Monday, February 19, 2024

NO COST ENTERTAINMENT-2

 NO COST ENTERTAINMENT-2 

விலையில்லா பொழுது போக்கு -2    Feb-20

பரமேஸ்வரன்பத்மநாபன் -2

நான் மாயவரம் போய்டப்போறேன் ;

நானும் வரேனே என்றாள் ஜம் . ஏன்? அங்கேயும் வந்து காப்பில மண் அள்ளிப்போடணுமா. நீ வந்தா கால ஓடிச்சு டுவேன் என்று பொங்கினார் பத்து.  பரமேஷ் காதில் கேட்டது இதுதான் வந்தா கால ஓடிச்சு டுவேன் ஐயோ இப்பொழு காலு ஓடிச்சுடுவன் -வளர பிரான்தன் ஆயி ஞானு - என்று உயிர்பயத்தில் நடுங்கினார் பரமேஷ்  ஐயோ இப்படி கோப்பி கோப்பினு ஓடாடி ஜீவன் நாசம் ண்டாகும் போலிருக்கே குருவாயூரப்பா,  மார்க்கம் ஒன்னு அறியில்லா என்று நெஞ்சு வெடித்துவிடும் போல் குலை நடுங்கினார். திடீரென்று கூடத்தில் நிசப்தம் எவரும் இல்லை. உயிர்பிழைக்க ஒரே பாய்ச்சலில் தாவி வெராந்தாவில் குதித்து ஓடிய வேகத்தில் மடேரென்று இரும்பு கேட்டில் முட்டிக்கொண்டு வலது நெற்றிப்பொட்டில் போண்டாவுடன் தன வீட்டில் பாய்ந்து எலி போல் மூலையில்பதுங்கினார். நெற்றி விண் விண் என்று தெறிக்க மெல்ல முட்டிகளில் நின்று பீரோ கண்ணாடியில் எம்பி பார்க்க திருப்பதி லட்டில் முக்கால் திட்டம் புஸ் என்று  வீக்கம் .

போச்சு இப்போது ராஜம் வேறு கொல்லப்போகிறாள். ஒருத்தியும் கோப்பி தர மாட்டாள் , ஆயிரம் சோத்யம்  10 க்ரோஸ் கொஸ்டின் சீ இது என்ன -பட்டி ஜீவனம் [பரமேஸ்வரா ஓபிசில் உன்ட பேரு பரஞ் ஜெங்கில் எல்லாவனும் பேடிக்கும்; இப்பொழு ஒரு கோப்பிக்கு நீ - ரண்டு ஸ்த்ரீகள் டம் பிரார்த்தனை -எந்து பிரயோஜனம் ஓட்ட [ஒற்றை] கோப்பிக்கு மார்க்கம் இல்லா - ஜீவிதத்தில் பணி இல்லாத்தவன் பிரான்தன் , அவன் ஜீவிக்கானுள்ள யோக்கியதாம்சம் இல்லாத்த துர்பாக்கியன் -நீ சத்துப்போ அப்பொழு லோகம் பறையும் பரமேஸ்வரன் வல்லிய மனுஷ்யன்-எந்து வல்லிய? ஒரு கோபிக்கு யோக்கியதை வீட்டிலு இல்லா பின்ன அப்பரத்து இல்லா-அது தன்னே  நின்ட  இன்னத்த ஸ்திதியாணு  இன்னம் ஏதும் உண்டென்கில் அது நின்ட  'திதி' மாத்ரம் -அத்ரயே -பொய்க்கோ என்று  உள்மனம் குமுறியது.] 

பிறர் பாரா முகம் காட்டும் போது முதியவன் மனம் இப்படித்தான் துன்புறும். பிறர் பார்வையில் அவன் கிழவன் அண்டி வாழ்பவன், அவனுக்கு நாம் தந்தால்  தான் உண்டு  என்றெண்ணுகிறார்கள். இத்துணையும் அவன் தந்த வாழ்வு தானே நமக்கு என்று ஒரு கணம் சிந்தித்தால், பத்துவோ, பரமேஷோ புலம்ப மாட்டார்கள். குளியறையில் மனைவி குளிப்பதை அறியாமல் விளக்கணைத்த பததுவிற்கு காபி கட். [உபயம்-ஹேமாம்புஜம்].

பேப்பர் படித்துக்கொண்டே நடந்து பால் பாத்திரத்தை   கால் இடறி கவிழ்த்த பரமேஷுக்கு கோப்பி கட் [உபயம் ராஜம்]  இது உபயமா உபாயமா -ஈசன் தான் அறிவான்.

தொடரும்

அன்பன் ராமன்

5 comments:

  1. அது எந்தாணு பாண்டியாள் சேர பாஷைல பேசராங்க

    ReplyDelete
  2. இல்லெங்கில் எல்லாவர்க்கும் மனஸி லாகுல்லா சாரே

    ReplyDelete
  3. ஏந்த ராமன் சாரே, எனிக்கு மலையாளம் மனசிலாகுன்னிலா. ஷமிக்கணும்.

    ReplyDelete
  4. டோக்டர் சாரே கள்ளம்பரயண்டா கேட்டோ , ஞங்களுக்கு அறியும் வெறிதே பறையுன்னது -அல்லே

    ReplyDelete
    Replies
    1. ரோமன் சாரே, நிங்கள் வலரே மிடுக்கனானு

      Delete

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...