Monday, March 25, 2024

SALEM SUNDARI -2

 SALEM SUNDARI -2

சேலம் சுந்தரி-2

மணி 10.45 டேவிட் அறை வாயிலில் சுந்தரி.                     சார் என்றாள். எஸ் கமின் என்றது குரல் ; நெடிதுயர்ந்த உருவம், முன் தலை வழுக்கை ஆனால் மிடுக்கான அதிகாரி .பைலை கொடுத்துவிட்டு சார் மணி 10 48 இன்னும் அவர் டூட்டிக்கு வரலை சார் என்று வத்தி வைத்தாள் . யார் வரலை? என்றார் டேவிட். இவள் பெயர் சொன்னாள் .உடனே கோபமாக கம்பியூட்டரை ஓபன் செய்து டூட்டி சார்ட் பாத்தவர் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார். இந்தாம்மா நீ இங்க வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆவுது .அதுக்குள்ள இப்பிடி கம்ப்ளைண்ட் பண்ணிக்கிட்டு வர , உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்குதா ? யார் வேலைக்கு வரலை னு HR ல வந்து சொல்றியே அவர் இப்ப டூட்டி பாத்துக்கிட்டு இருக்காரு. ; என்ன ஏதுனு தெரியாம பேசக்கூடாது இன்னொரு தடவை இந்த மாதிரி ஒளறிக்கிட்டு வந்த-- ஒன்ன சஸ்பெண்ட் பண்ணிட்டு தங்கச்சி மடம் மாதிரி ஊருக்கு ட்ரான்ஸ்பர் போட்டுருவேன் ஓடு இங்க நிக்காத என்று துரத்தினார். ஐயோ அம்மா என்று பதறி அடித்து ஓடினாள் சுந்தரி.

குதறுவதற்கு தயாராக சுப்புரத்தினம் காத்திருக்க பிடரியில் வியர்வையுடன் செக்ஷனுக்குள் நுழைந்தாள் சுந்தரி. கொலைவெறியுடன் சுப்புரத்தினம் சுட்டெரிப்பதுபோல் முறைத்தார் சுந்தரியை. "ஏம்மா நீ என்ன நெனச்சுக்கிட்டுருக்க உம்மனசுல? , HR ல போய் புகார் பண்ணிட்டு வர --ஒருவருஷமா வேலையில் இருக்கியே, யார்யார் எப்பிடிஎப்பிடின்னு தெரியாதா உனக்கு?  குடுகுடுன்னு போய் பொய் சொல்லிட்டுவர்றியே இங்க இருக்கறவுங்க முட்டாப்பயலுக னு நெனைச்சிட்டீங்க போல தெரியுது அதுனால தான் இப்பிடி வேலையெல்லாம் பாக்கறீங்க. .ஆமா போறதுக்கு முன்னால எங்கிட்ட கேட்டுருந்தா என்ன ஏது னு பூரா விவரமும் சொல்லிருப்பேனே. அதைவிட்டுட்டு HR CHIEF கிட்ட போய் சொல்லலாமா?                                    ஒரு ஆபீஸ் னா .வெவ்வேற செக்ஷன் வேற வேற மாதிரிதான் செயல் படும். சில போஸ்ட் ல இருந்தா ஆபீஸ் டைம் பாத்து வேலை செய்ய முடியாது அப்போ அவங்க ட்யூட்டி பார்க்கிறார்களா இல்லையாங்கிறது ஆபீசுக்குள்ள இருந்துகிட்டு பேச முடியாது. இப்ப ஒரு டாக்டர் அறுவைசிகிச்சை பண்றார் மணி 5.00 ஆயிடுச்சு னு குட லை திறந்துபோட்டுட்டு நாளைக்கு 10.00 மணிக்கு பாப்போம் னு சொல்ல முடியுமா? மணி என்ன ஆனாலும் இருந்து முடிச்சுட்டு தான் போவாரு . அப்ப ராத்திரி வேல பாத்தே னு  னு பகல் ல வராம இருக்க முடியுமா? ஒரு 1/2 மணி லேட்டா வந்தா உடனே HR ல போய் புகார் சொல்ல முடியுமா?  இதெல்லாம் யோசிக்காம குடுகுடுன்னு ஓடிப்போய் பேசுறிங்களே    அம்மா அதுவும் யார் மேல ?          HR CHIEF உங்கள திட்டி அனுப்புனாரே -அழுதுகிட்டு ஓடிவரீங்களே இப்ப நீங்க தானே மாட்டிக்கிட்டேங்க? இனிமே உங்கள ரொம்ப கண்காணிப்பாங்களே, வலியப்போய் சுருக்கை எடுத்து மாட்டிக்கிட்டு நிக்கிறீங்களே. அனுபவமில்லைங்கறது நல்லா  தெரியுது. 

என்ன ஒரு வருத்தம் னா அந்த ஆளை போய் சொல்லி வத்தி வெக்கிறீங்களே , கடவுளுக்குகே அடுக்காதம்மா என்று சுப்புரெத்தினம் வருத்த உணர்வுடன் பேசினார்.

சாரி சார் ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் , பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்குங்க என்று கண்கள் சிவக்க விசும்பி புடவைத்தலைப்பால் கண்ணை துடைத்துக்கொள்ள இப்போது ஹோட்டல் தோசை தொப்பை உள்வாங்கி இருந்தது.என்பதை சுப்புரத்தினம் பார்த்துவிட்டார் .சீ ML இல்லை போலிருக்கு என்று புரிந்து கொண்டார். இதற்கிடையில் சுந்தரிக்கு ஒரே உதறல் நான் HR செக்ஷனில் இருந்து வரும் முன் நடந்ததை புட்டு புட்டு வைக்கிறார் சுப்புரத்தினம் ;இனிமேல் என் வார்த்தை எல்லாம் சந்தேகிக்கப்படுமே என்று வருந்தினாள் .

போயி இந்த 2 லெட்டர் TYPE பண்ணி ROUGH COPY கொண்டாங்க என்று அனுப்பிவைத்தார் சுப்புரத்தினம்.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...