Thursday, February 29, 2024

DIGNITY OF LABOUR -- 2

 DIGNITY OF LABOUR -- 2

உழைப்பின் பெருமை-2

சென்ற பதிவில் உழைப்பு என்பதில் பயில்வோர் ஏன் நாட்டம் கொள்ள வேண்டும் என சில கருத்துகள் பேசப்பட்டன. உழைப்பு என்பது இரு வகைப்படும். 1. உடல் சார்ந்தது 2. மனம் சார்ந்தது .இவ்விரண்டில் மனம் சார்ந்த உழைப்பு மிக எளிதில் சோர்வடைய வைக்கும். எனவே மனம் பேணுதல் என்ற அடிப்படை தேவைகளையும் உத்திகளையும் புரிந்துகொள்ளாமல் உட்கார்ந்து படிக்கிறேன் என்று செயல் படுபவர்கள் மிக தீவிர நுணுக்கம் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். மனம் என்ற சொல் உடலில் எந்த உறுப்பு என்றால் தெளிவான விளக்கம் பெற இயலாது. 

மனம் என்பது அவ்வப்போது தோன்றி அடுத்த நாளிலோ ,பொழுதிலோ, விநாடியிலோ மின்னல்போல மறையும் வல்லமை என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அது என்ன வல்லமை? ஆம் பல பழைய தகவல்களை நொடிப்பொழுதில் மீட்டெடுக்கும் அதிவேக கம்பியூட்டர் போன்ற வல்லமை ச்செயலே மனம் என்று உணர்ந்துள்ளது எனது புரிதல்.. அது பிழை எனில் எது தவறு என்று உணர்த்தினால் ஏற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறேன். நான் அறிந்த வரையில் மற்றும் வகையில் மனம் என்பது சிந்தனை சார்ந்த நிலைப்பாடு. அது நெஞ்சுப்பகுதியா, இதயத்துள் இருப்பதா, தலையில் எனில் முன் மண்டையிலா பின் மண்டையிலா ? என்று தூண்டித்துருவி அலசி ஆய்ந்தாலும் விடை என்பது விரக்தி  மட்டுமே... நீ என்ன வேதாந்தம்  பேசுகிறாய் ? என்று பொங்க வேண்டாம். நாம் பொங்கினாலும், .கொந்தளித்தாலும் மனம் ஒரு குரங்குபோல் அதன் போக்கிலேயே செல்லப்பார்க்கும். 

ஐயோ நீ என்ன சொல்ல வருகிறாய் என்று ரத்தஅழுத்தம் உண்டாகிறதா? அமைதி அமைதி--3 ,4 வாசகங்களுக்கே BP எகிறும் என்றால் கட்டுக்கட்டாக வக்கீல் குமாஸ்தா போல புத்தகங்களை சுமந்து அவற்றிற்கான குறிப்பு   [NOTES ] மனப்பாடம் செய்தால் 12, 13 வயதிலேயே BP படபடப்பு எல்லாம் வரும். அப்படியானால் நாங்கள் படபடத்து சாக வேண்டுமா ? என்று மாணவர்கள் கற்பனைப்பிரதேசத்திற் [எம லோகப்பகுதிக்] .குள் எட்டிப்பார்க்க வேண்டாம். மாடியில் இருந்து கட்டாந்தரையில் குதிப்பது வீரம் அல்ல கோழைகள் எடுக்கும் கையாலாகாத கொடூர முடிவு. மனித வாழ்விற்கு முடிவுரை எழுதவா பிறந்தோம்? அதெல்லாம் எனக்கு தெரியாது என்று தப்பிக்க முயலாமல்  நாம் முறையாக முன்னேற என்ன வழி ? அதற்கு என்ன தேவை --யோசிப்போம். 

முறையாக முன்னேறஎன்பதே நாம் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டிய, கோட்பாடு. 'முறையாக' என்பது, புரிதல்-- என்னும் மனிதகுல சொத்தின் வழிவருவது. தனி நபர் ஒவ்வொருவரும் தனது கல்விநிலைக்கேற்ப தகவல்களை பிழையின்றி புரிந்துகொண்டு மென்மேலும் தகவல் திரட்டி முன்னேற்றம் காணுதலே .[அதுவே முறையான முன்னேற்றம்] ஏனைய எதுவும் புரிதலை வீழ்த்துவது இயலாத ஒன்று. . இப்போது நான் முன்னம் தெரிவித்த மனம் என்ற சொல்லுடன் -கல்வி பற்றிய முன்னேற்றம் என்ன என யோசியுங்கள். புரிதல் என்பது சிந்தனை த்தொடருடன் தொடர்ந்து பிணைப்பது . 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தகவல் கிடைத்தாலும் முறையான இடத்தில் புதியக்கருத்தைப்பிணைப்பதே,  புரிதல் என்னும்  ஆக்க சக்தி.                                                           

 முந்தைய சங்கிலியில் பிணைப்புப்பகுதி தெளிவாக இருக்கும் போது மறதி என்ற நோய்  அண்டாது விலகிச்செல்லும். புரிதலில் சிறிய குழப்பம் தோன்றினாலும் உடனே மறதி தலை தூக்கும்.

புரிதல், நினைவாற்றல், மறதி இம்மூன்றும் வெவ்வேறு வகையில் தொடர்புடையவை . புரிந்தவை நினைவாற்றல் என்ற தொகுப்புக்குள் நுழைந்துவிடும் , புரியாதன பெரும்பாலும் மறதி என்ற புதை மணலிலும் சிறு சிறு பகுதிகள் மேலோட்டமாக நினைவில் நின்று நினைவாற்றல் போல நின்று கொண்டு கண்ணா மூச்சி ஆடுவதுபோல் பாடாய் படுத்தும்.. புரிந்தது என்றோ புரியவில்லை என்றோ முற்றாக பிரிக்க முடியாத குழம்பிய மனநிலையை எளிதாக ஏற்படுத்தும். திடீரென்று ஐயோ தேர்வு வந்துவிட்டதே என்று அலறி ப்புடைத்துக்கொண்டு பலவற்றையும் விரைந்து படிக்க மலைபோல் இருக்கும் பாடச்சுமையை நினைத்ததும் மலைஅடியில் சிக்கிய எலியாக மூச்சுத்திணறும். முன்னர் நன்றாக படித்திருந்ததாக நம் நினைத்திருந்த பகுதிகள் நீரில் வீழ்ந்த பிஸ்கட் போல கரைந்து சிதற எங்காவது ஓடி விடலாமா என்று தோன்றும். இப்படி துவங்கும் செயல் தான் வீட்டை விட்டு ஓடிப்போவது என்ற 10ம் வகுப்பு பழக்கம். இது நாளடைவில் வேரூன்றி காதல் மாயையில் ஓடுவது வரை நீட்சி அடைந்துள்ளது. இப்போது ஓடிப்[போவது தான் டாபிக்கா [topic?] .  என்று கேட்காதீர்கள். டாபிக் அது அல்ல ;எதுவும் புரியாமல் ஏற்படும் மனச்சுமைக்கு தாற்காலிக நிம்மதி ஓடுவது அதற்கெனவீட்டிலேயே  திருடுவது போன்ற திரை மறைவு செயல்கள்.

இந்த கோர தாண்டவ மன நிலைக்கு நம்மை நாமே உட்படுத்திக்கொள்கிறோம் என்பதை முதலில் உணர்க.  அடிப்படைத்தவறு --புரிதல் இல்லாமல் படித்து ஒப்பித்து வெற்றி என்று முதலில் இறுமாந்து பின்னர் ஏமாந்து செய்வதறியாது கையைப்பிசைந்து கொண்டு நிற்பது இவ்வாறு தவறான அணுகுமுறையை மேற்கொள்வதைவிட, இதற்கான காரணியையும் குழப்பத்தையும் அதனால் வரும் இது போல் திகைப்பதையும் முற்றாக கைவிடுதல் தவறில்லை என்றே உணர்க.

மூன்று முக்கிய பழக்கங்களை வளர்த்துக்கொண்டால் குழப்பம் தயக்கம், மண்டை வெடிக்கும்  நிலை போன்ற அச்சுறுத்தல் இன்றி சிறப்பாக பயில முடியும் .

1 அன்றாடம் படித்து அன்றைய பகுதியை சரியாக உள்வாங்குதல்  [மறுநாள் எழுதிப்பார்த்து நினைவு கூறுதல்]

2 குறைவான நினைவாற்றல் [low  retention உள்ளவர்கள் ] எழுதி எழுதிப்பார்த்து  எந்த தகவலையும் மெல்ல மெல்ல உள்வாங்கிவிடலாம்

3. சீரான சத்தான உணவு [பிஸ்ஸா பர்கர், சாட் -அல்ல], நடை/ உடற் பயிற்சி நல்ல உறக்கம் 9.30pm -4.30am பகலில் அல்ல ]  காலையில் படித்தல்

இம்மூன்றையும் சீராகப்பின்பற்ற நினைவாற்றல் உங்களின் செல்ல நாய்க்குட்டி போல பின் தொடரும். நினைத்தவுடன் உங்களுக்கு உதவும். இது அவ்வளவும் நமது மனதினையும் எண்ணங்களை நிர்வகிக்கும் எளிய வழி முறைகள்.. தேவை இல்லாமல் மருந்து மாத்திரை மாந்த்ரீகம் ஜோதிடன் ஜோதிடம் என்று அலையாதீர்கள். உங்களுக்கு நீங்களே எஜமானர் , மனமே ஆசான் , உழைப்பு [அன்றாட உழைப்பு] சிறுகச்சிறுக கட்டப்படும் வீடு போல நெடிது உயர்ந்து கம்பீர நிலையை அடைய இயலும்.. நம்பிக்கை --அதாவது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம். மனம் என்பது மோப்ப நாய் போன்றது. நன்றாகப்பழக்கினால் பேருதவி செய்யும். எனவே புரிந்து கொள்ளும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் குழப்பம், அச்சம் இவை இன்றி முறையாக முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

நன்றி

அன்பன் ராமன் 

2 comments:

  1. படித்ததை எழுதிப்பார்பதே பனதில் நிறுத்த சிறந்த வழி

    ReplyDelete
  2. எதையும் நன்றாக புரிந்து படிக்கும்போது, படித்தவைகள் மனதில் நன்கு பதியும். நினைவாற்றல் குறைவாக இருப்பவர்களாக இருந்தாலும், நன்றாக புரிந்து படித்திருந்ததால் திரும்பவும் ஒருமுறை தேர்வு நேரத்தில் பார்த்தாலும் ஞாபகத்தில் நின்றுவிடும். தேவையில்லாத பயம் பற்றிக் கொள்ளாது.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...