BIOTECHNOLOGY
பயோடெக்னாலஜி
உயிரி தொழில் நுட்பம் என்பதாக அறியப்படும் துறை தான் பயோடெக்னாலஜி . இது --இரு வகை அறிவியல் அடிப்படையில் இயங்குவது. அவை பயாலஜி என்னும் உயிரினங்கள் பற்றிய புரிதலையும், டெக்னாலஜி என்ற தொழில் நுட்ப அணுகுமுறைகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு செயல் திட்டம் என்பதே அடியேனின் புரிதல். தொழில் நுட்ப அணுகுமுறை என்பது கருவிகளை க்கொண்டு தயாரிக்கும் உத்தி அன்று .மாறாக உயிரினங்களின் செல் எனப்படும் அடிப்படை அமைப்பில் இயங்கும் செயல் முறைகளை மனித நல மேம்பாட்டுக்கென செயல் பட வைத்தல் என்பதே பொருத்தமாக இருக்கும். இந்த முறையில், குறிப்பிட்ட செயல் திறன்கள் உயிரின செல்களிலேயே மேம்படுத்தப்படுவதால் 'டெக்னாலஜி' என்ற அந்தஸ்தை பெறுகிறது. இந்த உத்திகளை அறியவும், அவற்றின் கட்டுப்பாடுகள் எனும் கண்ட்ரோல் ஸ்விச் [CONTROL SWITCH] குறித்த அறிவும், அடிப்படை மூலதனங்கள்.
எனவே ஆக ச்சிறந்த
கட்டமைப்புகள் கொண்ட பல்கலைக்கழங்களில் பயோடெக்னாலஜி துறையில் பட்டம்/ பட்டமேற்படிப்பு/ முனைவர் தகுதிக்கென ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் தரும்.
அதில் ஒரு சிறிய வருத்தம் யாதெனில் இவ்வகை பயிற்சி பெற்றோர் அநேகர் மேலை நாடுகளில் பயோடெக் நிறுவனங்களில் வேலைக்கு போய் எளிதில் உயரம் தொட்டுவிட்டனர். இதை பயன் படுத்தும் உத்தி அறிந்த 'கல்வித்தந்தைகள்" அவர்களின் கல்வி நிறுவனங்களில்
பயோடெக்னாலஜி
துறைகளை
துவக்கி
பொருள்
ஈட்டி
மகிழ்ந்தது
தான்.
அந்த முறையான பயோடெக்
திறன்
வளர்க்கும்
மிகச்சிறந்த
செயல்கூடங்கள்
LABORATORIES வெகு சில கல்வி நிலையங்களில் மட்டுமே இயங்குகின்றன.
இதை
தேர்வு
செய்வதில்
மிகுந்த
கவனம்
தேவை.
இதில்
மருத்துவ
பல்கலைக்கழங்களும் /பொறியியல் பல்கலைகளும் மாணவர் சேர்ப்பில் அக்கறை கொள்கின்றன. எனது தனிப்பட்ட கருத்து மருத்துவ பல்கலைகள் இடம் பெற்று பயில்வது எவ்வளவோ மேல், ஏனெனில் அவை மனித நோய்கள், மருத்துவம், ஹைஜீன்/ ஸ்டெரிலிட்டி என்னும் மிகச்சிறந்த தற்காப்பு முறைகளை அன்றாடம் செயல் படுத்தி மிகச்சிறப்பாக போதிக்கும் திறமையும் அனுபவமும் பெற்றவர்கள். இவ்வகையில் பயோடெக்னாலஜியில் பெயரெடுத்த பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த இடத்தில் மருத்துவ பல்கலை களை என்னால் நிறுத்த முடிகிறது.
ஏனைய பற்றி பேசாமல் இருப்பது கூசாமல் பொய் சொல்வதை விட எவ்வளவோ மேலானது. .
இவ்வளவு பீடிகை ஏன் என்கிறீர்களா? நிச்சயம் தேவைதான் . பயோடெக்னாலஜி படிக்க வேண்டும் என்று விரும்புவோர் சில முக்கிய நிபந்தனைகளை புரிந்து கொள்ளவேண்டும். இல்லையேல் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பியூட்டர் சயன்ஸ்என்று பாய்ந்து கண்ட நிறுவனத்திலும் பி எஸ் சி கம்பியூட்டர் சயன்ஸ் என்று சேர்ந்து வெறும் தியரி என்னும் கோட்பாடுகளை மட்டும் கற்று நேரடியாக கம்பியூட்டரை இயக்கும் பயிற்சி இல்லாமல் பட்டம் பெற்று ஏமாந்தவர்கள் நிலை தான் தவறான நிலையங்களில் பயோடெக்னாலஜி பயில்வோருக்கும். அவர்களை எந்த கடவுளாலும் காப்பாற்ற இயலாது.
1
இந்தக்கல்வியை
பயிற்றுவிக்க
பயாலஜியில்
ஆழ்ந்த
அனுபவமும்
ஆளுமையும்
கொண்ட
பேராசிரியர்கள் அந்த நிறுவனத்தில் கற்பிக்கின்றனரா என்று தெரிந்து கொள்வீர்
2.
அந்த
பேராசிரியர்
போதிக்கும்
துறைகள்
சார்ந்த
புதிய
நூல்கள்
-குறிப்பாக
மேனாட்டு
பல்கலை
களில்
அனுசரிக்கும்
பாடத்திட்ட
வரைவுகளுக்கு
உதவும்
தலைப்புகளில்
தகவல்கள்
உளவா
. என்று
கவனிப்பீர்
3
முறையான
பயிற்சிக்கூடங்கள் / LAMINAR FLOW HOOD/ ஆட்டோகிளேவ் , பலதரப்பட்ட என்சைம்கள் ULTRA CENTRIFUGE,
ELECTRO-PORETIC DEVICES உதவியுடன் பயிற்சி கிடைக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.
நிறுவனம்
சார்ந்தவர்கள்
உண்மையை
பேச
மாட்டார்கள்..
நீங்கள்
மாணவ
மாணவியரிடம்
விளக்கம்
பெற்றால்
உண்மை
நிலை
என்ன
என்பது
தெளிவாகும்.
அநேக
கல்லூரிகள்
இவற்றை
நிறைவு
செய்யாமலே
பயோடெக்னாலஜி
வபகுப்புகளை
நடத்துகின்றனர்..
4
நம்
நாட்டிலேயே
,ஒரு
சில
பல்கலைக்கழகங்கள் முறையான பயிற்சி வழங்குவதை
உலகறியும். அவற்றில் அகில இந்திய போட்டித்தேர்வில் வெற்றிபெற்றோருக்கு உதவித்தொகையுடன் நல்ல பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனவே போட்டித்தேர்வுக்கு முறையாக தயார் செய்து கொள்ளுங்கள். அந்த நிறுவனங்களில் பயில்வோர்
UPDATED டெக்னாலஜி பயில்கின்றனர்.
5
ஒன்றை
நினைவில்
நிறுத்துங்கள்
பயோடெக்னாலஜி
என்பது
தொழில்
முறைக்கல்வி.
எனவே
வலுவான
செயல்
முறைகள்
பயில
வாய்ப்பின்றி
இயங்கும்
நிலையங்களில்
பயில்வதை
விட
வேறு
அடிப்படை
அறிவியல்
துறைகளில்
நுழைந்துB.Sc
முறையாகப்பயில
எதிர்
காலம்
துன்புறாது.
மேலும் விவரங்கள் வரும் பதிவுகளில்.
நன்றி அன்பன் ராமன்
To start Biotechnology course in a college you n ed to setup a laboratory consisting of costly instruments and costly chemicals. But there are colleges offering this course only to teach theoretical aspect of Biotechnology and without a laboratory.
ReplyDeleteஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
ReplyDelete