Sunday, March 17, 2024

BIOTECHNOLOGY-PLANT TISSUE CULTURE- 4

 BIOTECHNOLOGY-PLANT TISSUE CULTURE- 4

பயோடெக்னாலஜி-தாவர திசு வளர்ப்பு-4

 

தாவர திசு வளர்ப்பு முறைகளும், உத்திகளும் பல்கிப்பெருகி உள்ளன. அவற்றின் பொருளாதாரப்பயன்களும் விரிவடைந்து மென்மேலும் புதிய அணுகுமுறைகளும் PRODUCTS என்னும் பயன்களும் விரைந்து கிடைக்க வழிவகைகள் ஏற்பட்டுள்ளன.

வாழை, வகைகள் ரோஜா மலர்கள், பலதரப்பட்ட மலர்களை தரவல்லதாவரங்கள் கொய்  மலர்கள்  எனப்படும் வகை சார்ந்த பலவற்றையும் சிறிய கூடாரம் போன்ற அமைப்புகளில்  உருவாக்கி , -வான் வழியே ஏற்றுமதி ஆவது பல நாடுகளுக்கும் சென்றடைவதை அறிவோம்.

இவற்றிற்கான தாய் திசுக்கள் திசு கல்ச்சர் முறையில் ஏற்படுத்தப்பட்டு, கண்டிஷனிங் [CONDITIONING ] முறையில் வெய்யில் மழை குளிர் பனிப்பொழிவு இவற்றை ஏற்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்ட குறுஞ்செடிகள் அவ்வப்போது வியாபார சந்தையில் அறிமுகம் ஆவது நாம் அறிந்த ஒன்று.                                      3 நாட்கள் ஆனாலும், இதழ் உதிராத மொட்டுக்கள் போன்ற ரோஜா மலர்கள் பெருமளவில் உலவுவதை சாத்தியப்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவங்கள் சில தேர்ந்த திசு கல்சர் தொழில்நுட்பாளர்களை பணியமர்த்தி குறிப்பிட்ட பொருட்களை உற்பத்திசெய்து வளர்ச்சி கண்டுள்ளன..

தாவர திசுக்கல்சர் முறைகளில் MICRO-PROPAGATION  [மைக்ரோப்ராபகேஷன் ] மிக வேகமாக வளர்ந்துள்ளது. அதாவது 8 ஆண்டுகளில் 5மில்லியன் அளவில் இயங்கிவந்த நிறுவனங்கள் இப்போது 19 மில்லியன் அளவிற்கு பெருகியுள்ளன. இவை வெகு விரைவாக தாவரங்களை உற்பத்திசெய்யும் நுண்கலை வித்தக நிறுவங்கள். பாரம்பரிய முறையில் விதை நட்டு , நாற்று நட்டு, களை அகற்றி பயிரிடும் முறையில் எடுத்துக்கொள்ளும் கால அளவில் ஒரே வகை குறுஞ்செடிகளை பல லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கி , சிறப்பு கண்காணிப்பில் வளர்த்து புரட்சிகரமான தாவரப்பெருக்கம் நடைபெற்று வருகிறது.

இவை நோய் இல்லாமலும் , குறிப்பிட்ட பண்புகளோடும் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கண்டுள்ளன. இப்போது ஹோசூர் மலர்கள் பெரும் அளவில் ஏற்றுமதியாகின்றன ;அவற்றின் தாய் வகைகள் திசுக்கள்சார்ந்த நுண்முறைகளில் தோற்றுவிக்கப்பட்டவை..இவை விரைந்து பூக்கும் தன்மைக்கு வடிவமைக்கப்பட்டவை.. எனவே குறுகிய காலத்தில் பயன் பெற இயலுகிறது.

மைக்ரோபிராபகேஷன் முறையில், மருத்துவ பண்புகள் நிறைந்த அறிய மூலிகை வகைத்தாவரங்களை பெருமளவில் உற்பத்திசெய்து உயர்வகை மருந்துகளை இயற்கை வழியில் உற்பத்திசெய்வதும் சாத்தியம். செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதே போல சில குறிப்பிட்ட மருத்துவப்பயன்பாட்டிற்கான அன்டிபயா டிக்ஸ் , ஆன்டிபாடீஸ் , நொதிகள் [என்சைம் கள்]  பல பாக்டீரியாக்கள் , தாவரங்கள் இவற்றிலிருந்தும் பயோடெக் முறையில் உற்பத்தி செய்கிறார்கள். உயி ரி வகை நோய்   எதிர்ப்பான்கள், பூச்சிக்கொல்லிகள்  [bio pesticides ]உற்பத்தி இன்னொரு முன்னேற்றம். . அட்ரோபின் ஹயோசயாமின் ஸ்கொபோலமைன் , கொக்கெய்ன் வகைகளும் பயோடெக் முறையில் தாயாரிப்பதனால் அதிக அளவில் விரைந்து உற்பத்தி ஆகிறது  

பல மரவகைகள் அழிந்து வருகின்றன, இவற்றைப்போன்றே அரிதான மூலிகை கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றை யம் பாதுகாத்து விருத்திபெறச்செய்ய திசு வளர்ப்பு முறைகள் பெரும் ஆதரவாக உள்ளன. மேலும் வளர்ந்து வரும் உத்திகளால் , அநேக தாவர உயிர்களை பாதுகாத்துவைக்கவும் விருத்திசெய்யவும் பல அணுகுமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. .ஒரு தாவரம் பல ஆண்டுகள் கழித்து தரக்கூடிய பொருட்களை திசுகல்சர் வாயிலாக நேரடியாக உற்பத்தி செய்துகொள்ள இயலும். இவ்வனைத்தையும் நிறைவேற்ற உறுதுணை எது போன்ற மேலும் தகவல் களை பின்னர் காண்போம்.

வளரும்

அன்பன்  ராமன்

1 comment:

  1. குடமிளகாய் பச்சை நிறம் தவிற மஞ்சள் சிவப்பு நிறங்களிலும் , முட்டைக்கோஸ் நீல. நிறத்திலும் கிடைக்கிறது. தக்காளி , கொய்யா , எலுமிச்சை இவைகளின் உருவம் பெருதாக்கப்பட்டுள்ளது

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...