம். இசையில் -திரை  இசையில் அவரின் பங்களிப்பு மகத்தானது . அதையும் கடந்து அவர் தமிழ்திரையின் இசையில் அநேக இசைக்கோலங்களை களப்படுத்தி 1958 முதல் தொடர்ந்து பு துமைகளை அள்ளி  வழங்கிய இசை வள்ளல் எனில் மிகை அல்ல. அவ்வகையில் அவர்காலத்திய தொழில் நுட்பம் மிகவும் குறைந்த வசதிகள் கொண்டிருந்தது , வெட்டி ஒட்டும் முறைகள் செய்ய வாய்ப்பே இல்லை. எதுவும் தவறினால் மீண்டும் முதலில் இருந்தே அனைவரும் தத்தம் பங்கினை ஆற்றவேண்டும்.அனைவரும் ஒரே களத்தில் -இசைக்குழு, பாடகர் என்றெல்லோரும் துவக்கம் முதல் பாடலின் இறுதி வரை இருந்து செயல் பட வேண்டும். பின்னர் வந்து இடைச்செருகல் செய்து பாடலை உருவாக்க முடியாது. always in flesh   and blood என்ற ஒரே வழிமுறை தான். இப்படி பாடிப்பாடி மெருகேறி குரல் மற்றும் சிந்தனா வளம் காரணமாகவே 60-65 வயதினைக்கடந்துவிட்ட  பாடல்கள் கூட இன்றளவும் பொலிவு குன்றாமல் பரிமளிப்பதைப்பார்க்கலாம். மற்றுமோர் செயல் முறை அந்தக்காலத்தில் --இசை அமைப்பாளர்கள் தாங்களே பாடிக்காட்டி பாடகர்களுக்கு பயிற்சி தருவர். தொடர்ந்து பாடி மெருகும் நளினமும் அடையாமல் பாடல் பதிவிற்கு போக மாட்டார்கள்.  அந்த வகையில் எம் எஸ் வி இடம் பாடிய கலைஞர்களின் ஏகோபித்த கருத்து யாதெனில் எம் எஸ்வி யின் பாடியதில் 40% அளவிற்குத்தான் எங்களால் பாட முடிந்தது. அவ்வளவு பாடினாலே பாடல் பெரும் வெற்றி அடைந்துவிடும் என்று கூறுவதை நாம் அறிவோம்.

இவ்வாறு இருக்க எம் எஸ் வியே குரல் கொடுத்துப்பாடினால்? என்ற ஆசை எல்லா தயாரிப்பாளர்களுக்கும் உண்டு, ஆனால் லேசில் பிடி கொடுக்க மாட்டார் எம் எஸ்வி.

1 சோ எம் எஸ் வி யை ஏமாற்றி , சீட்டுக்குலுக்கி போட்டு பாட வைத்த பாடல் முகமது பின் துக்ளக் படத்தின் டைட்டிலில் இடம் பெற்ற அல்லா அல்லா பாடல் எம் எஸ் வி குரலில் மா பெரும் வெற்றி ஈட்டிய பாடல்.உணர்ச்சி வழுவாமல் பாடுவது அவரின் தனிச்சிறப்பு. கேட்டு மகிழ இணைப்பு  

https://www.youtube.com/watch?v=r5F0CfsMgBY  allah allah

2 சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாடல் மாபெரும் உணர்ச்சிக்குவியல் எம் எஸ் வி- ஜானகி குரலில் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம். மிகுந்த நுணுக்கங்கள் கொண்ட பாடல் எளிய பாடல் போல் தோன்றும் . ஆழம் தெரியாமல் இறங்கினால் நிலை தான் இந்தப்பாடலைப்பாட முனைந்தால்.வெகு நேர்த்தியான பாடல். கேட்டு மசிகிழ இணைப்பு 

https://www.google.com/search?q=sollaththaan+ninaikiren+song+video+song+msv&newwindow=1&sca_esv=591149029&sxsrf=AM9HkKm5NV0X8BSEHYYDuLAYCKjIdo solaththaan ninaikiren  janaki , msv

https://www.google.com/search?q=qfr+sollaththaan+ninai+kkiren+somg+&newwindow=1&sca_esv=591167423&sxsrf=AM9HkKkIu2FK0Q9rku-pVEoKmyJN80s28w%3A17 QFR

3 சம்போ சிவ சம்போ  எம் எஸ் வி  அடித்துநொறுக்கிய பாடல்

ம்ம் ஆச்சு அவ்வளவு தான் ம்எஸ் வி . யின் இசை முடிந்து விட்டது என்று சிலர் பிதற்றிக்கொண்டிருந்த[1978-79] வேளையில் -திடீரென்றுபோங்கடா லூசுப்பயல்களா என்பது போல்  வெடுத்துச்சிதறிய இசைப்பெட்டகம் 'நினைத்தாலே இனிக்கும் 'படம்.

  எவ்வளவு அனாயாசமாக சிவ சம்போ பாடலை துள்ளலுடன் பாடியுள்ளார் மெல்லிசை மன்னர். கேட்டு மகிழ்வீர் 

https://www.google.com/search?q=sambo+siva+sanbo+video+song+msv&newwindow=1&sca_esv=591149029&sxsrf=AM9HkKn_Dr_WnKwIye0vQI5KeSnJNmfnPQ%3A17 –siva sambo

3 பாட்டு ஒன்று தேடுது மெட்டு பாடல் எம் எஸ் வி  யே சொந்த  வகையில் பாடியது .இசை அமைப்பாளர் பரத்வாஜ், பெரியவர் விருப்பப்படி பாடட்டும் என்று பாட வைத்த பாடல். எவ்வளவு நேர்த்தியாக பாவம் காட்டி  ப்பாடியுள்ளார்  எம் எஸ் வி. ரசிப்புக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=PATTU+ONNU+METTU+THEDI+THAVIKKUDHU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=591167423&sxsrf=AM9HkKmdzR5IGgoZT7GyYfjA PAATTU ONU METTU

https://www.dailymotion.com/video/xqjf8x MSV AT SINGAPORE

4 சங்கமம் படத்தில் ஆர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கு எவ்வளவு நேர்த்தியாக"ஆலால கண்டா" பாடலை   பாடியுள்ளார் கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=aalaala+gandaa++video+song+AR+RAHMAN++song+download&newwindow=1&sca_esv=591149029&sxsrf=AM9HkKlNJ4kvhHlH_II AALAALA GANDA  AR RAHMAN SANGAMAM

5 பாச மலர் படத்தின் டைட்டில்லில் அன்பு மலர் பாடல் எம் எஸ் வி முதன்முதலில் பாடிய பாடல் . உணர்ச்சியின் உச்சத்தில் நெடிதுயர்ந்த முழக்கப்   பாடல் .மனதை உலுக்கும்  வகை உச்சஸ்தாயி .

கேளுங்கள்

https://www.google.com/search?q=YOU++TUB+E+ANBU+MALAR+AASAI+MALAR+SONG+&newwindow=1&sca_esv=591167423&sxsrf=AM9HkKlJpDQOzTYlvMTo0C5bR  anbu malar

மேலும் வளரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. ஆஹா.. அருமை . எம் எஸ் வி யின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்தும் ஈடு இணையற்றவை. தாங்கள் குறிப்பிட்டவை அவற்றில் சிறப்பான முத்துக்கள்.
    நன்றி பேராசிரியர்.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...