SCIENCE
ENERGY UTILIZATION
ஆற்றல் பயன்பாடு
சென்ற சில பதிவுகளில் பசும் தாவரங்களின் செயல் பாடுகள் குறித்து விளங்கிக்கொள்ள முயல்கிறோம். ஆம் சூரிய ஆற்றல் உணவுப்பொருள் எனும் வேதியல் ஆற்றல் [CHEMICAL ENERGY ] நிலையை அடைவதில் வெப்ப இயக்க கோட்பாடுகள் பின்பற்றப்படுவதை விளக்கி இருந்தேன். அன்பர் ஒருவர் ஒரு வினா வினை முன் வைத்தார். அதாவது தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் ஸ்டார்ச் தயாரிப்பதாக படித்துள்ளேன் ஆனால் நம் தொடரில் நீங்கள் சுகர் என்னும் பொருள் ஒளிச்சேர்க்கையின் பலனாக உருவாவதை சொல்லியுள்ளீர்கள் என்று விளக்கம் கோரியிருந்தார்.
இந்த தகவல் இது தான் . ஒளிச்சேர்க்கை மூலம் க்ளூகோஸ் [GLUCOSE ]=SUGAR தோன்றுகிறது. மூலப்பொருட்களின் அடிப்படையில் 6கார்பன் , 12 ஹைட்ரஜன் 6 ஆக்சிஜன் உள்ளடக்கியதே க்ளூகோஸ் [C 6 H 12 O 6] ஆனால், தாவர உடலில் சேமிக்கப்படும் பொருள் ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள்—ஸ்டார்ச்[ C 6 H 10 O 5 ] இப்போது மூலப்பொருள் அடிப்படையில் க்ளூகோஸ் [C 6 H 12 O 6] மற்றும் ஸ்டார்ச் [C 6 H 10 O 5] இரண்டினையும் ஒப்பீடு செய்தால் -ஒரு உண்மை புலப்படும் .
அதாவது ஒரு க்ளூகோஸ் மூலக்கூறு [MOLECULE] க்கும் ஒரு ஸ்டார்ச் மூலக்கூறுக்கும் உள்ள வேறுபாடு ஒரு நீர் மூலக்கூறு என்னும் [WATER MOLECULE அல்லது H 2O] என்பதே . அதாவது நீர் இழந்த க்ளூகோஸ் ஸ்டார்ச் ஆகிறது.எனவே தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தோற்றுவிக்கும் க்ளூகோஸ், [நீர் அகற்றப்பட்டு =DEHYDRATE செய்யப்பட்டு] ஸ்டார்ச் ஆக மாற்றப்பட்டு, காய் களிலும் ,கிழங்குகளிலும், தானியங்களிலும் சேமிக்கப்படும்.
இதுவே, அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றல்தரும் உணவாகிறது. எனவே டீஹைடிரேஷன் செயல் மூலம் ஸ்டார்ச் உருவாதல் மற்றும் ஹைட்ரேஷன் மூலம் சுகர் உருவாக்குதல், தாவரங்களில் அன்றடம் நிகழும் அமைதியான செயல். இவை அனைத்திலும் ஆற்றல் பங்கீடு என்பதே நோக்கம். இவ்வளவு நேர்த்தியான செயல்களை அரங்கேற்ற [அதாவது ஆற்றல் உருமாற்றம், ஆற்றல் சேமிப்பு, மீண்டும் உணவுப்பொருளில் இருந்து ஆற்றலை பிரித்தெடுத்தல் இவற்றை செவ்வனே செய்திட இயற்கையின் படைப்பில் தோன்றிய இரு பெரும் அமைப்புகளே தனித்துவம் கொண்டவை.
CHLOROPLAST /MITOCHONDRIA
அவை பசுமை நிறம் கொண்ட குளோரோபிளாஸ்ட்டுகள் [பசும் தாவரங்களில் மட்டும் இயங்குபவை], மற்றும் அனைத்து உயிரினங்களிலும் ஒவ்வொரு வினாடியும் நிகழும் சுவாசம் எனும் செயலின் மூலம் ஆற்றலை மீட்டெடுக்கவல்ல POWER HOUSES எனப்படும் மைட்டோ காண்ட்ரியாக்கள் [MITOCHONDRIA ] என்ற ஆற்றல் மிகு நுண் உறுப்புகள்.
CHLOROPLAST /MITOCHONDRIA இவ்விரண்டுக்கும் மட்டுமேஉள்ள செயல் திறன் பெற்ற ELECTRON TRANSPORT SYSTEM [ETS ] என்ற பிரத்தியேக அமைப்புகள். இவை இரண்டுமே, உயிரினங்களின் நல்வாழ்வுக்கென, பேராற்றலும் பேராச்சரியமும் தரவல்ல இயற்கையின் கொடைகள் எனில் மிகை அன்று.
இத்தகவல்களை நன்கு உள்வாங்கிக்கொண்டால் இயற்கையின் படைப்பில் உயிரினங்களின் செயல்பாடுகள் எவ்வளவு நுட்பம் வாய்ந்தவை மற்றும் அவை ஆற்றல் பயன்பாட்டில் மற்றும் பங்கீட்டில் எவ்வளவு சிறப்பாக பங்கேற்கின்றன என்ற உண்மைகள் விளங்கும்.
மேலும் விவரங்கள் வரும் பதிவுகளில்.
நன்றி
அன்பன் ராமன்
Fine
ReplyDeleteNice article. We are lucky to comprehend few mysteries of the immense and wonderful Nature.
ReplyDelete