DISGUISE SONGS –TAMIL
வேடதாரி--பாடல் -
தமிழ் சினிமாவில் நாயகனோ நாயகியோ வேடம் புனைந்து
வந்து பாடுவது அந்தக் கால படங்களில் பரவலாக இடம் பெற்றன என்பதை நாம் அறிவோம். எனினும் ஆண்களே வேடம் புனைந்து பாடல் காட்சிகள் நடித்ததே பெரும்பாலும்காட்சிப்படுத்தப்பட்டிருந்தத என்பதும் உண்மையே.அவ்வாறான சில படங்களை /பாடல்களை இன்றைய பதிவில் காணலாம்
1 "நானொரு குழந்தை "படகோட்டி [1964] வாலி, விஸ்வநாதன் -ராமமூர்த்தி -டி எம் சௌந்தரராஜன் எம்ஜி யார் ஒரு காவி உடை கிழவனாக தோன்றி பாடும் பாடல். நான் எப்போதும் சொல்வது போல் 1964 தமிழ் சினிமாவின் பொற் காலத்தில் அமைந்த வைரக்கிரீடம் புனைந்த ஆண்டு. ஆம் அதியற்புத படங்களுக்கும் பாடல்களுக்கும் உரிமை கோரும் ஆண்டல்லவா அது. அவை அனைத்தும் சரமாரியாக வெளிவந்து வெற்றிமேல் வெற்றி என ரசிகர்களை திக்குமுக்காட வைத்த கால கட்டம். இனி திரும்பப்போவதில்லை. இந்தப்பாடல் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்டு கேட்டவுடன் தொற்றி பற்றிக்கொள்ளும் அதீத ஈர்ப்பு கொண்ட பாடல் .காட்சி அமைப்பும் மிக ரம்மியமாக \பிரகாஷ் ராவ் இயக்கத்தில் ,இசையின் வசேரிகரம் கேட்டு ரசிக்க இயல்பான சுவை உடையது எழுதி விளக்குவது எளிதல்ல கேளுங்கள் பாடலை
https://www.google.com/search?q=naan+oru+kuzhandhai+song+video+song+download&newwindow=1&sca_esv=586607062&sxsrf=AM9HkKmbUl5wMlibDaatRdILA4S NAN ORU KUZHANDHAI
2 "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை "மற்றுமோர் வேடதாரி ப்பாடல் அதுவும் 1964 இல் வந்த காவியம் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான பாடல். படத்தின் தலைப்பிலேயே துவங்கும் பல்லவி .
கவியரசு கண்ணதாசன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி , சீர்காழி கோவிந்தராஜன்.
முதிய வேடத்தில் முத்துராமன் ,இளம் பெண் காஞ்சனாவை வளைக்க அவர் கோபம் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடிக்க மிக இயல்பான நடிப்பில் முத்துராமனும் காஞ்சனாவும்.
இப்பாடலை பலர் உன்னிப்பாக கவனிப்பதில்லை. நான் சொல்லும் இடங்களை ஊன்றி பாடலைத்தொடருங்கள் இப்பாடல் எவ்வளவு பெரிய அமைப்பும் ஆதிக்கமும் உடையதென்று விளங்கும்.
"ரெண்டும்கெட்ட வேளையிலே தொடங்கி வஞ்சி உன்னைக்காணும் வரை என்று நைசாக முத்துராமன் காஞ்சனாவின் முதுகைத்தடவ , வேங்கையென சீரும் காஞ்சனா. பின்னர் கவியரசர் கிழவனின் காதலுக்கு கற்பிக்கும் நியாயம் -கண்ணதாசன் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் . “காயிலே சுவைப்பதில்லை , கனிந்ததும் கசப்பதில்லை [கனிந்த கிழவன் கசப்பவன் அல்லன் ] நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும் [வயந்து கடந்த உடல் வேகம் என்ற உணர்த்தல்] மாமியார் கொடுமையில்லை , மாமனார் யாருமில்லை இந்த சாமியை மண முடித்தால் சந்தோஷம் குறைவதில்லை என்று இளம் பெண்களுக்கு மாமியார் குறித்த கவலையை தெளிவித்து வளைக்கப்பார்க்கும் கிழவன் - கவியைஎன்ன சொல்ல. எம் எஸ் வி என்ன லேசுப்பட்டவரா ? அவர் இசை அமைப்பில் சந்தோஷ ம் குறைவதில்லை என்று நீட்டிப்பாட வைத்து ஆசை வலை விரிக்கிறார் பாருங்கள்.
அட ச்சீ-- இவன் நம்ம காதலன் தான் என்றுணர்ந்த காஞ்சனா வெளிப்படுத்தும் குதூகலம் பாடலுக்கு முறுக்கேற்றுவதை கவனியுங்கள். கேட்டு ரசிக்க https://www.google.com/search?q=you+tube+kaadhalikka+neramillaikadhalippar+yaarumillai+song+download&newwindow=1&sca_esv=598330860&sxsrf=ACQVn0940aho-bkgaCCDRe4Ha7JUqPKx1Q%3A170 kadhalikka neram illai
3 காசிக்குப்போகும் சந்நியாசி -1966 [சந்திரோதயம்] வாலி, எம் எஸ் வி , டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன் .இதுவும் ஒரு நகைச்சுவை போல் தோன்றும் ஆழ்ந்த தத்துவம் மிளிரும் பாடல் . வார்த்தைக்கு வார்த்தை ஒருவருக்கொருவர் பதில் சொல்ல கேட்க தெவிட்டாத பாடல். எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று நாகேஷ் மனநிலை காசிக்கு காசிக்கு என்று ஓங்கி ஓங்கி கத்தி வெ ளிப்படுத்த , கங்கைக்கு போகும் பரதேசி நீ நேற்று வரையில் சுக வாசி என்று வாயடைப்பது ,பல வாதப்பிரதிவாதங்களுக்குப்பின் காசி ட்ரிப் அவுட் என்று நாகேஷ் வீடு திரும்பும் வகையில் பாடலும் இசையும் பின்னிப்பிணைந்த இசையமைப்பின் வியாபகம் இப்பாடல் . கேட்டு மகிழ https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDEMAuFo-h6xfcjYa1hkNMAt4Q kaasiku pogum
4 ஜம்புலிங்கமே ஜடாதரா -காசேதான் கடவுளடா -1972 - வாலி, எம் எஸ் வி கோவை சௌந்தர்ராஜன்,
வீரமணி
.
ஒரு டீ க்கடை ஆசாமி சாமியாராக வந்து தப்பும் தவறுமாக ப்பாட , கூட இருப்பவர்கள் அவ்வப்போது சரி செய்ய என நகைச்சுவை தெறிக்கும் பாடல். தென்னகத்து பக்தி ரசமும் மேற்கத்திய இசையின் வீச்சையும் இணைத்து பின்னப்பட்ட இசை , இசைக்கருவிகளின் விரைந்த இயக்கம் பாடலைத்தூக்கி நிறுத்துவதை குறிப்பிட்டே ஆகவேண்டும் . கேட்டு ரசிக்க https://www.google.com/search?q=jambu+lingame+jadadhara+video+song+download&newwindow=1&sca_esv=586607062&sxsrf=AM9HkKl2BDB6GUypokdth6ojB9RXI9 JAMBULINGAME
5
"ஜின்
ஜினுக்கா
சின்னக்கிளி
"-ராஜபார்ட் ரெங்கதுரை -1974 -கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் கூட்டணியில் உருவான வினோத சூழலுக்கான பாடல் =சிவாஜி கணேசனின் ஆழ்ந்த நடிப்பில் நம்மை அசைக்கும் பாடல் -கோமாளியாக வேடம் பூண்ட கலைஞன் சிவாஜி
சோகத்தை மனதில் புதைத்துவிட்டு வெளித்தோற்றத்தில் சிரிப்பை சுமந்து வரும் பாடல். சிரிப்பும் வெறுப்பும் பாடுபவர் உணர்வில் வெளிவருவதாக அமைக்கப்பட்ட இசை. எம் எஸ் வி யின் இசை
விளையாட்டு பாடலின் அமைப்புக்கு பெரிதும் உதவியுள்ளது.
கவிஞர் வள்ளுவரையே வம்புக்கிழுத்து
பாம்பு
வந்து
கடிக்கையில்
யார்
முகத்தில்
பொங்கி
வரும்
சிரிப்பு?
என்று
கேட்பது
நியாயம்
தான்.
சிவாஜி
கணேசனுக்கு
இதெல்லாம்
இயல்பான
செயல்
பார்த்தாலே
தெரியும்
நளினம்
.கேட்டு
ரசிக்க
https://www.google.com/search?q=you+tube+jinjinikka+chinnakkilil+rajapart+rangadurai+video++song+download&newwindow=1&sca_esv=598330860&sxsrf=ACQVn08Tj8KnGmA0aeY39Q842IWLCare raja part jin jinukan
அன்பன் ராமன்
No comments:
Post a Comment