Friday, January 19, 2024

Subramani’s verbal galore -2

 Subramani’s verbal galore -2

சுப்பிரமணி யின் சொல் தாண்டவம் -2

 

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக ரெ "ஆமாம் ஊருக்கு போனீங்களே எங்க வீட்டுக்கு போனீங்களா அம்மாவைப்பார்த்தீங்களா என்று ஆரம்பித்தான்.

சுப்பிரமணிக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஏன் சார் ஊருக்கு போனா எங்க வீட்டுக்கும் போய் அம்மாவையும் பாத்துட்டு வா னு ஒரு வார்த்தை சொன்னீங்களா -இப்ப வந்து டிவி காரங்க மாதிரி கேள்விகேக்குறீங்களே இது நியாயமா?

 நீங்களே யோசிங்க சார்-- எதை எப்ப சொல்லணும் னு கூட தெரியாதா சார் என்று எரிச்சலுடன் கேட்டான் சுப்பிரமணி.

எதுவுமே நடவாதது போல    ரெ  சரி ஆபீஸ்ல -மாடசாமி சார் ராமசாமி சார் எல்லாரையும் பாத்தீங்களா என்றான்.

பாத்தேன் சார் அவங்கள மாதிரி நல்ல நட்பு கிடைக்க குடுத்துவெச்சிருக்கணும் சார். எவ்வளவு உதவி, உணவு, உபசரிப்பு, கோயில் தரிசனம் எல்லாம் குறை இல்லாம செஞ்சு என்ன ரொம்பவே மகிழவும் நெகிழவும் வெச்சுட்டாங்க. அவங்கள நல்லா காப்பாத்தி வெச்சிக்காம எனோ தானோ னு சொதப்பி இப்படி பண்ணிட்டீங்களே சார் என்றான் சுப்பிரமணி.

 நான் என்   சொதப்பினேன்? என்றான் ரெ .

அதுக்குள்ள மறந்துட்டீங்களா?  உங்கம்மா எங்க னு கேட்டா நீங்க பதிலே சொல்லாம ரொம்ப நேக்கா சமாளிச்சுட்டதா நெனச்சு பேசாமலே கடந்து போனீங்க. அவங்க ஆடினா நம்மால சமாளிக்க முடியுமா ? அப்புறம் லீவுக்கு எங்குமே போகல னு பொய் சொன்னதை அவர் "எனக்கு தெரியும் னு நீங்க செஞ்சதை புட்டு புட்டு வெச்சாரே நீங்க பதிலே பேச முடியாம தவிச்சதெல்லாம் தெரியும் சார்.

நமக்கு உதவி செய்யணும் யாருக்கும் தேவையோ கடமையோ கிடையாது சார் .ஏதோ பாவப்பட்ட ஜனங்க னு தான் மத்தவங்க நம்மள பாக்கறாங்க. அந்த எடத்துல பணிவு ஒன்னு தான் நம்மள காப்பாத்தும்.கனவுல கூட நம்ம அவங்ககிட்ட பாராமுகமா இருக்கக்கூடாது சார். உங்களுக்கு ஏன் சார் இது புரிய மாட்டேங்குது..

உங்க அம்மா தான் வெளி உலகம் தெரியாதவங்க நீங்களுமா?

 /நல்லா யோசனைபண்ணி பாருங்க   -ராமசாமி சார் மாடசாமி சார் கேப்ரியல் சார் இவர்களுக்கும் நமக்கும் என்ன சார் தொடர்பு? அவங்க ஏன் சார் நமக்கு உதவி செய்யணும்? அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யப்போக பலன் நமக்கு வாய்க்குது. ஏதோ நம்ம உழைப்புல முன்னேறிட்டதா யாருமே நினைக்க முடியாது. நல்ல தொடர்புகளை கடவுள் ஏற்படுத்தி தறார் -அதுதான் தெய்வச்செயல்

அந்த வழியில் நாம போகணும்னா இத்துணை பேரின் ஆசியும் ஆதரவும் இல்லாம எதுவும் நடக்காது.

தப் பா நெனச்சுக்காதீங்க நான் யாரு சார்?   

கேப்ரியல் சார் எனக்கு பார்ட்டி தந்தார் சார் எதுக்கு ? பி கே சார் ஆபிஸ் பையன் னு ஒரே காரணம் தான். ராமசாமி சார் மனைவி சொந்த அம்மா மாதிரி அவ்வளவு நல்லா பாத்துக்கிட்டாங்க மாடசாமி சார் வீட்டுலயும் எவ்வளவு அன்பா பாத்துக்கிட்டாங்க -எத்தனை பிறவி எடுத்தாலும் நன்றி மறவாத வாழ்ந்தா  தான் -சோத்துக்கு திண்டாடாம காலம் தள்ள முடியும்.

ஏதோ என் மனக்குமுறலை கொட்டிட்டேன் .நீங்க படிச்சவங்க என்னை விட மேல் குடியில பிறந்தவங்க. நல்லது கெட்டதை யோசிச்சு , எப்ப தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்டுட்டா பாரம் சுமக்காம எளிமையா வாழ முடியும் . அடுத்த சந்தர்ப்பத்துல யார் கிட்ட மன்னிப்பு கேக்கணுமோ கேட்டுடுங்க இறைவன் வழி விடுவார் -எனக்கு வேற சொல்லத்தெரியால என்று தாண்டவம் ஆடி விட்டான் சுப்பிரமணி..

ரெ யால்  பேசமுடியவில்லை, வாயடைத்து நின்றான்.

நமது செயல் சரியானதெனில் அச்சமும் நடுக்கமும் தேவை இல்லை. இதை சுப்பிரமணி ரெ வி ன் மனதில் ஆழமாக பதிய  வைத்தான்..                                                        

               நன்றி

அன்பன் ராமன்  

 

சேலத்து சுந்தரி

இது என்னடா புது தலை வலி என்கிறீர்களா ? இந்த கேரக்டர் நீங்கள் அறிந்த நபர் தான் . எங்கே எப்போது என்று ஒரு 5 நிமிடம் யோசித்து விடை சொல்லுங்கள். விடை சொன்னால் கதை இல்லையேல் கதைக்கே விடை கொடுத்துவிடுவோம்.  எதிர் வரும் வெள்ளி வரை காத்திருப்பேன் WA இல் சொல்லுங்கள்.

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...