EDUCATION-- OUT COME
கல்வியின் பயன்
கல்வியின் பயன்கள்
என்று
சிலவற்றை
அடையாளப்படுத்தலாம்
1 ஆய்வு
த்திறன்,
2 தீர்வு
காணுதல்
3 தன்னம்பிக்கை
.இவை
மூன்றும்
முறையான
கல்விபெற்ற எவருக்கும் கை வர வேண்டிய செயல்
பண்புகள்.."
கை
வர
வேண்டிய
" என்ற
அடை
மொழி
யின்
உள்ளார்ந்த
பொருள்
"செயல்
திறன்
" என்பதே.
எனவே
ஏட்டளவில்
படித்துவிட்டேன்
என்பதல்ல;
மாறாக
செயல்
பட
என்னால்
இயலும் என்ற தெளிவு
ஒருவருக்கு
ஏற்பட
வேண்டும்-அதுவே
கல்வியின்
பயன்
என
நான்
திடமாக
நம்புகிறேன்.
நீ நினைப்பதுதான் உலக
நியதியா?
என்று
கோபம்
கொள்ள
வேண்டாம்.
சற்று
யோசியுங்கள்;
படித்தோருக்கும்
அல்லாதோருக்கும்
வேறென்ன
வேறுபாடு
இருந்திடல்
ஏற்புடையதாக
இருக்கும்?
இந்தப்புள்ளியின்
விரிவான
ஆளுமையின்
விளக்கமே
கல்விப்பயன்.
இவ்விடத்தில்
ஒன்றை
தெளிவுபடுத்துதல்
கடமை
ஆகிறது.
முதலில்
சொல்லப்பட்ட
3 செயல்
பண்புகளும்
ஒருவரிடத்தில்
நிலைப்பட
முறையான
கல்வியே
சரியான
வழிமுறை.
இதன்
மற்றோர்
விளக்கமே
நன்கு
உள்வாங்கப்படாத
எந்த
தகவலும்
அறிவாக
மலராது.
ஆகவே நன்கு
உணர்ந்து
அறிந்த
தகவல்களே
அறிவு
என்ற
நிலைக்கு
உயர்த்தும்.
படிப்பது
வேறு
, அறிவு
வேறு
அதாவது
படிப்பது
தகவல்
பெறுவது.
அத்தகவல்களை
முறையாகத்தொடர்பு
படுத்தி
ஒரு
நிகழ்வை
புரிந்துகொள்வதும்
பிறர்க்கு
விளக்கும்
அளவிற்கு
தெளிவு
பெறுதலும்
தான்
அறிவின்
அடையாளம்.
தக்வல்
என்பது
முதல்
நிலை.
தகவல்
திரட்டின்
தொகுப்பு
நமது
புரிதலை
விரிவாக்குமாயின்
அது
அறிவு.
அது
கல்வியின்
பயனாய்
கிடைத்தால்
அது
கல்வி
அறிவே.
ஆயின்
பிற
வகை
அறிவுகளும்
ஒருவர்க்கு
வாய்க்கக்கூடும்
; அவற்றை
அனுபவ
அறிவு
, பட்டறிவு
என்றெல்லாம்
வகைப்படுத்துவதை
நாம்
அறிவோம்
. ஆக
, அறிவு
என்பது
ஒரு
குறிப்பிட்ட
எல்லைக்குள்
இயங்குவது
அதாவது
அதன்
எல்லைகள்
நிர்ணயிக்கப்பட்டுவிட்ட
நிலை
இதைத்தான்
ஆங்கிலத்தில்
knowledge என்கிறோம்.
அதனாலேயே
English knowledge , Physics knowledge என
குறிப்பிட்ட
வகைகள்
குறித்து
பேசுகிறோம்.
ஒருவருக்கு
அறிவு
நிலை
என்பதே
கவுரவ
அடையாளம்
அதாவது
maths knowledge உள்ளவர் என்பது அவரது அறிவின் அங்கீகாரம்.
அங்கீகாரத்தின்
அளவுகோல்
அறிவு
என்பது
புலனாகிறது. இவ்வாறு ஒருவர்
தொடர்ந்து
அறிவின்
தேடலில்
ஈடுபடும்
போது
, அவரது
தேடலின்
எல்லைகள்
விரிவடைந்து
, ஒரு
குறிப்பிட்ட
அறிவின்
எல்லை
தனை க்கடந்து அடுத்த
அறிவுப்பிரதேசத்தில்
கால்
பதிக்கிறார்
. உயர்கல்வியில்
விழைவதும்
.தேடலும்,
எல்லைகளை
கடக்க
உதவுவதால்
தோன்றும்
நிலை
comprehensive knowledge என்ற உயர் நிலை . அந்த நிலையில் முறையாகப்பயின்ற ஒருவர்
ஒன்றுக்கு
மேற்பட்ட
அறிவுத்தொகுப்புகளை
எதிர்கொண்டு
விசாலாமான
அறிவையும்,
ஆழ்ந்து
விவாதிக்கும்
திறனையும்
பெற்று
பலரையும்
ஈர்ப்பதுடன்
அவர்களை
வழி
நடத்தும்
திறன்
கொண்ட
ஆசான்
நிலைக்கு
உயர்கிறார்.
பலதரப்பட்ட அறிவுத்தொகுப்புகளை
கையகப்படுத்தும்
கலை
அறிந்தவர்கள் அறிவின் விளிம்பைக்கடந்து
ஞானம்
என்ற
திறன்
பெற்ற
பெரும்
ஆளுமை
ஆகின்றனர்.
அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட
கல்விப்பரப்புகளை
தெளிவாக
விளக்கும்
நுணுக்கமும்
ஆற்றலும்
பெற்று
'சான்றோர்'
என்ற
நிலை
நோக்கி
நகர்கின்றனர்.
இவை
அனைத்துமே
தனி
மனித
மேம்பாட்டில்
முறையாக
நிகழும்
வளர்
நிலைகள்.
அந்த
நிலை
நோக்கிய
தீவிர
முன்னேற்றம்
ஞானம்
பெரும்
உயர்நிலை
எனலாம்,
இவை
யாவும்
கல்வியின்
பயனாக
விளையும்
மனித
பரிமாணங்கள்.
கல்வியின்
பயன்
எந்த
குறிப்பிட்ட
புள்ளியிலும்
நின்று
விடுவதல்ல.
தொடர்ந்து
விரிவடை
தல் என்பது கல்வி
ஒருவருக்கு
வழங்கும் இயல்பான
திறன்
மேம்பாடு. ஆக ஞானம் , அறிவு,
தகவல் என்பன படிப்படியாக நம்மை நகர்த்தும் கல்வியின் பயன். ஆங்கில கவி TS
ELIOT கூறியுள்ளார் WHERE
IS THE WISDOM WE LOST IN KNOWLEDGE AND THE KNOWLEDGE IN
INFORMATION? இதன் பொருள்
“
சொற்களில் மூழ்கி
தகவலை இழந்து,
அதனால் அறிவை
தொலைத்து ஞானத்தையயும்
இழந்தோம் " டி எஸ்
எலியட் . எனவே, கல்வியின்
பயன் பன்முகம்
உடையது. முயன்று
பயில முன்னேற்றம்
மற்றும் அறிவின்
விரிவாக்கம் எளிதில்
வாய்க்கும்
நன்றி
அன்பன்
ராமன்
Very good article on philosophy of education. Thanks. RK
ReplyDelete