Sunday, December 17, 2023

SRIDHAR SONGS

 SRIDHAR SONGS

ஸ்ரீதர் பட ப்பாடல்கள்

பாடசல்களை காட்சிப்படுத்துவதிலும், பாடல்களை உரிய இடத்தில் வைப்பதும்எப்போதும்  ஸ்ரீதர் முத்திரை என்று கருதுவோர் ஏராளம். சரியான இடத்தில் அமையும் பாடல் படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு வலு சேர்க்கும். அல்லாதவை புகைபிடிக்கும் அன்பர்களுக்கு உகந்த காட்சி என்றே விமரிசிக்கப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த வகையில் அல்லாது படத்தின் போக்கை குலைக்காமல், நளினமாக அமைந்த பாடல்கள் குறித்தே இன்றைய நமது பார்வை அமைகிறது. இதற்கென சில பிரத்யேக பாடல்களை தேர்வு செய்துள்ளேன் கவனமாகப்பார்த்து ரசிப்பீர்.

1 கலைக்கோயில் 1964- வரவேண்டும் -ஜாஸ் வகை மிரட்டல் பாடல், இசையை சொல்வதா, ஈஸ்வரியை சொல்வதா , கவிஞரின் ஜாஸ் வாகை அமைப்புக்கானசொல்லாடல் கண்டு வியப்பதா என்ற மிரட்சி தரும் பாடல்.. கிளப் வகைப்பாடல் எனவே மென் ஒளியில் கருப்பு வெள்ளை படம் நடன நாரிமணி சாந்தா [பின்னாளில் அவளுக்கென்ன பாடலில் நாகேஷுடன் அபிநயித்தவர் -அற்புத திறமை சாலி, நடன இயக்குனர் தங்கப்பனின் உதவியாளர், [பல பாடல்களில் நடன காட்சிகளில் திறமையான நடன அசைவுகளைக்காட்டி ஆனால் கௌரவமான இடத்தில் மிளர்ந்தவர். பாடலின் ஏற்ற இரக்கம், இசை வீச்சு அனைத்திலும் அன்றைய புதுமை.

பாடல் இணைப்பிற்கு  https://www.google.com/search?q=vara+vendum+oru+pozhudhu+kalaikovil+song+video&newwindow=1&sca_esv=589324365&sxsrf=AM9HkKlHpF4YC_yoJ2UlTtSQocTVK varavendum [SELECT PYRAMID LINK]

https://www.google.com/search?q=vara+vendum+oru+pozhudhu+kalaikovil+sonG+QFR&newwindow=1&sca_esv=589324365&sxsrf=AM9HkKlRtZ0J54-Oaxv8sSqGwuNV QFR

2 ஒருவன் காதலன் [வெண்ணிற ஆடை-1965] கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பதிவிடப்பட்ட எளிமையான பாடல்.இசையின் மேன்மைக்கு ஈடு கொடுத்த காமெரா நிலைகள் ஒளிப்பதிவு என் பாலகிருஷ்ணன் , ஒளிப்பதிவு இயக்கம் ஜி .பாலகிருஷ்ணாபார்த்து ரசியுங்கள் இயல்பான அசைவுகளுடன் .பாடல் இணைப்பு  https://www.google.com/search?q=VENNIRA+ADAI+ORUVAN+KAADHALAN++song+video&newwindow=1&sca_esv=589324365&ei=M6 ORUVAN KAADHALAN [USE COCHIN LINK]

https://www.google.com/search?q=VENNIRA+ADAI+ORUVAN+KAADHALAN++song+video&newwindow=1&sca_esv=589324365&ei=M6J ENNA ENNA VAARTHTHAIGALO

3 நெஞ்சிருக்கும் எங்களுக்கு [நெஞ்சிருக்கும் வரை -1966] சென்னை மவுண்ட் ரோட் மற்றும் பீச் ரோட் பகுதிகளில் பட்டப்பகல் வெயிலில் முன்னணி நடிகர்கள் சிவாஜி, கோபாலகிருஷ்ணன், முத்துராமன் மூவரும் கவலை மறக்க பாடிக்கொண்டே செல்லும் காட்சி.மிக இயல்பாக படப்பிடிப்பு நடந்துள்ளதை உணர முடிகிறது வாலி ஸ்ரீதர் படத்திற்கு எழுதிய முதல் பாடல் அதன் பின்னர் நட்பு விலகாமல் பயணித்தனர். தண்ணிம்பைக்கு தரும் பாடல்  இணைப்புக்கு .     https://www.google.com/search?q=nenjirukkum+engalukku+video+song+download&newwindow=1&sca_esv=591619891&sxsrf=AM9HkKkfl0SYR5gbtspsYaqFAFQIgpS2c nenjirukkum engalukku

4 தேடினேன் வந்தது [ஊட்டி வரை உறவு] முற்றிலும் வசீகர உடை இசை , அசைவு என மிளிர்ந்த பாடல் ஒரு நாளெல்லாம் ஒத்திகை பார்த்த பின் ஸ்ரீதருக்கு பிடிக்காமல் போய்விட,இரவு 10 மணிக்கு மேல் முற்றிலும் புதிய ட்யூன்/ மற்றும் இசை /தாளம் என்று 25 நிமிடத்தில் உருவாக்கி நள்ளிரவில் பதிவிடப்பட்ட பாடல் . ஆனால் பெரும் தாக்கம் விளைவித்த பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ: 

https://www.google.com/search?q=thedinen+vandhadhu+video+song+download&newwindow=1&sca_esv=591624743&sxsrf=AM9HkKlM0tGkoy25PfhQ1JSjdj3xaUJnLQ% thedinen vandhadhu

https://www.google.com/search?q=thedinen+vandhadhu+song+qfr+video+song+download&newwindow=1&sca_esv=591624743&sxsrf=AM9HkKkvAXlhgCmfEyBs_tLPaq- QFR THEDINEN VANDHADHU

5 விழியே கதை எழுது [உரிமைக்குரல்] தாளத்தின் மீதே பயணித்த ஓர் வித்தியாசமான பாடல். இசைக்கருவிகள் மிக மிகக்குறைவு. ராக பாவங்கள் மிகவும் சுகமானவை எனவே எப்போது கேட்டாலும் ரம்மியமாகவே ஒலிக்கும் பாடல்.

மாறுபட்ட படப்பிடிப்பை கண்டு ரசிக்க

https://www.google.com/search?q=vizhiye+kathai+ezhuthu+video+song+download&newwindow=1&sca_esv=591624743&sxsrf=AM9HkKlM0tGkoy25PfhQ1JSjdj3xaUJnLQ%3A1 vizhiye kadhai ezhudhu

இது போல் எத்தனையோ வகை பாடல்களை வழங்கிய ஸ்ரீதர் அவர்களை மறக்க இயலுமோ?

நன்றி

அன்பன் ராமன்

3 comments:

  1. ஶ்ரீதரால் தான் AM Raja முன்னுக்கு வந்தார் என்றால் மிகையாகாது.
    ராஜா பாடிய பாடல்கள் அற்புதம்

    ReplyDelete
  2. Nice selection of songs worth listening a million times.

    ReplyDelete
  3. Very good analysis . Your knowledge of tamil films is amazing. Rk

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...