Tuesday, January 16, 2024

DIRECTOR – CV RAJENDRAN

 DIRECTOR – CV RAJENDRAN

இயக்குனர் சி வி ராஜேந்திரன்

எளிமையானவர், பழகுதற்கு இனிமையானவர் , பக்கத்து வீட்டு மனிதர் போல இயல்பாக நடந்து கொள்பவர். சினிமா தோரணை என்பது சிறிதும் இல்லாத 75+ படங்களுக்கு மேல் இயக்கியவர் .மறைந்த ஜெயலலிதா வின் அன்புக்கு பாத்திரமானவர்[அவரால் ராஜீ என்று அழைக்கப்பட்டவர்].

 நான் பெரிதும்  கொண்டாடும் திரு சிவி ஸ்ரீதர் அவர்களின் ஒன்று விட்ட இளைய சகோதரர். ஸ்ரீதருக்கு இருந்த கர்ஜனை இவருக்கு இல்லை -பசு போல் அமைதியானவர் ஆயின் திறமையில் எந்த குறையும் இல்லாத ஆளுமை /நடிகர் திலகம் -ஜெயலலிதா இணை தனை வைத்து பல வெற்றிப்படங்களை உருவாக்கியவர்.

பாடல்களை காட்சிப்படுத்துவதில் வல்லவர்.

UNDER WATER CAMERA இல்லாத காலத்திலேயே ஒளிப்பதிவாளர் பி என் சுந்தரம் உதவியுடன் நீச்சல் குளத்தில் UNDER WATERகாட்சிகளை படம் பிடித்த அசகாய சூரர். பின்னாளில் டேய் அந்த டெக்னீக்கை நான் உபயோகித்துக்கொள்கிறேன்என்று ஸ்ரீதர் இவரிடம் அனுமதி பெற்று அதே உத்தியை இரு வேறு படங்களில் பயன் படுத்துக்கொண்டார் என்பது இவரது தொழில் திறமைக்கு சான்று.

ஸ்ரீதரின் ஆளுமைகளை நன்குணர்ந்தவர் -ஆயின் தனக்கென தனி பாதை வகுத்தவர் -திரு Chitraalayaa கோபு அவர்களின் ஆப்த நண்பர். இத்துணை உண்மைகளும் நான் அவருடன் பழகிய குறுகிய காலத்தில் நான் ஆழ்ந்து புரிந்து கொண்டவை .                   திரு சி வி ஆர் இயக்க விரும்புவது   "ROMANTIC COMEDY "வகை படங்களே . இது- அவரே சொன்னது.  இன்று அவர் நம்மிடையே இல்லை ஆயின் அவர் காட்சிப்படுத்திய படங்களும் பாடல்களும் அவர் பெயர் சொல்லும்.

 1 "கனவில் நடந்ததோ" அனுபவம் புதுமை [1967]

சி வி ராஜேந்திரன் இயக்கிய [பெயருக்கு ஏற்றாற்போல்] முதல் படம்.

1 "கனவில் நடந்ததோ"

இந்த பாடல் காட்சியை கூர்ந்து கவனியுங்கள் .முதல் படமா இது ? ஒளிப்பதிவில் புதுமை , கந்தர்வலோக காட்சிபோல திரைச்சீலைகளைக்கொண்டே ஒரு மாய தோற்றம் கொண்ட காட்சி ; ஒளி அமைப்பில் strobe வகை உத்தியில் வித்தியாசமான உருவ விலகல்கள் [நடிகை ராஜஸ்ரீ எவ்வாறு பதிவிடப்பட்டுள்ளார் -கவனியுங்கள்] 1967 இல் தமிழ் சினிமாவில் slow motion picture registration அதுவும் பாடல் கட்சியில் பல இடங்களில் PN SUNDARAM ஒளிப்பதிவில். திடீரென்று நட்சத்தரங்கள் போல ஒளிரும் ஸ்டூடியோ ஒளி வீச்சுகள் . இசையில் எம் எஸ் வி யின் அதகள ஆதிக்கம் - "கனவில் நடந்த தோ கல்யாண ஊர்வலம் " கண்ணதாசன் வரிகள் பிபிஸ்ரீனிவாஸ் -சுசீலா குரல்களில் வலுவான கோரஸ் பின்னணியில் கருப்பு வெள்ளையில் -பின்னி எடுத்துள்ளனர். தெளிவான ஆளுமை  வெளிப்படும் உழைப்பு. கண்டு களிக்க -https://www.google.com/search?q=ANUBAVAM+PUDHUMAI+1967+MOVIE+SONGKANAVIL+NADANDHADHO++VIDEO++DOWNLOAD&newwindow=1&sca_esv=598493926&sxsrf=ACQVn088WyQ_fCMX6i7v KANAVIL ANUBAVAM PUDHUM,AI 1967 MSV PBS PS  KANNADASAN PN SUNDARAM

2"எங்கள் கல்யாணம் " கலாட்ட கல்யாணம் -1968 - பாடல் வாலி , இசை எம் எஸ் வி குரல்கள் டி எம் எஸ், பி பி எஸ் , பி எஸ், எல் ஆர் . மிகவும் சிக்கலான கா ட்சி, பல கலைஞர்களை அனுசரித்து படமாக்க வேண்டியிருந்ததில் சி வி ஆரின் ஆச்சரியமூட்டும் திட்ட மிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனில் மிகையே அல்ல. 

மிகத்துல்லியமாக திட்டமிட்டு முதலில் இருக்கும் நபர்களையும் அவர்தம் பாடல் வரிகளையும் படம் எடுத்து பின்னர் முறையாக இணைத்து முழுப்பாடலையும் என்னவோ அனைவரும் ஒரே இடத்தில் இருந்து நடித்தது போல் அழகாக எடிட்டிங் செய்து உயிரூட்டியுள்ளனர். இதற்கு சரியான உறுதுணை பி என் சுந்தரம் செய்த ஒளிப்பதிவு ஒளி பேதமே இல்லாமல் ஒரு வெளிப்புறக்காட்சியில் கருப்பு வெள்ளை பிலிமில் -சாதாரண செயல் அல்ல. அது மட்டுமா 1968 இல் எம் எஸ் வி யின் இசை மேலை நாட்டு இசை மாணவர்களின் மனம் கவர் பாடலாக ஹார்வர்ட் பல்கலை மற்றும் கனடா டொரோண்டோ பல்கலை இரண்டிலும் 15 ஆண்டுககுக்கு குறையாமல் WORLD MUSIC பிரிவில் இடம் பெற்று புரட்சி செய்த பாடல். பாடலுக்கும் தகவலுக்கும் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=oAduaxQtReI ENGAL KALYAANAM 1968 VAALI MSV TMS PBS PS LRE   PN SUNDARAM

https://www.google.com/search?q=YOU+TUBE+CV+RAJENDRAN+INTERVIEW+TO+MSV+FANS&newwindow=1&sca_esv=598681343&sxsrf=ACQVn09ONiTnsl03wAJG6xV5ZOUnYgHzoA%3A1705370681028&ei=OeS CVR INTERVIEW [PONNOONJAL ]+ [GALATTA KALYAANAM 13.13 ONWARDS ]

3 ஜில் என்று காற்று வந்ததோ - நில் கவனி காதலி 1969], பாடல் வாலி ,எம் எஸ் வி, டி எம் எஸ் சுசீலா நீச்சல் குள க்காட்சி , தண்ணீரினுள் கண்ணாடி ப்பேழையில் காமெரா வைத்து கடும் உழைப்பில் ஹாலிவுட் படம் போல பதிவிடப்பட்டுள்ளது. மீண்டும், பி என் சுந்தரம் காட்டிய வழியில் பின்னாளில் பிற ஒளிப்பதிவாளர்களும் முனைந்தனர். பாடலில் எம் எஸ் வி வயோலாவை இழைய வைத்து அக்கார்டியனுடன் குழைத்து உருவாக்கிய இசை ஜாலம் ஸ்விம்மிங் பூல் காட்சிக்கென்றே சிறப்பாக பொருந்துவதை பார்த்து ரசிக்க மற்றும் சிவி ராஜேந்திரன் கருத்தினை அறிய இணைப்பு 

https://www.google.com/search?q=jil+endru+kaatru+vandhadho+song+download&oq=JIL+ENDRU+KAATRU+VANDHADHO+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgEECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQ JIL ENDRU KAATRU   www.google.com/search?q=YOU+TUBE+CV+RAJENDRAN+INTERVIEW+TO+MSV+FANS&newwindow=1&sca_esv=598681343&sxsrf=ACQVn09ONiTnsl03wAJG6xV5ZOU CV RAJENDRAN INTERVIEW

மேலும் வளரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. CVR & Sridhar டைரக்ட் பண்ணிய படங்களே தனித்துவம் வாய்ந்தது

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...