Friday, January 12, 2024

SCIENCE --- RESPIRATION

 SCIENCE   ---  RESPIRATION

சுவாசித்தல்   

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழத்தேவையான ஆற்றல் [எனெர்ஜி ] பெற உதவும் செயல் தான் சுவாசித்தல். மனித இனம் உள்ளிட்ட- விலங்கு வகை உயிரினங்கள், சுவாசித்து தான் உயிர்வாழ இயலும். ஆனால் தாவரங்களுக்கும் பிற உயர்வகை விலங்குவகை உயிரினங்களுக்கும் அமைந்துள்ள வேறு பாடு யாதெனில்,தாவரங்களுக்கு நுரையீரல் ,இதயம் ,ரத்தக்குழாய்கள் வால்வுகள் இல்லை. இவை விலங்கு வடிவமைப்பில் இருக்கும் பிரத்தியேக கருவிகள் [apparatus] ;இதே போல் தாவரங்களுக்கு, ஜீரண உறுப்புகள், கழிவுஅகற்றும் சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் ,மூளை போன்ற திறன் வாய்ந்த கட்டுமானங்கள் இல்லவே இல்லை. ஆயின், விலங்குகள் ஈடேற்றும் அனைத்து உயிர்வாழ் பணிகளையும் தாவரங்கள் ஒவ்வொரு செல்லிலும் செய்து தங்கள் வாழ்வை நடத்துகின்றன.  எந்த வகை உடலமைப்பு எனினும் செயல்களின் நடைமுறைகளும் பலனும் ஒன்றே. இதில் பலன் என்பது உயிர்வாழத்தேவையான ஆற்றலைப் பெறுவதும், வாழ்ந்து,தனது இன உறுப்பினர்களை தோற்றுவிப்பதும் இரு தலையாய பணிகள். அவற்றின் முக்கியமான நிலைகளை புரிந்துகொள்ள சில உண்மைகள் விளக்கப்பட வேண்டும்.

1 தாவர உணவை ஏற்று தேவையான பொருட்களையும் எனெர்ஜி எனும் ஆற்றலையும் மீட்டெடுப்பதே உயிர்வாழ்தலின் முக்கிய நிகழ்வு. இதனை ஈடேற்றுவதே சுவாசித்தல் எனும் respiration நிகழ்த்தும் செயல். அதாவது ஸ்டார்ச் [glucose]  என்ற பொருளை சிதைக்கும் நிகழ்வு glycolysis க்ளைகோலைசிஸ் என்பது.   

இது ,   பைருவிக் அமிலம் மற்றும் 2 ATP மூலக்கூறுகளை தோற்றுவிக்கும். தொடர்ந்து பிற செயல்கள் மைட்டோகாண்ட்ரியா என்ற நுண் அமைப்பினுள் 2 பகுதிகளாக நடை பெறும் -அவை KREBS   சுழற்சி மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் எலெக்ட்ரான் நகர்வு அமைப்பு [ETS]வாயிலாக முற்றுப்பெறுகின்றன.  KREBS   சுழற்சி கார்பன்டைஆக்ஸைடு வாயுவை வெளியேற்ற [சுவாசித்தல் மூலம் வெளியாகும் கர்படைஆக்சைடு [RESPIRATORY CARBON -DI - OXIDE எனப்படுவது]. ETS ,ஆக்சிஜென் வாயுவை ஏற்றுக்கொண்டு, நீர்  மற்றும் 36 ATP மூலக்கூறுகளை தோற்றுவிக்கிறது. இவ்வாறு க்ளுகோஸ் சிதைக்கப்பெற்று,  சுவாசித்தல் மூலமாக ஒவ்வொரு உயிரினமும் தனது உடலிலேயே எனர்ஜி எனும்  ஆற்றலைப்பெறுகிறது. ஆக மூலப்பொருள்கள் -- கார்பன்டைஆக்ஸைடு, நீர் மற்றும் ஆக்சிஜென்  மீண்டும் வெளியே ற்றி று  சுழற்சிக்கு உதவுகின்றன

இவை அனைத்தையும் வெப்ப இயக்க விதி எனும் THERMODYNAMIC LAW அடிப்படையில் ஆய்ந்து பார்க்கலாம்.

முதலாம் விதி

எனெர்ஜி புதிதாக தோன்றுவதோ /அழிக்கப்படுவதோ இல்லை .ஆம் உண்மை தான் சூரிய ஒளியின் வெப்பம் /ஒளி பச்சைய அமைப்பில் கெமிக்கல் எனர்ஜி [POTENTIAL எனெர்ஜியாக] உணவுப்பொருள்வடிவில்  சேமித்து வைக்க படுகிறது [க்ளுகோஸ்] ஆனால் எனெர்ஜி உருமாற்றம் அடைய முடியும் .

இரண்டாம் விதி

எந்த எனெர்ஜியும் 100% முற்றாக பயன்படுத்த இயலாது , மாறாக ஒரு சிறு பகுதியேனும் டிஸ்சிபேஷன் என்ற எனெர்ஜி வடிவில் வெளியேறும். இதுவும் உண்மை தான். எனவே ஒவ்வொரு உயிரினமும் தனக்கு முந்தைய படிநிலையில் இருக்கும் உயிரினத்திடமிருந்து  ஒரு சிறு பகுதியையே  பெறமுடியம். இந்த அடிப்படையில் தான் அனைத்து உயிரினங்களும் எனெர்ஜி யை பங்கிட்டு வாழ்கின்றன. எனவே சூரியன் செயல்பாட்டில் தான் உயிரின இயக்கம் நடைபெறுகிறது என்ற பேருண்மை ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசித்தல் வாயிலாக அமைதியாக நடை பெற்று , ஆற்றல் பகிர்மானம் நன்கு நடை பெறுகிறது .இதுவே இயற்கையின் பேராற்றல் எனில் மிகை அன்று.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...