Thursday, February 22, 2024

GRATIFICATION- CRIPPLING WORK -3

 GRATIFICATION- CRIPPLING WORK -3                 

லஞ்சம்/ வேலை நிறுத்தம்  -3

பொதுவான சமுதாயப்பார்வை எளிதில் புரிந்துகொள்ளவோ முற்றிலும் நம்பிவிடக்கூடியதோ அல்ல. ஏனெனில் எதிராளியின் மனநிலையை ஒட்டியே கருத்தை சொல்லி [உள்ளூர வேறொரு செயல் திட்டம் வைத்திருப்பர்] ஐவரும் நமது நிலைப்பாடு கொண்டவர் என்று நம்பி நாம் ஏதாவது கருத்து சொல்ல, அதை நமக்கு எதிராகவே திருப்பி விடுவார்கள். ஏதாவது கேட்டால் ஐயோ எனக்கு ஒன்றும் தெரியாதே என்பார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு தேர்தலில் ஒரு விரும்பத்தகாத பிரிவினர் பெரும்பான்மை பெற்று விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது எப்படி நிகழ்ந்தது என்றும் பலரும் வியக்க , நம் எவரைக்கேட்டாலும் நான்  அப்படி வாக்களிக்கவில்லை   என்று விலகிக்கொள்வார்கள். ஏன் -அவர்களுக்கு தெரியும் வெகுஜன மனநிலை வேறு என்று. ஆனால் ஏதோ தனிப்பட்ட திட்ட அடிப்படையில் செயல் படுவர். இது என்ன எனில் உள்ளூர ஏதாவது கணக்கு/ ஒப்பந்தம் வைத்துக்கொண்டு, எம் எல் -நம்மவர் எனில் இன்னின்ன சலுகைகளைப்பெறலாம் என்று மத/ ஜாதி/ மொழி அடிப்படையில் 'மந்திராலோசனை' செய்து ஏடாகூடமாக தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி காரியம் சாதிப்பார்கள்.. மேலும் பாருங்கள்; அவர் லஞ்சம் வாங்குகிறார் இவர் லஞ்சம் வாங்குகிறார் என்று பிறரிடம் பேசி, இவர் லஞ்சம் வாங்காதவர் போல வேடம் புனைந்து ஏமாற்றுவார். அதாவது லஞ்சம் வாங்க சமூக ஒப்புதல் கிடையாது. அது ஒரு அருவருக்கத்தக்க செயல் என்பதாக தெருவில்/ உற்றார் மத்தியில் பேசிவிட்டு , மறுநாள் கர்மசிரத்தையாக லஞ்சம் வாங்க தேவையான உத்திகளோடு காத்திருப்பார்.முதல் உத்தி .நமது பழைய கடிதத்தை எவரும் எடுத்துவிட முடியாத இடத்தில் மறைத்துவிடுவார். நாம் அவர் சொன்ன தேதியில் பார்க்கப்போகும் போ து மிக அன்பொழுக வாங்க என்று இன்முகம் காட்டுவார் . நமது பணி நிறைவடைந்துவிடும் போலிருக்கிறது என்று நாமும் என்று பல்லைக்காட்டிக்கொண்டிருக்க , உக்காருங்க இதோ வந்தூர் ரேன்  . என்று காற்றில் மறைவார். நமது பொறுமை தாண்டி போனில் அழைத்தால் / என்று ஏதோ ஒரு வை சொல்லி , மீட்டிங் இல் இருக்கேன் 3.30க்கு வந்துடுவேன் என்று 12.05 க்கு சொல்லி , நீங்க சாப்பிட்டுட்டு வந்துருங்க என்பார். அதாவது இன்று உங்கள் வேலை நடவாது. திடீரென்று கீழே வந்து நீங்க எப்ப அப்ளை பண்ணினீங்க என்பார். நாம் தேதியை சொன்னதும், இல்லையே உங்கபேப்பரே அங்க இல்லை கிட்ட சொல்லிட்டு இவ்வளவு நேரம் தேடிட்டேன் பேப்பர் இல்லை என்று புளியை கரைப்பார். புதிய கடிதம் கொடுத்தால் , மீண்டும் நம்பர் போட்டு, வரிசை என் 120 க்கு மேல் அதிகமாகி , இன்னும் 35-40 தினம் கடந்து தான் எஸ்டிமேட் போட்டு  , பின்னர் அலாட்மென்ட் என்று புதிபுதிதாக  நாமகரணம் சூட்டி நம்மை திகைப்பில் கோபத்திலும் ஆழ்த்துவர். இவ்வளவும் நம்ம எதிர்வீட்டுக்காரர் அரங்கேற்றும் ஜால வித்தை. வேறொன்றுமில்லை, உங்களிடம் லஞ்சம் கேட்டால் நீங்கள் தெருவெங்கும் புகழ் பரப்புவீ ர்கள்.   . அதை முறியடிக்க  அயனான திட்டம் உண்டு. அடுத்தவாரம் வாங்க என்று உங்களுக்கு சற்று மூச்சு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

தொடரும்

அன்பன் ராமன்   

2 comments:

  1. ஜாதியும் பணமும் தான் தேர்தலில் வெற்றிபெற வழிவகுக்கின்றது
    நல்லவன் என்ற பெயர் தேவையில்லை

    ReplyDelete

CAPACITY BUILDING -3

  CAPACITY BUILDING -3 Group discussion- a step to cast off inhibitions : In the present day ambience, GD is regarded an essential tool ...