Wednesday, January 17, 2024

THE HOME AMBIENCE -2

 THE HOME AMBIENCE   -2  

உள்ளம் மலரும் இல்லம் -2

என்ன மீண்டும் அதே கட்டுரையா? ஆம் , ஆயின் அதன் முற்றுப்பெறாத வேறு சில பகுதிகளை பார்ப்போம். குழந்தைகள் பல பழ வழக்கங்கங்களை தத்தம் இல்லங்களிலேயே கற்றுக்கொள்வதாக பல கருத்துகள் செம்மையாக நிறுவப்பட்டுள்ளன. சொல்லப்போனால் அவர்கள் பகல் பொழுதில் கல்வி நிலையங்களில் தான் அதிகநேரம் செலவிடுகின்றனர் . பின் எப்படி இல்லம் முன்னிலை பெறுகிறது?. இதற்கான சில அடிப்படை உண்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் பள்ளி செல்லாத குழந்தையை பயமுறுத்துகிறோம் .எப்படி எனில் --" சொன்ன பேச்சு கேட்கல்லை ன்னா  உன்னை ஸ்கூல் கொண்டுபோய் தள்ளிடுவேன்".இது அவ்வப்போது விடுக்கப்படும் மிரட்டல். இனொரு வகை மிரட்டல் பள்ளியில்  படிக்கின்ற சிறுவர், சிறுமியருக்கு  "அதோ உங்க வாத்யார் வறார் ,இப்பவே  போய் நீ என்ன செஞ்சுவெச்சிருக்கனு சொல்லி ஒன்ன நல்லா  வெளுக்க சொல்ரேன் " நாளைக்கு ஒன்னை உண்டு-இல்ல னு நிமித்திப்பிடுவார் " நீ பாரு இதுதான் நடக்கும் " என்று குலை நடுங்க வைக்கிறோம். எப்படி எனில்   -குழந்தைகளை நாம் அடிப்பதற்கு பதில் ஆசிரியன்/ஆசிரியை யை அடியாளாக சித்தரித்து விட்டோம். சரி குழந்தையின் கல்வியில் சிறப்பாக மண் அள்ளி போட்டாயிற்று. இதில் ஒரு ஆயுட்கால தவறு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.என்ன தவறு என்பதில் உள்ள பிழை பாம்பு பற்றிய பொதுக்கருத்துக்கு நிகரானது. பாம்பு என்றாலே நம்மை கடிக்கத்தான் வந்துவிட்டதாக நினைக்கிறோம். எனவே அந்த சொல்லே நடுக்கம் தரும். அதுபோலவே ஆசிரியப்பணியினர் அடித்து துவைக்கும் வன்முறையினர் .என்ற உருவகம் பயில்வோர் மனதில் வேரூன்றியதால் அவர்களுக்கு அச்சம் மேலிடுகிறது. அச்சப்பட்ட உள்ளம் ஆசிரியரையோ, அவர் சொல்லும் தகவலையோ /எழுதும் விவரங்களையோ உள் வாங்காது. மாறாக அக்கம் பக்கத்தில் பார்த்து பொழுதைக்கழிக்கும். ஒரு கட்டத்தில் ஆசிரியர் அரக்கர் இனத்தவர் என்று 3ம் வகுப்பிலேயே ஆயுட்கால பயம் வேரூன்றும்.. இங்கு தான் child psychology என்ற பார்வை துறக்கப்பட்டு   பெரியவர்கள் குழந்தையை அடக்கி விட்டதாக பெருமை கொள்கின்றனர். நீங்கள் அடக்கியது குழந்தையை  .ஆனால் முடக்கியது கல்வியின் மீது வரவேண்டிய ஆர்வம்/ ஈடுபாடு இரண்டையும் என்பது மாபெரும் "மனத்தகர்ப்பு" [DESTRUCTION OF MIND] என உணர்வதே இல்லை. சரி, ஒரு சிறுவனை/ சிறுமியை கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் மிரட்டல் வாசகங்களை கவனியுங்கள்

1 உன்னை ஸ்கூல் கொண்டுபோய் தள்ளிடுவேன்-[pre school threar]

2 அதோ உங்க வாத்யார் வறார் ,இப்பவே  போய் நீ என்ன செஞ்சுவெச்சிருக்கனு சொல்லி ஒன்ன நல்லா  வெளுக்க சொல்ரேன் " நாளைக்கு ஒன்னை உண்டு-இல்ல னு நிமித்திப்பிடுவார் " நீ பாரு இதுதான் நடக்கும் " [while at school]

உனக்கு சோறு கிடையாது, உன்னை விளையாட விட மாட்டேன் , நீ  -- டி வி பார்க்க கூடாது என்று தடை விதித்து குழந்தையை கட்டுப்படுத்தாமல் , வேறு ஒருவர் மூலம் உன்னை 'பிய்த்துவிடுவேன் ' என்று சொல்ல காரணம் உங்களின் குழந்தைப்பாசம் உங்களை தடுக்க, நீங்கள் கையாண்ட கற்பனை உத்தி அது . ஆனால், அது கல்வி பயில்வதில் குறுக்கிடுகிறது என்பதை நாம் உணரவே இல்லை. . 

உங்களை அறியாமல், குழந்தையின் மனதில்-பள்ளியும் ஆசிரியர்களும், கொலைகாரக்கூடாரம் என்ற மன நிலைலையை ஏற்படுத்திவிட்டீர்கள். இதுதான்- கல்விகற்றுக்கொள்ள, மிகப்பெரும் தடையாக விஸ்வரூபம் கொள்ளும். இப்போது குறிப்பிட்ட ஆசிரியர் அடிப்பார்/துவைப்பார் என்ற நிலை கடந்து, ஆசிரியர் என்பவர் யாராயினும் தாக்குதல் புரிவார் என்பதாக நினைக்க வைத்து கல்வி வேப்பங்காயாக கசக்கிறது. இவ்விரண்டுக்கும் தொடர்பு உண்டா என்று ஐயம் கொள்வோர் -கவனிக்க. பள்ளிக்கல்வி தொடங்கி சில குழந்தைகளுக்கு ஆங்கிலம், பல குழந்தைகளுக்கு கணக்கு என்ற இரு பாடங்களும் அந்நியப்பட்டுக்கொண்டே வருகின்றன. எவ்வளவு வயதானாலும், உயர் கல்வி நிலையிலும் கூட இவ்விரண்டும் அச்சறுத்தும் பேய்கள் போல் தாண்டவமாடும் Nightmare  நிலைக்கு விரிவடைவதை உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் இது ஏன் ? ஆரம்பக்கல்வி நிலையில் இவற்றை போதிக்க வந்த ஆசிரியர்கள் புரிதலுக்கு உதவாமல் , யாரோ இரண்டு பேர் புரிந்துகொண்டனர் என்று பிறர் குறித்து கவலை கொள்ளாமல் bull doze என்னும் கருவிபோல் இயங்கப்போக அடிப்படை இல்லாமல் சில சொற்களை[ஆங்கிலம்], சில கணக்குகளையே மனப்பாடம் செய்து பாஸ் செய்கின்றனர். மனப்பாடப்பேய் --நம்மை ஆக்கிரமிக்க வழி செய்வதே 'அச்ச உணர்வு' தான். அச்சம் மேலிட்ட மனம், புரிதலில் நாட்டம் கொள்ளாமல் பொழுதைக்கழிக்கும். ஆக கல்விக்கு தொடர்பான எந்த ஒரு அமைப்பு குறித்து தோற்றுவிக்கப்படும் அச்சமும் கண்டிப்பாக தாழ்வு மன நிலையையும் தோல்வியையும் ஏற்படுத்தும். மற்றோர் விளக்கமும் பயன் தரக்கூடும்

மருத்துவக்கல்வியில்- [MBBS பட்டம் பெற] OSTEOLOGY / ORTHOPEDICS என்று எலும்புமண்டலம் குறித்த தேர்வு மிகக்கடினமானது அதில் பலரும் இரண்டு முறை நிச்சயம் பெயில் என்று ஒரு கருத்து உண்டு. அந்த மாணவர்கள் என்ன அறிவு குறைந்தவர்களா?  இல்லவே இல்லை ஆனால் இந்த எழுதப்படாத விதி அவர்களை அச்சம் கொண்டு அசைத்து கவிழ்க்கிறது என்பது கள யதார்த்தம்.

அச்சம் என்ன செய்யும் என்று உணர்த்த-- எவ்வளவு உயர் நிலையிலும் மனிதனை நிலை குலைய வைக்கும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே இல்லம்-- அதில் நிகழும் சொல்லாடல், இன் சொல், வன் சொல் , மிரட்டல், தாக்குதல் என பல வழிகளில் இளம் மனதில் அச்சத்தை விதைக்கும். எனவே, அச்ச உணர்வை தவிர்த்து, எச்சரிக்கை உணர்வை வளர்க்கும் வழி முறைகளை செயல் படுத்தினால் நன்மை விளையும்.

நன்றி

அன்பன் ராமன் 

2 comments:

  1. பெற்றோர்களுக்கும் வாத்தியார்களுக்கும் பயப்படும் மாணவர்கள் இப்போது இல்லை

    ReplyDelete
  2. பேராசிரியர் வெங்கட்ராமன் சொல்வது உண்மை தான். ஆனால் அதற்கான வழியை மாணவர்கள் கையில் ஒப்படைத்தது பெற்றோர்கள் தானே. தங்கள் நிம்மதி கெடக்கூடாது என்ற ஒரு அரைகுறை சிந்தனையில் விளைந்தது தான் இந்த மாணவர்கள் அடங்காமை என்ற போக்கு.

    மேலும் அக்கால பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆணாக இருந்தால் "நீ படிச்சு கிழச்ச" என்றும் ஏதாவது ஒரு துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டால், "ஆமா இதுவே ஒண்ணும் கிழிக்கக் காணோம். அதுல கிழிக்கப் போறயோ" என்று திட்டி அடக்கி தாழ்வு மனப்பான்மை வளர தேவையான உரம் சேர்ப்பர்.


    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...