Sunday, March 24, 2024

BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -5

 BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -5

பயோடெக்னாலஜி--தாவர திசு கல்சர் -5

திசுக்கல்சர் வாயிலாக நேரடியாக உற்பத்தி செய்துகொள்ள இயலும். என சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன். அதை மேலும் புரிந்து கொள்வோம்.. அதாவது கறவை இன ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றின் பாலைப்பெற அந்த உயிரினம் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகே  சாத்தியம். அது போலவே தாவர மருந்துகள், எண்ணெய்கள், பிசின்கள் கோந்து வகைகள் இவற்றைப்பெற குறிப்பிட்ட  முதிர்ச்சி அடைந்த தாவரங்களே உதவும். திசு கல்சர் முறையில் முதிர்வடைந்தசெல்களைக்கொண்டு மேற்கூறிய பலன்களைப்பெறலாம். ஆனால் முதிர்ந்த செல்களை க்கொண்டு பொருட்களைப்பெறமுடியாது.

ஏன் எனில் முதிர்ந்த செல்வகைகள் தோற்றுவிக்கும் எண்ணை /பிசின்// பால் போன்ற திரவங்கள் அந்த செல்களையே கொன்றுவிடும் நச்ச்சுத்தன்மை கொண்டவை. எனவே ,                சரியான பருவத்து இளம் செல்களை வளர்த்து  முதிர்வடையச்செய்து, அவற்றின் வெளியீடுகளைப்பெறுதல் ஒரு பாதுகாப்பான முறை.

இப்படி ஒவ்வொரு தேவைக்கும் உரிய வழிமுறைகளை தொடர்ந்து கண்டறிதலும்,, அவற்றின் பொருள் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் உத்திகளும் தொடர்ந்து ஆய்வு முயற்சிகளால் மேம்பாடு அடைவதை காண்கிறோம் . எனவே 30 ஆண்டுகள் காத்திருக்காமல் 30-40 வாரங்களில் இதுபோன்ற உயர்த்திறன் கொண்ட  மருந்துப்பொருட்களைப்  பெறும் வழிமுறைகளை  திசுக்கல்சர்  சாத்தியப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் வெறும் ஞானக்கல்வியாக இருந்த திசுகல்சர் , இப்போது பயோடெக்னாலஜி எனும் உயிரித்தொழில் நுட்பத்தின் முக்கியமான 'கருவி' யாக விரிவடைந்துள்ளது. இதனால் தாவரங்களின் சில முக்கிய திறமைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.அவை STRESS TOLERANCE எனும் இடர் சமாளிக்கும் திறன் மேம்படடு, வெப்பம் மற்றும் உவர் வகை நிலங்களில் வளரும் திறன் , வெப்பம் தாங்குதல், நீர் பற்றாக்குறை அல்லது உபரிநீர் சூழல்களை எதிர்கொள்ளுதல் போன்ற வளர்T திறன்கள் மேம்படுத்தப்பட்டு , பலவகை தாவர இனங்கள் அழிவிலிருந்து காப்பாற்ற ப்பட்டுள்ளன .

 எண்ணற்ற மருந்துவகைகள் திசுகல்சர் முறைகளால் பரவலாக கிடைக்கும் அளவுக்கு உற்பத்தி பெருகியுள்ளது. இந்த நுணுக்கங்கள் தாவரங்களைக்காக்கவும், அவற்றுக்கான தற்காப்புக்களை வலுப்படுத்தவும் உதவும் உத்திகள். .இந்த நுணுக்கங்களில் தேர்வு பெற்றுள்ள தொழில்நுட்பாளர்கள் பின்னாளில் மேலும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கு தேவைப்படும் செயல் முறைகளை வடிவமைத்து மேலும் பல இயற்கை வகை மருந்துகளை எதிர்காலத்தேவைக்கு உருவாக்கிக்கொள்ள இயலும்..

சில மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து காண்போம்.

நார்கோடிக் வகை வலிநிவாணிகள் [NARCOTIC ANALGESICS ] ஓபியம் [கஞ்சா] வகைதாவரங்களிலிருந்து CODEINE [கொடேய் ன் ]மார் பின் [MORPHINE ] திபெய்ன் THEBAINE  போன்ற ஆல்கலாய்டுகள் பெற திசுக்கல்சர் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. இவைநீங்கலாக கொடேயோனைன் [CODEONINE ] என்ற மூலப்பொருளை கொடேய் ன் நிலைக்கு மாற்ற உயிரிமுறை மாற்றம் [BIO TRANSFORMATION ] உத்தியையும் கண்டறிந்துள்ளனர்.

வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யும் பெர்பெரின்[BERBERINE] ஐஸோக்வினோலைன் [ISOQUINOLINE ] வகை ஆல்கலாய்டுகள் திசு கல்சர் வாயிலாக பெறப்படுகிறது.

இதய தொடர்பான குறைகளை கட்டுப்படுத்தவல்ல க்ளை  க்கோஸைடுகள் [ CARDIAC GLYCOSIDES ] மற்றும் கார்டினோலைடுகள் [CARDINOLIDES ] டிஜிடாலிஸ் [DIGITALIS ]தாவரங்களிலிருந்து பெருமளவில் பெறப்படுகிறது.

கொரியா , சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் புகழ் பெற்ற 'ஜின்செங் [GINSENG ] சபோனின் [SAPONIN ] மற்றும் சாப்ரோஜெனின்கள் [SAPROGENINS ] இளமைகாக்கவல்ல அறிய வரம் என்ற பெருமை உடையன ஜின்செங் தாவரங்களில் இருந்து பெறப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவை தவிர தாவரங்களும் சில வைரஸ்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றன ; அவற்றை காத்து பாதுகாக்க உரிய மருத்துவப்பொருட்களையும் கூட திசுகல்சர் முறைகளைக்கொண்டு உருவாக்கி தாவர வைரஸ்களை கட்டுப்படுத்தவும் முடிகிறது. இவ்வாறு எண்ணற்ற வாய்ப்புகளை தரவல்ல திசு கல்சர் /பயோடெக்னாலஜி எவ்வாறு கையாள முடிகிறது என்ற சில முக்கிய அடிப்படைகளை வரும் பதிவில் காண்போம்.

தொடரும்

நன்றி

அன்பன்  ராமன்

1 comment:

THE MEETING POINT

  THE MEETING POINT         Dear Reader, Seeing the title, one may be tempted to assume that a new topic has its beginning here. Honestl...