Monday, January 1, 2024

AL RAGHAVAN

 AL RAGHAVAN

எல் ராகவன்

ஒரு தனித்துவமான குரலுக்குக்குரிய பாடகர் எல் ராகவன் [நடிகை எம் என் ராஜத்தின் கணவர்].தஞ்சை மண்ணில் அய்யம்பேட்டை யில் தோன்றியவர் . தாய் மொழி சௌராஷ்டிரா, எனினும்   தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் /பலருக்கும் பிடித்தவர் .குறலை ப்போலவே  மென்மையான குணம் கொண்டவர். கிட்டத்தட்ட அவர் பாடல்கள் அனைத்துமே வெற்றி வாகை சூடியவை. மேலும் அவர். உடன் பாடாத கலைஞர்களோ அல்லது அவர் குரலை தேடாத இசை அமைப்பாளர்களோ இல்லை என்றே சொல்லி விடலாம். ஒரு சிலர் பிடிவாதமாக இவரை பயன்படுத்தாது  விடுத்திருந்தால் வேறு எவரும் பாடிவிடக்கூடிய பாடல்களாக அவை இருந்திருக்கக்கூடும் . எல் ராகவன் பல பாவங்களை எளிதில் கொண்டு வரக்கூடிய திறமையாளர். இந்த உலகம் பல நேரங்களில் விளம்பரத்திற்கு வீழ்வது போல் திறமைக்கு பணிவதில்லை. அதில்    எல் ராகவன் போன்றோர் பொறுமையுடன் இருந்தனர் என்பது பெருமையுடன் பேசப்படவேண்டிய ஒன்று. நடிகர் நாகேஷுக்கு ஏற்ற தொனியில் பாடி - சிறப்பு சேர்த்தவர். . உதாரணம்: சித்தி படத்தில் இங்கே மனிதன் பாதி தெய்வம் பாதி பாடல் . அநேக ஹீரோக்களுக்கும் பாடி உள்ளார் அவற்றில் சில இன்றைய பதிவில் இடம் பெறுகின்றன.

1 காதல் யாத்திரைக்கு - மனிதன் மாற வில்லை -இசை கண்டசாலா , எல் ராகவன், பி சுசீலா . எளிமையான நளினமான பாடல் -அக்க நேனி நாகேஸ்வர ராவ் -ஜமுனா நடித்த ஒரு கேலி ப்பாடல். நன்கு ரசிக்கும் வகையில் புனைந்துள்ளார் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள். பாடலை ரசிக்க

https://www.youtube.com/watch?v=8VJKEiHjBXU kadhal yaththiraikku manidhan maaravillai ps alr

QUARANTINE FROM REALITY | KADHAL YATHIRAIKU | MANIDHAN MARAVILLAI (1962) | Episode 554 (youtube.com)

2 புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை -இருவர் உள்ளம் எல் ராகவன் , எல் ஆர் ஈஸ்வரி மு கருணாநிதி எழுதிய பாடல் மிகவும் யதார்த்த சொல்லாடல் ஆனாலும் வலிமை குன்றாத நகைச்சுவை எம் ஆர் ராதா/ டி பி முத்து லட்சுமி நடிப்பில். இது பாடகர்களின் பாடல் இசை கே வி மஹாதேவன் கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=buththi+sigaamani+petrapillai+video+song+download&newwindow=1&sca_esv=593955280&sxsrf=AM9HkKm6LHn1diXEeqDfegFNaqzk2CEKkA

3 எங்கிருந்தாலும் வாழ்க    1962

உயர்தர எண்ணம் கொண்ட காதலின் பரிமாணம் வெளிப்படும் பாடல் .கவியா, குரலா இசையா எதை நினைத்து வருந்துவது இந்த பாவ மிகு குரலில் .இணைப்பு இதோ

https://www.google.com/search?q=engirundhaalum+vaazhga+video+song+download&newwindow=1&sca_esv=594151706&sxsrf=AM9HkKk6mSTfCRcnWyP9NQEKpebxbxtQ engirundhaalum

4 அன்று ஊமைப்பெண்ணல்லோ [பார்த்தால் பசி தீரும1962-63பாடலை ரசிக்க  ] கண்ணதாசன் ,விஸ்வநாதன் -ராமமூர்த்தி பி சுசீலா எல் ராகவன். சாவித்ரி ஜெமினி கணேசன் நடிப்பில் எளிமையாகத்தோன்றினாலும் இசையின் போக்கு சற்று நுணுக்கம் நிறைந்தது. கடினம்பாடுவதற்கு     ஆயினும்,  வெகு சிறப்பாகப்பாடியுள்ளனர்.

பாடலை ரசிக்க https://www.google.com/search?q=andru+oomai+pennallo+video+song+download&newwindow=1&sca_esv=594692341&sxsrf=AM9HkKlpV_bysMcuHtChaNsaPI6QMcY

5 கால்கள் நின்றது நின்றது தான் [போதைக்கு வந்த மலர்-1963]- வாலி ,விஸ்வநாதன்  ராமமூர்த்தி - பி சுசீலா எல் ராகவன்

முத்துராமன் மணிமாலா [Mrs vennira aadai Moorthi ] நடிப்பில் பாடல் நிறைய கார்வை ஏற்ற இறக்கம் கொண்ட அமைப்பு அதோடு பாவம் மாறாமல் படவேண்டிய துல்லியம். கேட்டு மகிழ

https://www.google.com/search?q=KALGAL+NINDRADHU+NINDRADHU+THAAN+VIDEO+SONG&newwindow=1&sca_esv=594554241&sxsrf=AM9HkKlbkDlMAKRhKZR4 KALGAL NINDRADHU --POOJAIKU VANDHA MALAR

6 ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் -- காசேதான் கடவுளடா [1972] -எம் எஸ் வி

ஒரு நகைச்சுவைப்பாடல் எம் எஸ் வி, வீரமணி எல் ராகவன் குரல்களில். துள்ளலும் சுவையும் மிக்க பாடல் ஒரு வினாடி கூட தொய்வின்றி பறக்கும் பாடல். கேட்டு மகிழ https://www.google.com/search?q=AANDAVAN+THODANGI+AANDIGAL+VARAIYIL+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=594574681&sxsrf=AM9HkKmOc3tAyr43_z1 AANDAVAN thodangi

7 "வா காதல் செய்து பார்ப்போம்" சிரித்த முகம் 1968 கண்ணதாசன்                 ஷங்கர் கணேஷ், எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி குரல்களில் மிகவும் விறு விறுப்பான ஓட்டம் ALR \டி எஸ் பாலையாவுக்காக பாடிய பாடல் இணைப்பிற்கு

https://www.youtube.com/watch?v=X9elZ4f4Nn8 "வா காதல் செய்து பார்ப்போம்"

இப்பாடல், பாடகர்களா ல் உச்சம் தொட்டது.   ஈஸ்வரி காட்டியிருக்கும் வேகம் அசாதாரணமானது.   டிரம்ஸ் ஆனந்தன் [சிவமணி அவர்களின் தந்தை] பல பெருமைகளைக்கொண்ட பாடல்.

எல் ஆர் அவர்களின் திரை சகாப்தத்தில் ஒரு சிறு துளி தான் இன்றையய பட்டியல்

நன்றி ராமன்  

1 comment:

  1. தனித்துவம் பெற்ற தனிக்காட்டு ராஜா.
    இவர். இவர்எப்படி MN Rajam ஐ மணந்தார் என்பது வியக்கத்தகுந்தது

    ReplyDelete

DIRECTOR-- CHITRALAYA GOPU

  DIRECTOR-- CHITRALAYA GOPU இயக்குனர்: சித்ராலயா கோபு இயக்குனர் ஸ்ரீதரின் தோழன் 5 ம் வகுப்பு முதல் இறுதிவரை . இ யற்பெயர்--     ...