K S GOPALAKRISHNAN
கே எஸ் கோபாலகிருஷ்ணன்
தமிழகத்தின் பிரபலமான இயக்குனர்களில் நன்கு அறியப்பட்டவர்,
கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முக திறமையாளர். தஞ்சை மாவட்டத்தவர்
ஒரு பாடலாசிரியராக KSG வழங்கிய ஆரம்பகாலப்பாடல் ஒன்று
1 "மண்ண நம்பி
மரமிருக்கு கண்ணே சஞ்சலா " அது ஒரு நகைச்சுவைபோல் தோன்றும் ரொமான்டிக் பாடல்
. குரல்கள் எஸ்சி கிருஷ்ணன் , ஜிக்கி இசை மாஸ்டர்
வேணு. படம் “எங்க வீட்டு மகாலக்ஷ்மி” [1957] . திரு
தங்கவேலுவுக்கு எஸ் சி கிருஷ்ணனின் குரல் பொருந்துவது ஒரு போனஸ். இப்பாடல் அந்நாளில் பட்டி தொட்டி எங்கும் முழங்கியது
, ஆனால் கே எஸ்
கோபாலக்ருஷ்ணனின் பாடல் என்பது ஏன் தெரியாமலே இருந்தது -எனக்கு விளக்கம் இல்லை.
கேட்டு மகிழ இதோ இணைப்பு
https://www.youtube.com/watch?v=8ELOoMefiew
‘MANNAI NAMB’I ENGA V MAHALAKSH 1957 SCK
JIKKI MD MASTER VENU
இயக்குனராக KSG அவர்கள் பெரிதும் பேசப்பட்டது "சாரதா" படத்தின்
மூலம் தான் என்பது எனது புரிதல்
"சாரதா" 1962
இதில் இடம் பெற்ற ஒரு பாடல்
2 "மணமகளே மருமகளே வா வா "பாடல் பஞ்சு அருணாச்சலம்
[அவருக்கு இதுவே முதல் பாடல் -"சாராதா 1962, இசை கே வி மகா தேவன் . குரல் கல் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி,
ஜெயலட்சுமி, எல் ஆர் ஈஸ்வரி, அஞ்சலி [LRE இன் தங்கை]. இதுபோன்ற காட்சிகளும் பாடல்களும் சினிமாவை
விட்டு ஓடி சுமார் 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடல் எழுதவும் இசைக்கவும் உரிய
மனங்கள் இன்றைய திரை உலகில் , பாயாலஜி மொழியில் சொல்வதென்றால் "EXTINCT
" என்றே
அழைக்கவேண்டியது தான் . பாடலுக்கு இணைப்பு இதோ
கற்பகம் -1963
இந்தப்படம் பல விசேஷங்களை உள்ளடக்கியது , மட்டுமல்ல சில முக்கியஸ்தர்களின் வாழ்வில் விளக்கேற்றியது
எனில் 100க்கு 100 உண்மை.. விசேஷங்கள் எனில் இறந்த மனைவியின் நினைவில் சிக்கி
புதுமனைவியை ஏற்க மறுக்கும் நிலையில் கணவன், அதை தெளிவாக்க
மறைந்தவளே வந்து வாதிடும் பாடல், காதலைச்சொல்லும் பாடல்கள், என்று அனைத்தும் பி.சுசீலா வின் குரலில். [இது ஒரு சுசீலா MOVIE
எனில் மறுக்க முடியாது ]
இது ஒரு புறம் இருக்க , கவிஞர் வாலி தனது வாழ்வில் கால் ஊன்ற போராடிக்கொண்டிருந்த தருணம் .
அவருக்கு உறுதுணை நின்றவர்கள் , நாகேஷ், வி கோபாலகிருஷ்ணன் , மற்றும் பழைய நடிகர் ஸ்ரீகாந்த். அந்த நிலையில் ஒரு பாடல்
எழுத அவசரமாக கவிஞர் கிடைக்காமல் போக யாரோ சொல்ல வாலி வந்து சேர்ந்தார் . அவர்
எழுதிய முதல் பாடல்
3 1000 இரவுகள் வருவதுண்டு ஆனால் இது தான்" இந்தப்பாடலில் வரும் சரணத்தில் யாரோ சொன்னார்
கேட்டேன்என்றொரு வரி வருகிறது அது ஏன் "யாரோ சொன்னார் கேட்டேன்"
என்று திரு KSG கேட்க, வாலி சொன்னார்
கதையில் பாடும் பெண் திருமணம் ஆகாதவள் , பாடலோ ,முதலிரவு
சார்ந்தது அதனால் "யாரோ சொன்னார்" என்று கேள்விஞானம் தான் என்று உணர்த்துகிறாள் " KSG க்கு இந்த
விளக்கம் ஆழ்ந்த தாக்கம் கொடுக்க , படத்தின் எல்லா ப்பாடல்களையும்
வாலி யே எழுதட்டும் என்று முடிவெடுத்தார். ஆகவே எல்லாப்பாடலு ம் வாலி -சுசீலா
இருவரின் பங்களிப்பே.
இந்தப்பாடலில் எம் எஸ் வி பூடக உணர்த்தல் முறையில் இரண்டாம் வரியின்
இறுதி சொல்லை பாடாமலே இசைக்குறியீடுகளால் தெளிவாக்குவதைக்காணலாம்[ இதே
உத்திதான் காற்றுவந்தால் தலை சாயும் நாணல்
" பாடலிலும் காண்கிறோம்]
கிட்டத்தட்ட வாலி வேரூன்றியது போலவே
கே ஆர் விஜயாவும் நட்சித்திர நிலை எட்டியது இந்தப்படத்தின் மூலமே என்பதே இந்த
படத்தின் தன்மைகளை விளக்க வல்லது. இன்னொரு கொசுறு தகவல்
இப்படத்தின் வெற்றிக்குப்பின்னர் தான் KSG ஒரு ஸ்டூடியோ
நிர்மாணித்து [கற்பகம் ஸ்டுடியோ] நிர்வாகியாகவும் ஆனார். இயக்குனர்களில் ஸ்டூடியோ
நிர்மாணித்தவர் KSG ஒருவர் மட்டுமே என்று என் நினைவு. வாலி, வி -ரா, சுசீலா
கூட்டணியில் வந்த பாடல் பாடலுக்கு இணைப்பு இதோ
கை கொடுத்த தெய்வம்" தேச ஒற்றுமையை நினைவுபடுத்திய படம் எனவே பாரதியாரின் பாடல்
4 "சிந்து
நதியின் மிசை நிலவினிலே " பாடலை வைத்தார். இந்தப்பாடலின் வானுயர வெற்றிக்கு
காரணம் அதை இசை அமைத்திருந்த பங்கு எனில் முற்றிலும் உண்மை. பாடலைக்கேட்டதும்
நம்மை பரவசம் தொற்றிக்கொள்வதை உணரலாம்.. வேறு மொழிகளை உள்ளது உள்ளபடியே பாடவைத்து,
கோரஸ் இணைத்து பாடலை வானில் விரிந்து படரச்செய்த விஸ்வநாதனை
பாராட்ட என்ன சொன்னாலும் தகும் . மீதி தேவைகளை சிவாஜி கணேசன் வெகு நேர்த்தியாக
நிறைவு செய்துள்ளார்
இந்தப்பாடல்
இலங்கை / இலங்கை வானொலியில் தடை செய்யப்பட ஒன்று .
"சிந்து நதியின் மிசை நிலவினிலே" {கைகொடுத்த தெய்வம் -1964] மஹாகவி சுப்ரமணிய பாரதி, வி-ரா, குரல்கள், டி எம் எஸ், LR ஈஸ்வரி, ராகவலு மற்றும் குழுவினர் . இணைப்பு
வளரும்
அன்பன் ராமன்
கற்பகம் என் மனதைக் கவர்ந்த படம்
ReplyDeleteஅப்படப்பாடல்களும் அருமை