Monday, March 25, 2024

BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -6

 BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -6

பயோடெக்னாலஜி--தாவர திசு கல்சர் -6

பயோடெக்னாலஜி துறையின் துவக்கம் சுமார் 35-40 ஆண்டுகள் முன்னம் நிகழ்ந்தது. பொதுவாகவே எந்த ஒரு குறிப்பிட்ட கல்வித்திட்டமும் , முற்றாக ஒரு பிரிவின் வளர்ச்சி என்பதே ஏற்க இயலாத கருத்து தான். நாம் பல உதாரணங்களைக்காண /காட்ட இயலும். கம்பியூட்டர் என்ற பிரிவின் வளர்ச்சி நிகழ்ந்தது எப்படி எனில் துல்லியமான கணித முறைகள்/ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் அசுரவளர்ச்சிக்கு வித்திட்ட டிரான்சிஸ்டர் வகைகளின் விரிவாக்கம் மற்றும் ட்ரான்ஸிஸ்டர் டெக்னாலஜியின் .ஆதிக்கம் வேறு பல துறைகளில் வியாபகம் என்று நிகழ அதன் ஒரு பரிமாணம் கம்பியூட்டர் என்ற பெயரில் இயங்கத்துவங்கியது. அதன் வித்து பைனரி சிஸ்டம் என்ற கணிதவியல் அணுகுமுறையில் அமைந்தது 

இன்னும் சொல்லப்போனால் இந்த பைனரி நிலையின் உள்ளார்ந்த லாஜிக் பூலியன் லாஜிக் [boolean logic] எனப்படுவது . அதாவது ஒவ்வொரு தகவலையும் வகைப்படுத்த ஆம் [1] அல்லது இல்லை [0] என எண் அடிப்படையில் பிரித்து தொகுப்பதே கம்ப்யூட்டிங் எனப்படுகிறது. இது காலப்போக்கில் பலவேறு தொகுப்பைகளாக அவ்வப்போது பரிமளித்து அவை கம்பியூட்டர் மொழிகளாக [ computer languages -pascal , cobol , c , c +, , c ++, என்றெல்லாம் முழங்க திடீரென்று ஜாவா , என்று ஒரு திருதராஷ்ட்ர கூட்டம் போல உலவி , இந்த உலகே கம்ப்யூ ட் டர்  தான் என்று தலைகீழாகப்போய் , பிசிக்ஸ் ஆ அப்பிடீன்னா என்று கேலி பேசிய பெற்றோர் ஒருபுறம், கம்ப்யூ ட் டர்அதுவே எதிர்காலம் என்று உண்மையிலேயே நம்பி 6 மாத சான்றிதழ் கல்வி பஸ் ஸ்டாண்ட் மாடியில் வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்று , வேலை வேலை என்று அலையும் போது , கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கம்பியூட்டர் பயிற்சி பெற்றோர் வேலைக்கு , 1000/-ரூபாய் சம்பளம் 1980களில்.

20 ஆண்டு அனுபவ பேராசிரியரின் அன்றைய ஊதியம் 1800/- மக்கள் மதி மயங்காதா என்ன?  உடனே கொத்துக்கொத்தாக 10ம் வகுப்பு முடித்தவர்கள் கம்யூட்டர் பயில கம்பியூட்டர் கீ போர்ட் இயக்கத்தெரிந்து கொண்டு -கம்பியூட்டர் பயின்று விட்டதாக மாய வலையில் சிக்கி வாழ்வை தொலைத்தவர் பலர்.

இந்த மயக்கம் விரிந்து பரவ பல கல்லூரிகள் கம்ப்யுட்டர் சயன்ஸ் பிரிவை துவக்கினர் ;அவற்றை அன்று நிர்வகித்ததோர் Physics / Maths பேராசிரியர்கள்; ஏனெனில் கம்பியூட்டர் துறையில் உயர் பட்டம் பெற்றோர் எவரும் இல்லை. இப்படியாக உருவெடுத்த துறை இன்று IT [INFORMATION TECHNOLOGY ] என்று விரிவடைந்துள்ளது. இவ்வளவு விளக்கம் என் எனில் எந்த துறையும் பிற துறையின் பங்களிப்பு இன்றி உருவாக வாய்ப்பில்லை. இந்த அடிப்படையை புரிந்து கொண்டே பயோடெக்னாலஜி பற்றி பார்ப்போம். இதன் ஆணி வேரா க இருப்பவை செல்பயாலஜி,,மாலிக்குலர் பயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி ; செயல் பயிற்சிக்கு உதவுவது மைக்ரோபயாலஜியின் அடிப்படை உத்திகளான,, மீடியா, விரைந்து செயல்படும் INOCULATION பயிற்சி மற்றும் , ASSAY எனப்படும் ஆய்வு முறைகள் . இவற்றை பின்பற்றிச்செயல்படும் போது , எதிர்ப்படும் சவால்களை புதிய அணுகுமுறைகள் கொண்டு முறியடித்து முன்னேறவேண்டும்.. சொல்லப்போனால் பயோடெக்னாலஜி கல்வி, முற்றிலும் செயல் முறைகள் சார்ந்ததே.;ஆகவே தான் முறையான பயிற்றுக்கூடங்கள் பேராசிரியர்கள் இருப்பதை உறுதி செய்துகொண்டு அவ்விடங்களில் பயில தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்.

அடிப்படையில் பயோடெக்னாலஜி என்ன செய்ய முயல்கிறது எனில் விரைவான / நிறைவான வேளாண் உற்பத்தி, பயிர்காத்தல், அறிய மூலிகைகளை பராமரித்தல், மனித நோய்களை ஒழிக்கவல்ல மருந்துகளை போதிய அளவில் உற்பத்தி செய்தல் [கொரோனாவிற்கு, எவ்வளவு விரைந்து, வாக்சின்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன என்று நினைவு கூறுங்கள். பயோடெக்னாலஜி முறைகள் இதை நிறைவேற்றின என்பதை உணருவோம்

மனித உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ஹார்மோன் கள் , என்சைம்கள் செயல் படாத போது, அந்த சுரப்பிகளை தூண்டலாம் அல்லது நேரடியாக பிற வழிகளில் கிடைக்கும் ஹார்மோன்கள் , என்சைம்கள் இவற்றை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு / செயல்  திறனை மேம்படுத்தலாம். உதாரணமாக இன்சுலின் -நீரழிவு முதல் வகையினருக்கு ஊசி மூலம்செலுத்தப்படுகிறது.. இந்த இன்சுலினை குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களை க்கொண்டு பயோடெக் முறைகளில் உற்பத்தி செய்கின்றனர். மனித வகை இன்சுலினை /பிற வகை என்சைம்களை பாக்டீரியாக்களின் உதவியால் பெறமுடிகிறது . எப்படி எனில்,    அந்த என்சைம்களுக்கு வழிகாட்டும் ஜீன் தொகுப்பினை [GENE CLUSTER ] பாக்ட்ரியாவின் உடலமைப்பில் நுழைத்து உரிய சூழலை [ENVIRONMENT ] உருவாக்கினால் , அவை அந்த என்சைம்களை வெளியேற்றும் ;அதை எடுத்து சுத்திகரித்து பயன் பாட்டுக்கு கொண்டுவருகின்றனர். பாக்டீரியாக்களுக்கு அந்த என்சைம் தேவையே இல்லை , எனவே இயற்கையில் அந்த என்சைம்கள் வேறு உயிரினங்களுக்கானவை ;ஆனால் ஜீன் தகவல் அடிப்படையில் இந்த என்சைம்கள் பாக்டீரியாவினால் உற்பத்திசெய்ய வைக்கப்படுகிறது .ஒரு உயிரினத்தைக்கொண்டு வேறொரு [மனித]உயிரினத்திற்கான தேவை ஈடு செய்யப்படுகிறது.. இவ்விடத்தில் தான் படைப்பின் ரகசியம் உணரப்பட வேண்டும் .1] ஜீன் எங்கிருந்தாலும் அதன் செயல் ஒன்றுதான். 2 ]ஜீன் தானாக இயங்குவதில்லை ;ஏதோ ஒரு செல்லினுள் அமைத்தால் அது பேசும் , அதன் மொழி சங்கேத மொழி . எல்லா உயிரினங்களும் ஒரே சங்கேத அடிப்படையில் இயங்குவதால், அதை UNIVERSAL   GENETIC CODE என்று அங்கீகரித்துள்ளனர். இதை புரிந்து கொண்ட பின்னர் தோன்றிய துறை தான் ஜெனெடிக் என்ஜினீயரிங் [GENETIC ENGINEERING ]. இது பெரிதும் விவிரிவடைந்து பல்வேறு புதிய வகை தாவர , விலங்கு, மீன் போன்றவற்றை உருவாக்கும் அளவிற்கு மேம்பட்டுள்ளது. எனவே அன்பர்களே பயாலஜியில் என்ன இருக்கிறதென்ற 1935ம் ஆண்டின் வசனத்தை இனியும் பேசாதீர்கள் ஏனெனில் அது [இன்றைய பயாலஜி] PERSONALIZED THERAPY என்ற தனி மனித வைத்திய முறை நோக்கி வேகமாக ஸ்டெம் செல் முறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. எனவே எதையும் நன்கு அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய தகவல்கள் பெருகி வருகின்றன ;புரிந்து கொள்வோம்

            --- நிறைவு ---                                                                                 நன்றி

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...