DIRECTOR T. PRAKASH RAO
இயக்குனர் டி .பிரகாஷ் ராவ்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அந்நாளில் தமிழ் படங்களில் ஆந்திரமாநில
திறமையாளர்கள் பல துறைகளிலும் புகழ் பெற்று
விளங்கினர். அவ்வகையில் திரு டி .பிரகாஷ் ராவ் அவர்கள் நன்கு அறியப்பட்டவர்
என்பது திரை உலக நிகழ்வுகளை புரிந்துகொண்டவர்களுக்கு வியப்பில்லை.. இன்னும்
சொல்லப்போனால் `இவர் கணிசமான எண்ணிக்கையில் ஹிந்தி, தெலுங்கு தமிழ்
படங்களில் இயக்குனராக பெயர் எடுத்தவர். அவ்வகையில் அந்தக்கால ஒளிப்பதிவு
ஜாம்பவான்கள், கமல் கோஷ் , பிமல் ராய் , வின்சென்ட், மார்கஸ் பார்ட்லே
என்ற அனைவருடனும் பணியாற்றுபவர். தமிழ் சினிமாவில் நன்கு செய்யப்பட்ட வீனஸ்
நிறுவனத்தாரின் ஆஸ்தான இயக்குனர் எனில் மிகை அல்ல. இந்த கூட்டணியில் இருந்து
உதித்தவர் தான் இயக்குனர் ஸ்ரீதர் . சரி திரு பிரகாஷ் ராவ் அவர்களின் ஆக்கங்களை
பார்ப்போம்
1. 'தேனுண்ணும் வண்டு ' படம் அமர தீபம்
[1956] பாடல் காமாட்சி சுந்தரம், இசை டி .சலபதிராவ், குரல்கள் ஏ எம் ராஜா, பி சுசீலா.
தமிழகமெங்கும் ரீங்கரித்த பாடல் [வண்டு அல்லவா]. இன்று கேட்டாலும் மனம்
லயிக்கும் மென்மையான மதுரகீதம். மொழி, இசை, குரல் அனைத்தும் போட்டிபோட சாவித்ரி .சிவாஜி இணைந்து பாடும்
காட்சி. கேட்டு களிக்க இணைப்பு
https://www.google.com/search?q=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS&oq=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhG 1956 T CHALAPATHI RAO AM RAJA P SUSEELAA KAAMAKSHI
SNDHARAM
2 ஜாலிலோ ஜிம்கானா
[அமரதீபம் -1956]
பாடல் தஞ்சை ராமையாதாஸ் , இசை டி .சலபதிராவ்
, குரல் ஜிக்கி
தெருவில் பாடித்திரியும் நாடோடி வகை பாடல், பத்மினி நாட்டியம், கதையோடு ஒன்றிய பாடல்; இல்லையேல்
அந்தக்காலத்தில் படத்தில் பாடல் இடம்
பெறாது. மிகவும் பிரபலமாக ஒலித்த மற்றும் முணுமுணுக்கப்பட்ட பாடல் கண்டு, கேட்டு மகிழ
இணைப்பு இதோ:
https://www.google.com/search?q=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS&oq=TAMIL+MOVIE+AMARA+DEEPAM+VIDEO+SONGS+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGA JAALILI[O JIMKHANA JIKKI THANJAI RAAMIAH DAS
3 முல்லை மலர் மேலே
--உத்தம புத்திரன் [1958] பாடல் அ .மருதகாசி, இசை ஜி .ராமநாதன் , குரல்கள் டி எம்
எஸ் , பி சுசீலா.
உத்தமபுத்திரன் [படம் ]சினிமாசவைப்புரட்டிப்போட்ட கதை காட்சி, வசனம் பாடல் என்று
ஒருபுறம்புரட்சி செய்ய இன்னொருபுறம் இரு வேட
நடிப்பு மற்றும் அனாயாசமான ஒளிப்பதிவு [இப்படிக்கூட முடியுமா? வகை] உபாயம்
/உபயம் வின்சென்ட். இசை யில் ஜி ராமநாதன் ஒரு ராட்ஷசன் என்பதே முன்னரே தெரியும்
எனினும் உத்தமபுத்திரனில் இந்த ராட்ஷசன் கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
கேட்கக்கேட்க பரவசமும் குதூகலமும் நம்மைக்கவ்விக்கொள்ள அமைக்கப்பட்ட இசை .
இந்தப்பாடல் இசை அமைப்பாளர்களையே வியப்படைய வைத்தது எனில் பேச என்ன இருக்கிறது? ஏராளமாக
இருக்கிறது. என் போன்றோர் உளறுவதை விட , விற்பன்னர்களின்
விளக்கங்களை ஆழ்ந்து ரசியுங்கள் அப்போது புரியும் திரை இசை ஒன்றும் எளிதான
கிள்ளுக்கீரை அல்ல என்பது. எனவே திரு அனந்து மற்றும் சுபஸ்ரீ தணிகாசலம் QFR இணைப்புகளையும் தந்துள்ளேன்.-- மிக மிக உன்னிப்பாக
ரசித்து மகிழ
UTHAMA PUTHIRAN
G R MULLAI MALAR MELE MARUDHAKASI
TMS PS
QFR MULLAI MALAR MELE
வளரும்
அன்பன் ராமன்
நீர் குறிப்பிட்ட பாடல்களில் முல்லை மலர் மேலே பாட்டு ஒரு தரமான பாட்டு
ReplyDeleteஜாலிலோ ஜிம்கானா ஒரு டப்பா பாட்டு
இதை அந்தப்படத்தை பார்த்த நாளிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பிரகாஷ் ராவை இதில் சம்பத்தப்படுத்தவில்லை