Thursday, February 29, 2024

DIGNITY OF LABOUR -- 2

 DIGNITY OF LABOUR -- 2

உழைப்பின் பெருமை-2

சென்ற பதிவில் உழைப்பு என்பதில் பயில்வோர் ஏன் நாட்டம் கொள்ள வேண்டும் என சில கருத்துகள் பேசப்பட்டன. உழைப்பு என்பது இரு வகைப்படும். 1. உடல் சார்ந்தது 2. மனம் சார்ந்தது .இவ்விரண்டில் மனம் சார்ந்த உழைப்பு மிக எளிதில் சோர்வடைய வைக்கும். எனவே மனம் பேணுதல் என்ற அடிப்படை தேவைகளையும் உத்திகளையும் புரிந்துகொள்ளாமல் உட்கார்ந்து படிக்கிறேன் என்று செயல் படுபவர்கள் மிக தீவிர நுணுக்கம் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். மனம் என்ற சொல் உடலில் எந்த உறுப்பு என்றால் தெளிவான விளக்கம் பெற இயலாது. 

மனம் என்பது அவ்வப்போது தோன்றி அடுத்த நாளிலோ ,பொழுதிலோ, விநாடியிலோ மின்னல்போல மறையும் வல்லமை என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அது என்ன வல்லமை? ஆம் பல பழைய தகவல்களை நொடிப்பொழுதில் மீட்டெடுக்கும் அதிவேக கம்பியூட்டர் போன்ற வல்லமை ச்செயலே மனம் என்று உணர்ந்துள்ளது எனது புரிதல்.. அது பிழை எனில் எது தவறு என்று உணர்த்தினால் ஏற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறேன். நான் அறிந்த வரையில் மற்றும் வகையில் மனம் என்பது சிந்தனை சார்ந்த நிலைப்பாடு. அது நெஞ்சுப்பகுதியா, இதயத்துள் இருப்பதா, தலையில் எனில் முன் மண்டையிலா பின் மண்டையிலா ? என்று தூண்டித்துருவி அலசி ஆய்ந்தாலும் விடை என்பது விரக்தி  மட்டுமே... நீ என்ன வேதாந்தம்  பேசுகிறாய் ? என்று பொங்க வேண்டாம். நாம் பொங்கினாலும், .கொந்தளித்தாலும் மனம் ஒரு குரங்குபோல் அதன் போக்கிலேயே செல்லப்பார்க்கும். 

ஐயோ நீ என்ன சொல்ல வருகிறாய் என்று ரத்தஅழுத்தம் உண்டாகிறதா? அமைதி அமைதி--3 ,4 வாசகங்களுக்கே BP எகிறும் என்றால் கட்டுக்கட்டாக வக்கீல் குமாஸ்தா போல புத்தகங்களை சுமந்து அவற்றிற்கான குறிப்பு   [NOTES ] மனப்பாடம் செய்தால் 12, 13 வயதிலேயே BP படபடப்பு எல்லாம் வரும். அப்படியானால் நாங்கள் படபடத்து சாக வேண்டுமா ? என்று மாணவர்கள் கற்பனைப்பிரதேசத்திற் [எம லோகப்பகுதிக்] .குள் எட்டிப்பார்க்க வேண்டாம். மாடியில் இருந்து கட்டாந்தரையில் குதிப்பது வீரம் அல்ல கோழைகள் எடுக்கும் கையாலாகாத கொடூர முடிவு. மனித வாழ்விற்கு முடிவுரை எழுதவா பிறந்தோம்? அதெல்லாம் எனக்கு தெரியாது என்று தப்பிக்க முயலாமல்  நாம் முறையாக முன்னேற என்ன வழி ? அதற்கு என்ன தேவை --யோசிப்போம். 

முறையாக முன்னேறஎன்பதே நாம் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டிய, கோட்பாடு. 'முறையாக' என்பது, புரிதல்-- என்னும் மனிதகுல சொத்தின் வழிவருவது. தனி நபர் ஒவ்வொருவரும் தனது கல்விநிலைக்கேற்ப தகவல்களை பிழையின்றி புரிந்துகொண்டு மென்மேலும் தகவல் திரட்டி முன்னேற்றம் காணுதலே .[அதுவே முறையான முன்னேற்றம்] ஏனைய எதுவும் புரிதலை வீழ்த்துவது இயலாத ஒன்று. . இப்போது நான் முன்னம் தெரிவித்த மனம் என்ற சொல்லுடன் -கல்வி பற்றிய முன்னேற்றம் என்ன என யோசியுங்கள். புரிதல் என்பது சிந்தனை த்தொடருடன் தொடர்ந்து பிணைப்பது . 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தகவல் கிடைத்தாலும் முறையான இடத்தில் புதியக்கருத்தைப்பிணைப்பதே,  புரிதல் என்னும்  ஆக்க சக்தி.                                                           

 முந்தைய சங்கிலியில் பிணைப்புப்பகுதி தெளிவாக இருக்கும் போது மறதி என்ற நோய்  அண்டாது விலகிச்செல்லும். புரிதலில் சிறிய குழப்பம் தோன்றினாலும் உடனே மறதி தலை தூக்கும்.

புரிதல், நினைவாற்றல், மறதி இம்மூன்றும் வெவ்வேறு வகையில் தொடர்புடையவை . புரிந்தவை நினைவாற்றல் என்ற தொகுப்புக்குள் நுழைந்துவிடும் , புரியாதன பெரும்பாலும் மறதி என்ற புதை மணலிலும் சிறு சிறு பகுதிகள் மேலோட்டமாக நினைவில் நின்று நினைவாற்றல் போல நின்று கொண்டு கண்ணா மூச்சி ஆடுவதுபோல் பாடாய் படுத்தும்.. புரிந்தது என்றோ புரியவில்லை என்றோ முற்றாக பிரிக்க முடியாத குழம்பிய மனநிலையை எளிதாக ஏற்படுத்தும். திடீரென்று ஐயோ தேர்வு வந்துவிட்டதே என்று அலறி ப்புடைத்துக்கொண்டு பலவற்றையும் விரைந்து படிக்க மலைபோல் இருக்கும் பாடச்சுமையை நினைத்ததும் மலைஅடியில் சிக்கிய எலியாக மூச்சுத்திணறும். முன்னர் நன்றாக படித்திருந்ததாக நம் நினைத்திருந்த பகுதிகள் நீரில் வீழ்ந்த பிஸ்கட் போல கரைந்து சிதற எங்காவது ஓடி விடலாமா என்று தோன்றும். இப்படி துவங்கும் செயல் தான் வீட்டை விட்டு ஓடிப்போவது என்ற 10ம் வகுப்பு பழக்கம். இது நாளடைவில் வேரூன்றி காதல் மாயையில் ஓடுவது வரை நீட்சி அடைந்துள்ளது. இப்போது ஓடிப்[போவது தான் டாபிக்கா [topic?] .  என்று கேட்காதீர்கள். டாபிக் அது அல்ல ;எதுவும் புரியாமல் ஏற்படும் மனச்சுமைக்கு தாற்காலிக நிம்மதி ஓடுவது அதற்கெனவீட்டிலேயே  திருடுவது போன்ற திரை மறைவு செயல்கள்.

இந்த கோர தாண்டவ மன நிலைக்கு நம்மை நாமே உட்படுத்திக்கொள்கிறோம் என்பதை முதலில் உணர்க.  அடிப்படைத்தவறு --புரிதல் இல்லாமல் படித்து ஒப்பித்து வெற்றி என்று முதலில் இறுமாந்து பின்னர் ஏமாந்து செய்வதறியாது கையைப்பிசைந்து கொண்டு நிற்பது இவ்வாறு தவறான அணுகுமுறையை மேற்கொள்வதைவிட, இதற்கான காரணியையும் குழப்பத்தையும் அதனால் வரும் இது போல் திகைப்பதையும் முற்றாக கைவிடுதல் தவறில்லை என்றே உணர்க.

மூன்று முக்கிய பழக்கங்களை வளர்த்துக்கொண்டால் குழப்பம் தயக்கம், மண்டை வெடிக்கும்  நிலை போன்ற அச்சுறுத்தல் இன்றி சிறப்பாக பயில முடியும் .

1 அன்றாடம் படித்து அன்றைய பகுதியை சரியாக உள்வாங்குதல்  [மறுநாள் எழுதிப்பார்த்து நினைவு கூறுதல்]

2 குறைவான நினைவாற்றல் [low  retention உள்ளவர்கள் ] எழுதி எழுதிப்பார்த்து  எந்த தகவலையும் மெல்ல மெல்ல உள்வாங்கிவிடலாம்

3. சீரான சத்தான உணவு [பிஸ்ஸா பர்கர், சாட் -அல்ல], நடை/ உடற் பயிற்சி நல்ல உறக்கம் 9.30pm -4.30am பகலில் அல்ல ]  காலையில் படித்தல்

இம்மூன்றையும் சீராகப்பின்பற்ற நினைவாற்றல் உங்களின் செல்ல நாய்க்குட்டி போல பின் தொடரும். நினைத்தவுடன் உங்களுக்கு உதவும். இது அவ்வளவும் நமது மனதினையும் எண்ணங்களை நிர்வகிக்கும் எளிய வழி முறைகள்.. தேவை இல்லாமல் மருந்து மாத்திரை மாந்த்ரீகம் ஜோதிடன் ஜோதிடம் என்று அலையாதீர்கள். உங்களுக்கு நீங்களே எஜமானர் , மனமே ஆசான் , உழைப்பு [அன்றாட உழைப்பு] சிறுகச்சிறுக கட்டப்படும் வீடு போல நெடிது உயர்ந்து கம்பீர நிலையை அடைய இயலும்.. நம்பிக்கை --அதாவது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம். மனம் என்பது மோப்ப நாய் போன்றது. நன்றாகப்பழக்கினால் பேருதவி செய்யும். எனவே புரிந்து கொள்ளும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் குழப்பம், அச்சம் இவை இன்றி முறையாக முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

நன்றி

அன்பன் ராமன் 

DIRECTOR T. PRAKASH RAO

DIRECTOR T. PRAKASH  RAO

இயக்குனர்  டி .பிரகாஷ் ராவ்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அந்நாளில் தமிழ் படங்களில் ஆந்திரமாநில திறமையாளர்கள் பல துறைகளிலும் புகழ் பெற்று  விளங்கினர். அவ்வகையில் திரு டி .பிரகாஷ் ராவ் அவர்கள் நன்கு அறியப்பட்டவர் என்பது திரை உலக நிகழ்வுகளை புரிந்துகொண்டவர்களுக்கு வியப்பில்லை.. இன்னும் சொல்லப்போனால் `இவர் கணிசமான எண்ணிக்கையில் ஹிந்தி, தெலுங்கு தமிழ் படங்களில் இயக்குனராக பெயர் எடுத்தவர். அவ்வகையில் அந்தக்கால ஒளிப்பதிவு ஜாம்பவான்கள், கமல் கோஷ் , பிமல் ராய் , வின்சென்ட், மார்கஸ் பார்ட்லே என்ற அனைவருடனும் பணியாற்றுபவர். தமிழ் சினிமாவில் நன்கு செய்யப்பட்ட வீனஸ் நிறுவனத்தாரின் ஆஸ்தான இயக்குனர் எனில் மிகை அல்ல. இந்த கூட்டணியில் இருந்து உதித்தவர் தான் இயக்குனர் ஸ்ரீதர் . சரி திரு பிரகாஷ் ராவ் அவர்களின் ஆக்கங்களை பார்ப்போம் 

 1. 'தேனுண்ணும் வண்டு ' படம் அமர தீபம் [1956] பாடல் காமாட்சி சுந்தரம், இசை டி .சலபதிராவ், குரல்கள் ஏ எம் ராஜா, பி சுசீலா.

தமிழகமெங்கும் ரீங்கரித்த பாடல் [வண்டு அல்லவா]. இன்று கேட்டாலும் மனம் லயிக்கும் மென்மையான மதுரகீதம். மொழி, இசை, குரல் அனைத்தும் போட்டிபோட சாவித்ரி .சிவாஜி இணைந்து பாடும் காட்சி. கேட்டு களிக்க இணைப்பு

https://www.google.com/search?q=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS&oq=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhG 1956  T CHALAPATHI RAO AM RAJA P SUSEELAA KAAMAKSHI SNDHARAM

2 ஜாலிலோ ஜிம்கானா [அமரதீபம் -1956] பாடல் தஞ்சை ராமையாதாஸ் , இசை டி .சலபதிராவ் , குரல் ஜிக்கி

தெருவில் பாடித்திரியும் நாடோடி வகை பாடல், பத்மினி நாட்டியம், கதையோடு ஒன்றிய பாடல்; இல்லையேல் அந்தக்காலத்தில் படத்தில் பாடல் இடம் பெறாது. மிகவும் பிரபலமாக ஒலித்த மற்றும் முணுமுணுக்கப்பட்ட பாடல் கண்டு, கேட்டு மகிழ  இணைப்பு இதோ:

https://www.google.com/search?q=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS&oq=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGA JAALILI[O JIMKHANA  JIKKI THANJAI RAAMIAH DAS

3 முல்லை மலர் மேலே --உத்தம புத்திரன் [1958] பாடல் அ .மருதகாசி, இசை ஜி .ராமநாதன் , குரல்கள் டி எம் எஸ் , பி சுசீலா.

உத்தமபுத்திரன் [படம் ]சினிமாசவைப்புரட்டிப்போட்ட கதை காட்சி, வசனம் பாடல் என்று ஒருபுறம்புரட்சி செய்ய இன்னொருபுறம் இரு வேட  நடிப்பு மற்றும் அனாயாசமான ஒளிப்பதிவு [இப்படிக்கூட முடியுமா? வகை] உபாயம் /உபயம் வின்சென்ட். இசை யில் ஜி ராமநாதன் ஒரு ராட்ஷசன் என்பதே முன்னரே தெரியும் எனினும் உத்தமபுத்திரனில் இந்த ராட்ஷசன் கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாதவை. கேட்கக்கேட்க பரவசமும் குதூகலமும் நம்மைக்கவ்விக்கொள்ள அமைக்கப்பட்ட இசை . இந்தப்பாடல் இசை அமைப்பாளர்களையே வியப்படைய வைத்தது எனில் பேச என்ன இருக்கிறது? ஏராளமாக இருக்கிறது. என் போன்றோர் உளறுவதை விட , விற்பன்னர்களின் விளக்கங்களை ஆழ்ந்து ரசியுங்கள் அப்போது புரியும் திரை இசை ஒன்றும் எளிதான கிள்ளுக்கீரை அல்ல என்பது. எனவே திரு அனந்து மற்றும் சுபஸ்ரீ தணிகாசலம் QFR இணைப்புகளையும்      தந்துள்ளேன்.--   மிக மிக உன்னிப்பாக ரசித்து மகிழ

https://www.google.com/search?q=tamil+movie+UTHAMAPUTHIRAN+SONG+MULLAI+MALAR+MELE+VIDEO&newwindow=1&sca_esv=32c94e6edcb8598c&sxsrf=ACQVn09uZDnzbT4-D5dfHB1oQtOPk6wnPg%3A

UTHAMA PUTHIRAN  G R  MULLAI MALAR MELE MARUDHAKASI TMS PS

https://www.google.com/search?q=tamil+movie+UTHAMAPUTHIRAN+SONG+MULLAI+MALAR+MELE+VIDEO&newwindow=1&sca_esv=32c94e6edcb8598c&sxsrf=ACQVn09uZDnzbT4-D5dfHB1oQtOPk6wnPg%3A1 ANANTHU

https://www.google.com/search?q=song+mullai+malar+mele+QFR&oq=song+mullai+malar+mele+QFR+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigAdIBCTIwMTg4ajBqNKgCAL

QFR MULLAI MALAR MELE

வளரும்

அன்பன் ராமன்

 

 

 

Thursday, February 22, 2024

S. JANAKI [POSTING NO. 900]

S. JANAKI

எஸ் ஜானகி                                       POSTING NO.   900

ஆந்திர மாநிலத்தவர் . தென் இந்திய மொழிகள் அனைத்திலும் குரல் பதித்தவர், தனித்தும், டூயட் வகை ப்பாடல்கள் பலவற்றிலும் சிறப்பாகப்பாடும் வல்லமை படைத்தவர். மேலும் குழந்தை குரலிலும் பாடக்கூடியவர். சில ஆண்டுகளாக பாடுவதை நிறுத்திவிட்டார். திரை கானத்தில் ஆழ்ந்த அனுபவஸ்தர் . எண்ணற்ற பாடல்கள் அவரின் புகழுக்கு  கட்டியம் கூறும் வகையின.. . சரி உலகின் திறமைசாலிகள் பல காலம் நிழலில் இருந்து மிக தாமதமாக எலுமிச்சை ஒளிக்கு [LIME LIGHT ]வருவது ஏன் --புரியாத புதிர்.. இது வேறு சிலருக்கு 'சுய தம்பட்டம் வாசிக்க பெரிய வாய்ப்பாகப் போய்விடுகிறது..  இருக்கட்டும் அதை  பிறகு பார்ப்போம்

1 'போக்கிரியோ சாக்கிறியோ'-அடுத்தவீட்டுப்பெண் -பாடல் ராமையா தாஸ் --- இசை ஆதிநாராயண ராவ் , குரல் எஸ் ஜானகி.

இசை அமைப்பாளர் திரு ஆதி நாராயண ராவ் நடிகை அஞ்சலி தேவியின் கணவர்

எந்த காலகட்டத்தில் ஜப்பானிய வகை இசையில் பாடி இருக்கிறார். ஜானகி.

அன்றைய அவரது குரல் மிக எளிதாக பொருந்துவது பாடலுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.. கேட்டு மகிழ 

https://www.youtube.com/watch?v=NUZuedMq3Ow&list=PLylD6xtQiKW6_mZ_thzbw4he5SEnKIDqk&index=8 POKKIRIYO

2 'சிங்காரவேலனே தேவா' 'கொஞ்சும் சலங்கை ' [1961] பாடல் கு. மா பாலசுப்பிரமணியம், இசை எஸ் எம் சுப்பையா நாயுடு, குரல் எஸ் ஜானகி , நாதஸ்வரம் =காருகுறிச்சி அருணாச்சலம் வண்ணம் டெக்னி கலர் .

 கால காலத்துக்கும் வியப்பின் விளிம்பிலேயே நம்மை நிறுத்தும் பாடல். 1961 இல் ட்ராக் வசதி இல்லாத நாளில், குரலும், நாதஸ்வரமும் தனித்தனியே பதிவிட்டப்பட்டு பின்னர் மிக நேர்த்தியாக இரண்டும் இணைக்கப்பட்டு ஏதோ ஒரே சமயத்தில் இரண்டு கலைஞர்களும் அருகில் இருந்து பாடியது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் பாடல்.

அதிலும் காருகுறிச்சியார் தனது பங்கை வாசித்தபின் , ஜானகி வந்து பிசகாமல் பாடி பதிவாகியுள்ள விந்தை. சுப்பையா நாயுடு எவ்வளவு நுணுக்கமாக மேற்பார்வை செய்திருப்பார் -சற்று யோசிப்போம். இது போல் வாய்ப்பு ஜானகி க்கு கிடைத்ததை பிறர் நினைக்காமலா  இருப்பார்கள்?. கேட்டு மகிழ

https://www.google.com/search?q=singara+velane+deva+song+video+tamil+download&newwindow=1&sca_esv=85d58da520b30782&sxsrf=ACQVn09YenBQS2tS7zXwBVPb3rJWm-xw2Q%3A1708646389927 singara velane deva 1961 konjum salangai

3 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி [1962] -பாசம் - பாடல் கண்ணதாசன் -  இசை வி-ரா, குரல் ஜானகி.

ஒரு தார் சாலையில் பயணிக்கும் இரட்டை மாட்டு வண்டி அதற்கெ ன வடிவமைத்த பாடல் . அனாயாசமாகப்பாடி வெற்றி ஈட்டிய பாடல் . கேட்டு மகிழ

https://www.google.com/search?q=sjal+jal+jal+ennum+salangai+oli+video+song+download&newwindow=1&sca_esv=87825aabcf9e96cb&cs=1&biw=1600&bih=773&sxsrf=ACQVn0_Z65zIJUqTwtbmhpMkxK pasam 1962 kd v r

4 பொன்னென்பேன் -போலீஸ்காரன் மகள் -1962 கண்ணதாசன் -வி, ரா, குரல்=பிபி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி.                                    ஒரு மென்மையான ஆனால் மேன்மையான டூயட் . மிக மிக நளினம் சொல், குரல் இசை , பயணம் அனைத்திலும் அன்பு தவழும் பாடல் கேட்டு மகிழ -

https://www.google.com/search?q=ponnenben+siru+poovenben+video+song+download&newwindow=1&sca_esv=dfe26d33caab7b7d&sxsrf=ACQVn09gT3tk8E9jH6KCipnZ_akm3czYeA%3A1708647119736& ponnenben 1963 police kaaran magal

https://www.youtube.com/watch?v=bRiMRm4kpsw PON ENBEN

5"நினைத்தால் போதும்" -நெஞ்சிருக்கும் வரை 1967,கண்ணதாசன், விஸ்வாநாதன், குரல் எஸ் ஜானகி

நாட்டியப்பாடல் எளிதல் பாடிவிட்டு முடியாத வேகமும், சங்கதிகளும் ஏற்ற இறக்கங்கங்களும், மனப்போராட்டம் வெளிப்படும் வகை இசையும் தாங்கி வந்த காவியப்பாடல் எம் எஸ் வி யின் கற்பனையில் உதித்த நளினம் இது. கேட்டு மகிழ  

https://www.google.com/search?q=ninaiththaal+podhum+paaduven+video+song+download&newwindow=1&sca_esv=dfe26d33caab7b7d&cs=1&biw=1600&bih=773&sxsrf=ACQVn0-zqCbia9ki_iwKlq7xM9j ninaithaal podhum paduven 1967

6 'பௌர்ணமி நிலவில்' [கன்னிப்பெண் -1969 ] வாலி , விஸ்வநாதன் குரல்-எஸ் பி பி , எஸ் ஜானகி. மின்னல் வேகத்தில் எம் எஸ் வி மெட்டமைத்த 5, 6 வகைகளில் எதை விடுவது என்று அனைவரும் குழம்பி இறுதியில் இடம் பிடித்த பாடல் அல்லவா ?சோடை போகுமா -ஒரு நாளும் போகாது.

இந்தப்பாடல் ஒரு இளமைத்துள்ளல். இன்றைய சூரியாவை அன்றைய சிவகுமாரில் காணலாம். நிர்மலா சிறப்பாக ஈடு கொடுத்து நடித்திருப்பதும், பாடலின் வேகத்துக்கும் தாள ஜாலத்துக்கும் பாடகர்கள் வெகு நேர்த்தியாக பங்களித்துள்ளது -இன்றும் கூட வெகு சிலரால் மட்டுமே சத்தியம் . ஒரு இளம் காதலர் டூயட்டுக்கு இலக்கணம் சொல்லும் பாடல் . கேட்டு மகிழ

https://www.dailymotion.com/video/x4od9o5 pournami nilavil vaali msv, spb sj

https://www.google.com/search?q=qfr+pournam+i+nilavil+video+song+kannippen&oq=QFR+POURNAM+I+NILAVIL+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigA   QFR

திரை உலகம் கண் மூடித்தனமாக கோட்டை விட்ட ஏதாவது ஒன்றைச்சொல், என்று கேட்டால் நான் சொல்வேன் கண்ணதாசன்- விஸ்வநாதன் இனைந்து பாடல் உருவாக்கும் நேர்த்தியை காட்சியாகப்பதிவு செய்யாமல் ஒரு யுகத்தில் இடம் பெற்ற அபூர்வத்தை இழந்து நிற்பதுதான்.

குறைந்த பட்சம் பிந்தைய தலைமுறையாவது 'நாம் ஒன்றும்  பெரிய வித்தகர்கள் அல்ல என்ற உண்மையையாவது உணர்ந்திருக்கும்; அதுபோன்ற நிகழ்வுகள், கம்போசிங் , டிஸ்கஷன் , சந்தத்துக்கா சொந்தத்துக்கா , செட்டியாரே, டேய் சும்மாஇருடா போன்ற வாத மோதல்கள் இப்போது பார்த்தால் எவ்வளவு படிப்பினையாக இருந்திருக்கும். பாடல் ஆக்கம் மூடு மந்திரம் அல்ல என்பது செம்மையாக நிறுவப்பட்டிருக்கும். ஒரு யுக பாவத்தை செய்துவிட்டது தமிழ் திரை உலகம்.

 ஒரு சிறிய பிராயச்சித்தமாக வந்த பாடல்.

7 சிப்பி இருக்குது 'வறுமையின் நிறம் சிவப்பு' கண்ணதாசன், விஸ்வநாதன், எஸ்பி பி , எஸ் ஜானகி . பெண்பாத்திரம் எம் எஸ் வி யையும், ஆண் பாத்திரம் கண்ணதாசனையும்  நினைவூட்டும் அமைப்பில். மிகவும் பேசப்பட்ட பாடல்.

இணைப்பிற்கு

https://www.google.com/search?q=sipi+irukkudhu+muthu+irukudhu+video+song&oq=sipi+irukkudhu+muthu+irukudhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGA            vis u  spb sj

இவ்வளவு பாடல் வகைகளை என்றோ தமிழ் திரை ஜானகியின் வாயிலாக பதிவிட்டுள்ளது. சிலர் ஏதோ தாங்கள் தான் ஜானகியை கண்டெடுத்து போல் உளறுவது , ஆத்திரத்தை கிளறுவது மட்டும் அல்ல இது என்ன பிக்காரி வேலை என்று கேட்கத்தோன்றுகிறது.

நன்றி

அன்பன் கே. ராமன்


GRATIFICATION- CRIPPLING WORK -3

 GRATIFICATION- CRIPPLING WORK -3                 

லஞ்சம்/ வேலை நிறுத்தம்  -3

பொதுவான சமுதாயப்பார்வை எளிதில் புரிந்துகொள்ளவோ முற்றிலும் நம்பிவிடக்கூடியதோ அல்ல. ஏனெனில் எதிராளியின் மனநிலையை ஒட்டியே கருத்தை சொல்லி [உள்ளூர வேறொரு செயல் திட்டம் வைத்திருப்பர்] ஐவரும் நமது நிலைப்பாடு கொண்டவர் என்று நம்பி நாம் ஏதாவது கருத்து சொல்ல, அதை நமக்கு எதிராகவே திருப்பி விடுவார்கள். ஏதாவது கேட்டால் ஐயோ எனக்கு ஒன்றும் தெரியாதே என்பார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு தேர்தலில் ஒரு விரும்பத்தகாத பிரிவினர் பெரும்பான்மை பெற்று விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது எப்படி நிகழ்ந்தது என்றும் பலரும் வியக்க , நம் எவரைக்கேட்டாலும் நான்  அப்படி வாக்களிக்கவில்லை   என்று விலகிக்கொள்வார்கள். ஏன் -அவர்களுக்கு தெரியும் வெகுஜன மனநிலை வேறு என்று. ஆனால் ஏதோ தனிப்பட்ட திட்ட அடிப்படையில் செயல் படுவர். இது என்ன எனில் உள்ளூர ஏதாவது கணக்கு/ ஒப்பந்தம் வைத்துக்கொண்டு, எம் எல் -நம்மவர் எனில் இன்னின்ன சலுகைகளைப்பெறலாம் என்று மத/ ஜாதி/ மொழி அடிப்படையில் 'மந்திராலோசனை' செய்து ஏடாகூடமாக தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி காரியம் சாதிப்பார்கள்.. மேலும் பாருங்கள்; அவர் லஞ்சம் வாங்குகிறார் இவர் லஞ்சம் வாங்குகிறார் என்று பிறரிடம் பேசி, இவர் லஞ்சம் வாங்காதவர் போல வேடம் புனைந்து ஏமாற்றுவார். அதாவது லஞ்சம் வாங்க சமூக ஒப்புதல் கிடையாது. அது ஒரு அருவருக்கத்தக்க செயல் என்பதாக தெருவில்/ உற்றார் மத்தியில் பேசிவிட்டு , மறுநாள் கர்மசிரத்தையாக லஞ்சம் வாங்க தேவையான உத்திகளோடு காத்திருப்பார்.முதல் உத்தி .நமது பழைய கடிதத்தை எவரும் எடுத்துவிட முடியாத இடத்தில் மறைத்துவிடுவார். நாம் அவர் சொன்ன தேதியில் பார்க்கப்போகும் போ து மிக அன்பொழுக வாங்க என்று இன்முகம் காட்டுவார் . நமது பணி நிறைவடைந்துவிடும் போலிருக்கிறது என்று நாமும் என்று பல்லைக்காட்டிக்கொண்டிருக்க , உக்காருங்க இதோ வந்தூர் ரேன்  . என்று காற்றில் மறைவார். நமது பொறுமை தாண்டி போனில் அழைத்தால் / என்று ஏதோ ஒரு வை சொல்லி , மீட்டிங் இல் இருக்கேன் 3.30க்கு வந்துடுவேன் என்று 12.05 க்கு சொல்லி , நீங்க சாப்பிட்டுட்டு வந்துருங்க என்பார். அதாவது இன்று உங்கள் வேலை நடவாது. திடீரென்று கீழே வந்து நீங்க எப்ப அப்ளை பண்ணினீங்க என்பார். நாம் தேதியை சொன்னதும், இல்லையே உங்கபேப்பரே அங்க இல்லை கிட்ட சொல்லிட்டு இவ்வளவு நேரம் தேடிட்டேன் பேப்பர் இல்லை என்று புளியை கரைப்பார். புதிய கடிதம் கொடுத்தால் , மீண்டும் நம்பர் போட்டு, வரிசை என் 120 க்கு மேல் அதிகமாகி , இன்னும் 35-40 தினம் கடந்து தான் எஸ்டிமேட் போட்டு  , பின்னர் அலாட்மென்ட் என்று புதிபுதிதாக  நாமகரணம் சூட்டி நம்மை திகைப்பில் கோபத்திலும் ஆழ்த்துவர். இவ்வளவும் நம்ம எதிர்வீட்டுக்காரர் அரங்கேற்றும் ஜால வித்தை. வேறொன்றுமில்லை, உங்களிடம் லஞ்சம் கேட்டால் நீங்கள் தெருவெங்கும் புகழ் பரப்புவீ ர்கள்.   . அதை முறியடிக்க  அயனான திட்டம் உண்டு. அடுத்தவாரம் வாங்க என்று உங்களுக்கு சற்று மூச்சு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

தொடரும்

அன்பன் ராமன்   

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...