Friday, January 12, 2024

Subramani’s verbal galore

 Subramani’s verbal galore

சுப்பிரமணி யின் சொல் தாண்டவம்

சற்று முன் ரயிலில் குண்டூர் திரும்பிய சுப்பிரமணி நேரே பி கே சார் வீட்டை அடைந்து மாடசம்மி / திருச்சி அதிகாரிகள் பரிந்துரைத்த தகவல்கள் கொண்ட பாக்கெட்டை தந்துவிட்டு வெளியில் நின்றான். கடிதத்தின் விவரம் கண்ட          பி கே சார் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்தவராக, மனைவியை அழைத்து சுப்பிரமணிக்கு காபி கொடு என்றார். அவன் "சார் வேண்டாம் சார்"என்று நெளிந்தான்.ஏம்ப்பா எங்க வீட்டுல காபி நல்லா இருக்காதா என்று அவனை பேசவிடாமல் தடுத்தார். அவன் எமகாதகன் அல்லவா? அப்பிடி இல்ல சார் காலையில அவங்களுக்கு 100- வேலை இருக்கும் இதுல நான்  வேற  காபிக்கு நின்னா அது சரியில்லை சார் என்றான்.

டே பெரியமனுஷா ஒரு காபி குடிக்க இவ்வளவு வேதாந்தம் பேசறியே என்றார் பி கே சார். சுப்பிரமணி பேச முடியாமல் கை கட்டி ஓரமாக நின்றான்.உள்ளூர ஆவல் -தான்  கொண்டுவந்த செய்தி காயா பழமா -என்று தடுமாற்றம். நிச்சயம் பழம் தான் இல்லாவிட்டால் இவ்வளவு தீவிரமாக உபசரிப்பாரா என்று தன்னைத்தானே கேட்டு -வெற்றி தான் என்று முடிவு செய்து கொண்டான். காபி கமகம என்று மணக்க கோடாலி முடிச்சுடன் தலையில் துண்டுடன் திருமதி பி கே  -கையில் காபி , கண்ணில் பரிவு இரண்டுடன் -சுப்பு நன்னாருக்கியா என்றார். உடனே நமஸ்கரித்து அய்யா-அம்மா நிழல் நல்லா இருக்கேன் அம்மா என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு சொன்னான். காபி கை மாறியது, மூன்று நிமிடத்தில் சூப்பர்  காபி  வயிற்றுனுள் தவழ்ந்து இறங்க அமுதென சுவைத்து மகிழ்ந்தான். பரவல்லப்பா  போன வேகத்துல எல்லாம் முடிச்சு கொண்டு வந்துட்டியே என்றார் பி கே சார்.

சுப்பிரமணி சொன்னான் நான் என்ன சார் அங்கே மாடசாமி சார்+ அவங்க அதிகாரிங்க , உங்க லெட்டர்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ரெண்டே நாள் முடிச்சு , தம்பி விவரமா இதுல சொல்லி இருக்கோம் சார் எப்பிடி முடிவு எடுக்குறாரோ அதை தெரிஞ்சுக்கிட்டு மத்ததெல்லாம் பாத்துக்கலாம்னு சூப்பிரண்டு சார் சொன்னார். மாடசாமி சார் ரொம்ப தூரம் உதவி செஞ்சார், ராமசாமி சாரும் ரொம்ப நல்லா  பாத்துக்கிட்டார் முக்கியமான கோயில் பார்த்து ட்டு நல்ல சாப்பாடு வேற குடுத்தாங்க -அவங்களும் நல்லா  இருக்கணும் னு கையை கூப்பினான்.. அதுனால செலவே இல்ல சார் என்றான். சரி சென்னையில? சார் அங்கயுமே மாடசாமி சார் ரூம் சாப்பாடு எல்லாம் பாத்துக்கிட்டு என்னை ரயில் லே ஏத்திவிட்டு சாரை ரொம்ப கேட்டதாக சொல்லுங்க முடிஞ்சா போன் பேசச்சொல்லுங்க னு சொன்னார் சார். இந்தாங்க நீங்க தந்த 700/-ரூபாய் என்று திருப்பி தந்தான். சார் இப்ப வீட்டுக்குப்போய்ட்டு வந்தர் ரேன்  என்றான் சுப்பிரமணி.

சரி லேட் இல்லாம வா என்றார் பி கே சார்.                                                                   வீடு சென்று குளித்துவிட்டு 8.55 க்கு டூட்டி ரூமுக்கு வந்தான்.

கஸ்தூரி ரெங்கன் வந்தாச்சா?  என்றான் ஆமா சார் 7.30க்கு வந்தேன் என்றான் சுப்பிரமணி. சரி சாயங்காலம் பேசுவோம் என்றான் ரெ 

சுப்பிரமணிக்கு உள்ளூர சூடேறியது . சுமார் 5 நாள் கழித்து வந்தவனிடம் --சாயங்காலம் பேசலாம் என்று பெரிய மனித தோரணையில் பேசுகிறார் .ஒரு நாளில் 15 மணி   நேரம் பிழைப்பு என்னுடன் தான் நடக்கிறது இந்த மனுஷனுக்கு ,இதுல இவ்வளவு வீறாப்பா ? என்று அவனையும் அறியாமல் கொந்தளிப்பு கிளம்பியது. 

இது ஒரு வேளை பரம்பரை குணமோ ? இவங்க அம்மா இப்படி எதையாவது பேசி உதவினவர்களை உதாசீனம் செய்து இப்போது அவருக்கும் /மகனுக்கும் பலன் இல்லாத குழப்பத்தை ஏற்படவழி செய்துவிட்டார் போலும் .மகனும் அப்படி தான் இருக்கிறார். சரி இவர்களுக்கு காலம் தான் கண் திறக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு சரி சார் ஆபீஸ் வேலையை பாருங்க போங்க என்று கழற்றிக்கொண்டான்  . 

. மாலையில் வந்து வசமாக சுப்பிரமணியிடம் மாட்டிக்கொண்டான் ரெ. அது என்ன?      

  [தொடரும்                      

   அன்பன் ராமன்

2 comments:

  1. சுப்பிரமணி: காப்பின்னா இது தான் காப்பி.
    பேஷ பேஷ்

    ReplyDelete
  2. சுப்பிரமணிக்கு அகெடமிக் படிப்புத் தகுதி இல்லையென்றாலும், மற்றவர்கள் மனதையும், அவர்கள் எண்ணங்களையும் மற்றும் மற்றவர்கள் செயல்கள் வெளிப்படுத்தும் செய்திகளையும் எளிதில் படித்துவிட கூடிய புத்திசாலித்தனம் நிறைய இருக்கிறது. 👌🙂

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...