Monday, January 15, 2024

WHY DOES EDUCATION APPEAR CHALLENGING?

 WHY DOES EDUCATION APPEAR CHALLENGING?

கல்வி ஏன் சவால் ஆகிறது?

இந்தக்கேள்வி அநேகருக்கு புரியாது. ;ஏனெனில் சிலர் கல்வி நினைத்தபடி அடைந்துவிடக்கூடிய ஒரு எல்லை தான் என்றும், வேறு சிலர் வீட்டில் படித்தவர்கள் இல்லை எனவே எனக்கு யார் விளக்குவர் என்று மனதில் கலங்க வேறு சிலரோ நல்ல பள்ளியில் சேர்ந்து விட்டால் -கல்வி கை  வசப்படும் என்று ஒரு கணக்கீடு வைத்துக்கொண்டு [அந்த ஸ்கூல் எப்பவுமே சென்டம் சார் என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் பெருமை கொள்வதை பார்த்திருக்கிறோம்]..அந்தஸ்கூல் 98%க்கு குறைவான மார்க் பெற்ற யாரையும் 6ம் வகுப்பில் நுழையவே விட மாட்டான் என்பதே தெரியாத [ஆனால் அனைத்தும் அறிந்த அறிஞர் போல் பேசித்திரியும்] பெற்றோர், குழந்தைக்கு செய்யும் தீங்கு மிகப்பெரியு கல்வி நிலையத்தில் குழந்தையை [டொனேஷனை]  கொட்டிக்கொடுத்து  , அது போன்ற பள்ளியில் சேர்ப்பது தான் என்ற உண்மை கசக்கவே செய்யும் . அது போன்ற பள்ளிகள் நல்ல ஆசிரியர்களை பணி  அமர்த்துகின்றதையோ /அங்கு ஒரு நிலையான ஒரு ஆசிரியர் குழு இருப்பதையோ பார்த்ததுண்டா ? ஒரு கல்வி நிலையம் நல்ல தரமான கல்வி வழங்க வேண்டுமெனில் 1. மிகச்சிறந்த பயிற்றுவிப்பு திறன் கொண்ட அனுபவமிக்க ஆசிரியர்கள் அல்லது [2] நீண்ட காலமாக நிலைத்து இயங்கும் ஆசிரியர்கள்  இயங்கும் வளாகம்  என்ற அமைப்பானது இருத்தல் நலம்.; இரண்டாவது வகை நிலையங்களில் ஆசிரியர்கள் கல்விக்கூடம் தனது என்ற மனம் கொண்டு நல்ல முயற்சி எடுத்து கற்பிப்பதை காணலாம்.

ஏனெனில் பணக்கார பிள்ளைகளை ஈர்க்க கட்டிடம், கார்பார்க்கிங்,   சி அறையில் யார் கண்ணிலும் படாத தலைமை ஆசிரியர் /ஆசிரியை / வந்தவர் வருமானம் குறைந்த பெற்றோர் என்று தெரிந்ததும் அடிப்படை நாகரீகமாகக்கூட வணக்கம் தெரிவித்து "வாங்க" என்று அழைக்காத ஊழியர் இவை ஏதும் இங்கு இல்லை , எனவே பையன் பாஸ் .மற்றும் நல்ல ஒழுக்கம் பெறுவான் என்ற உத்திரவாதம் ஒன்று தான் பள்ளியை காப்பாற்றும் என்று உணர நீண்ட காலமாக இயங்கும் ஆசிரியர்கள் தான் வலுவான அச்சாணி என்பதை சமுதாயம் உணர்ந்தபாடில்லை. அதனால் பையனை கண்டித்த ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கப்படுகிறார்.

 அச்சாணி இல்லாவிட்டால் என்ன அதில் பாதி [சாணி] இருக்கிறதே என்று ஒழுக்கம் குறித்து சிந்தனையே இல்லாமல் படாடோப விளம்பரங்களில் மயங்கி கல்விக்கூடங்களை தேர்வு செய்பவர்களிடம் என்ன தெளிவு இருக்கும்?

இதில் பள்ளியை ஏன் இழுக்கிறாய் என்று குமுறும் பெற்றோரே கல்வித்தரம் குறித்த தங்களின் அளவுகோல் எது என்று விளக்கம் தர-- நீங்கள் தயாரா?  கல்வித்தரம் உறுதிபட நிலைபெற வேண்டு மாயின், எந்த சூழலிலு ம் பயில்வோர் ஒழுக்கம் பிசகாமல் நிர்வகிக்கப்படுதல் வேண்டும். அது போன்ற பள்ளிகள், எண்ணிக்கையில் குறைவுதான் ஆனால் ஆகச்சிறந்த பண்பாடு கொண்ட மாணவ மாணவியரை கட்டமைக்கும் ஆற்றல் கொண்டவை. பின்னாளில் அம்மாணவர்கள் நேர்மையான அணுகுமுறைகளில் தம்மைத்தாமே வடிவமைத்துக்கொள்ளும் சுயசார்பினர் ஆகின்றனர். குடும்ப பொருளாதாரம் வழிவிடுமானால், அவர்கள் எவரோடும் போட்டியிட்டு வெல்லும் திறனும், புரிதலும் உறுதியும் மிக்கவர்கள். ஆங்கிலத்தில் "Never say die" என்றொரு தாரகமந்திரம்  நமக்கு உரமேற்றும் திறன் கொண்டது. அவ்வகை ஆளுமைகள் நமக்குள் புகுந்து தீயாக வியாபிக்க PEER INFLUENCE என்ற சக பயில்வோர் தரும் ஊக்கமும் ஒரு பெரும்   காரணி. இதை அழகாக நிர்வகிக்க ஆழ்ந்த புரிதலுடன் போதிக்கும் ஆசிரியர் நிறைந்த தொலை நோக்குப்பார்வை கொண்ட கல்வி நிலையங்கள் தேவை .எனவே அவை மிகவும் முக்கியத்துவம் பெறுபவை. இந்நாளில் இவை அதிகம் தேவைப்படுகின்றன எனவே தான் கல்விநிலையம் குறித்த அறிவுத்தெளிவு மிக மிக அவசியம். இவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு ஆண்டும் சென்டம் என்ற அளவுகோல் ஒரு முறையான மதிப்பீடு அல்ல 

இது போன்ற தனி மனிதஒழுக்கம் நிர்வகிக்கப்படாமல் மேலோட்டமாக போதித்து மனப்பாடம் செய்து இந்த கேள்விக்கு இதுவே விடை என்ற அணுகுமுறை தாற்காலிக வெற்றி தரும். அந்த முறையில் பெற்ற பயிற்சி [மனப்பாடம்] மாபெரும் தோல்வியை நிச்சயம் சந்திக்கும். இதனால் தான் உயர்கல்வியில் குளத்தில் செத்து மடியும் மீன்கள் போல் கூட்டம் கூட்டமாக தோலிவியடைந்து, மனமுடைந்து தற்கொலை மற்றும் கல்வியின் மீது வெறுப்பு கொண்டு ஏதோ பட்டம் பெற்று வேலையின்றி அலையும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கல்வி ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்திடாத வரை கசப்பும் வெறுப்பும் கோபமும் கண்ணை மறைக்க படிப்படியாக திறன் குன்றி வேலைக்கு  எந்த தகுதியையும் வெளிப்படுத்த இயலாமல் "கல்வி திட்டத்தை மாற்றி அமை"க்க வேண்டும் என்றுபுலம்புவது தவிர்க்க வொண்ணாதது. எளிமையும், புரிதலும் ஒன்றை ஒன்று தழுவி வராமல் உயர் கல்வி என்பது ஏட்டளவு வெற்றியே. ஏனெனில் நமது அறிவின் கட்டமைப்பு வலுவான அடித்தளத்தின் மீதல்லாமல் மனப்பாடம் என்ற அட்டை மாளிகைகளாக பெரும் காட்சியளிக்கின்றன. வலுவான காற்று என்ற நேர்முக உரையாடல் நமது கல்வி என்ற கட்டுமானத்தை காற்றில் பறக்க விடுகிறது. அடிப்படை தேவைகளை[பொருள் உணர்தல் மற்றும் பொருள் உணர்ந்து புரிதல்]  முறையாக நிறுவாத வரை கல்வி நிச்சயம் கசப்பு மிகுந்த சவால் தான்,

நன்றி அன்பன் ராமன் 

2 comments:

  1. ஒரு காலத்தில் இந்துக்களுக்கான ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ஒழுக்கத்திற்காக பெயர் பெற்றது.
    St.Xavier’s College ல் வகுப்பு நடக்கும்போது கல்லூரி வளாகத்தில் ஒருவரும் நடமாடக்கூடாது. கண்ணில் யாராவது பட்டால் 4 அணா அபராதமாக்க் கட்ட வேண்டும்.
    ஒழுக்கம் கடை பிடிக்கும் பள்ளியோ கல்லூரியோ காணமுடியாது.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு. பிள்ளைகளுக்கு சுயசார்பு என்ற கேடயத்தை அளிக்க கூடிய வகையில் இருக்கின்ற கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க பெற்றோர்கள் துணிய வேண்டும். இதன் மூலம் ஒரு நல்ல வளமான சமுதாயம் அமைய வழி உண்டாகும்.

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...