Tuesday, April 2, 2024

CRIPPLING THE WORK 4

 CRIPPLING THE WORK 4

வேலை நிறுத்தம்-4

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து….

. இப்ப இவனுகளுக்கு குடுக்கறதே பென்சன் தானே , வேலை எங்க பாக்கிறான் ? இதுக்கு மேல தனியா பென்ஷன் குடுங்கறான். இவனையெல்லாம் சுடணு ம் சார்..எனக்கு தெரிஞ்சு ஒரு ஆளு 7 வீடு வாங்கிட்டான் பஜார் தெருவிலே. 

பாதிப்பேர் வாத்தியாரம்மாவை கல்யாணம் முடிச்சிருக்கான். அவ ஒருபக்கம், ட்யூசன் , வட்டிக்கு விட்டு காசு பாத்து வீடுவீடா வாங்கிப்போட்டுக்கிட்டிருக்கா. ஒருத்திக்கு களுத்து .ஏகமா  பெருத்துப்போய் அட்டியல் கிடைக்காம 7 லட்ச ரூவாய்க்கு ஆடர் குடுத்து செய்ய சொல்லிருக்கா.. அவளுக்கும் பென்ஷன் வேணுமாம். நம்ம தான்யா மடயங்க;   அப்பவே BT சேராம கலெக்டர் ஆபீஸ் வேலைனு ஓடி இப்ப ராத்திரி 8 மணி வரைக்கும் பைலை கட்டிக்கிட்டு அளுதுகிட்டு , கவுன்சிலர் வந்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டறான் ;தலை எளுத்து களுதை மாதிரி குனிஞ்சுக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு.. என்ன, கொஞ்சம் அனுசரிச்சு சம்பாரிக்கலாம் ஆனா பக்கத்துல இருந்தே போட்டுக்கொடுத்துர் ரானுக ; அப்புறம் கைல கால் ல விள வேண்டியிருக்குது -எல்லாம் நம்ப பொறந்த நேரம் வேறென்னத்தைச்சொல்ல என்று ஆசிரியர்களைப்பார்த்து பொருமும் பிற பணியாளர்கள்.  

இதில் வேறொரு விமரிசனமும் இடம் பெறும் . நமக்கு 9.30 - 5.00 ஆபீஸ் , இவனுங்களுக்கு 10- 4.00 அதுலியும் சனி ஞாயர் லீவு .அன்னிக்கு பாக்கிறேன் க்ளாஸ் ல ஒரு வாத்யார்     தூங்கிக்கிட்டு ருக்கார் பசங்க சளச்சள னு பேசிக்கிட்டு இருக்கானுங்க.. அதை விட கொடுமை இந்த பொண்ணுகளை எந்த ஸ்கூலுக்கும்  அனுப்ப முடியாது போலிருக்கு.

டெய்லி பேப்பர்ல 10 போக்ஸோ கேஸ் வருது; 6, 7 வாத்தியாருங்க , க்ராமத்துஸ்க்கூல் ல தாளாளர் அவனும்சேர்ந்துக்கறான்   . சில டீச்சரம்மாக்களே +1 பையன்களுக்கு மில் காலஜி ட்ரபுள் [பாலியல் தொந்தரவு] கொடுக்குறாங்க னு காவல் துறை அறிவிச்சுருக்கு . இவனுங்க பண்ற அட்டூழியத்துக்கு அளவே இல்லை , இத்தனைக்கும் மேல, ஸ்ட்ரைக்; இந்த பசங்க என்னத்த படிக்கும் என்று கடும் விமரிசனம் இருக்கிறது.

 

ஆசிரிய சங்கங்கள் சொல்வது என்ன/

எங்களை பணி  செய்ய விடுங்கள், ரேஷன் அட்டை, வோட்டர் பட்டியல், மலேரியா டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைகளை எங்கள் மீது சுமத்தாதீர்கள்.

பாடப்புத்தகங்கள் அனைத்தும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

வருவாய்த்துறை பணிகளை ஆசிரியர்கள் மூலம் நிறைவேற்றாதீர்கள்.

திருவிழா நேரங்களில் க்யூ வரிசை பணிகளை மாணவர் மற்றும் ஆசிரியர் மீது சுமத்தாதீர்கள் .படிக்க வேண்டிய நேரத்தில் பகலில் க்யூ ஒழுங்கு செய்துவிட்டு இரவில் படிக்க இயலுமா? .மேலும் புள்ளி விவரம் சேகரிக்க , மருந்து மாத்திரை பயன்பாடு விளக்க ஆசிரியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பணியமர்த்துவதும், சத்துணவு ஏற்பாடு மேற்பார்வை செய்வதும்-- போதிப்பு பணிகளில் குறிக்கிடுவதை அரசினர் உணரவில்லையா?வேலையில்லா நபர்களுக்கு இது போன்ற 'அவ்வப்போதைய' பணிகளும் சிறு ஊதியமும் தந்தால் அவர்களுக்கும் பயன் கிடைக்கும் .

தற்காலிக நிலையிலேயே 12-15 ஆண்டுகளாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவீ ர்

தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு பதவி மற்றும் ஊதிய கோரிக்கையை பரிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இவற்றை புரிந்து கொள்ளாமல் ஊதியம் கேட்டு போராடுவதாக மக்கள் நினைப்பது கிட்டத்தட்ட வேரூன்றி விட்ட நிகழ்வு.

இவ்வாறாக தத்தம் வேலை நிறுத்தம் மிகுந்த நியாயமானதும் பொருத்தமானதும் என்று எண்ணுவதும் பிறர் வேலை நிறுத்தம் செய்து  மக்களை துன்புறுத்துகின்றனர்  என்று நம்புவதும் தக்காளி சட்னி கேஸ் தான்

நன்றி அன்பன் ராமன்  

 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...