CRIPPLING THE WORK -2
வேலை நிறுத்தம்-2
பேருந்து சேவை ஊழியர்கள்
கோரிக்கை
ஒவ்வொரு ஷிப்ட்டிலும் 13 ட்ரிப் முழுதாக இயக்கி மொத்த வசூலையும் மதியம் 1.45 மணிக்குள் டெப்போ கணக்கரிடம் ட்ரிப் ஷீட் விவரங்களுடன்
பணம் செலுத்தி ஒப்புகை பெற்ற பின்னரே
ஓட்டுநர்/இயக்குனர் வண்டியை ஒப்படைக்கவேண்டும் [ஒரு ட்ரிப் = 1 அப் +1 டௌன் ]
40 நாட்களுக்கு
ஒருமுறை சொந்த விடுப்பு 1 நாள் மட்டுமே வழங்க
இயலும்
13 ட்ரிப் நிறைவேற்ற
சாலைகளும் நெரிசலும் மிகுந்த இடையூறாக இருப்பதால் 10 ட்ரிப் போதும்
என்று அறிவிக்க வேண்டும் . காலை 8-10.30 வரை ஒவ்வொரு
ட்ரிப்பும் 1 1/2 மணி நேரம் ஆகும் அப்போது நெரிசலும் அதிகம்
டிக்கட் வசூலிப்பதே கடினம் , பாஸ் , இலவசங்கள் யார் என்று பார்த்து டிக்கட் வழங்கி சில்லறை தர
வேண்டியுள்ளது டிப்போ நிர்வாகம் காலை ட்ரிப்புக்குக்கூட சில்லறை கொடுத்து
அனுப்புவதில்லை. ஒவ்வொரு பயணியும் 100 ரூபாய் நோட்டை நீட்டுகிறார் , சிலர் 45/-ரூபாய்க்கு 500 ரூபாய்க்கு சில்லறை கேட்கின்றார்
காலை வேளையில்; இதை நிர்வாகம்
கவனிப்பதே இல்லை.. பொதுமக்கள் வசைமாரி பொழிவதை கேட்டுக்கொண்டு கோபமின்றி
செயல்படவேண்டும் . இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமாக அன்றாடம்
நடக்கிறார்கள். இவற்றை களைய பலமுறை கோரிக்கை வைத்தாயிற்று -தீர்வு இது வரை இல்லை.
தீர்வு இது வரைஇல்லவே இல்லை எனவே வேலை
நிறுத்தம் செய்வதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று பெரிய அறிவிப்புகள்
ஆங்காங்கே வைக்கின்றனர் . அதை புரிந்து கொள்ளாமலே சம்பளம் கேட்டு போராடுகிறார்கள்
என்று அனைவரும் போக்கு வரத்து ஊழியருக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கின்றனர் .
2 BSNL
மற்றும் அரசுடைமை
வங்கி ஊழியர்கள் போராட்டம் அதாவது உயர்பதவி அதிகாரிகள் தொழிற்சங்கம் இதில் சேராது
என்று அறிவித்துவிட்டது .
சமுதாயக்காட்சி: அரசு
ஊழியர், ஆசிரியர் மாதர் சுயஉதவி மற்றும் பசுமைப்புரட்சி இயக்கம்
சார்ந்தோர் இல்லங்களில் குமுறுவது ;
காலை 10-முதல் 2 மணிக்குள்ள தான்
பணம் பரிமாற்றம் செய்யலாம். [4 மணி நிராம் தான்
பொது மக்கள் சேவை ] சில இடங்கள் ல 3 மணி வரை பணம்
வாங்கலாம் .ஆனா சாப்பாடு டயம் முடிஞ்சு 2.35 க்கு வந்து 25 நிமிஷத்துல கௌண்டர் மூடி விடுவார்கள். அளவுக்கு அதிகமா
ஆளுங்களை வேலைக்கு சேத்துக்கிட்டு, இப்ப என்னடான்னா
எப்பப்பாரு ஸ்ட்ரைக். கேட்டா வங்கிகளை இணைக்காதே ,
நோய்வாய்ப்பட்டு
நோஞ்சான் ஆகி செத்தாலும் வங்கிகளை இணைக்காதே கோஷம் . பட்டி தொட்டி எங்கும் கிளைகளைத்திறந்து
ஆள் பற்றாக்குறையால் சிலர் பதவி உயர்வு பெறும் போ து தேன் மிட்டாய் போல் இனித்தது , இப்போது ஆங்காங்கே ATM வந்ததில்
கிளைகளில் மனித நடமாட்டமே இல்லை; ஆனாலும் 1ம் தேதி சம்பளம் இவர்களுக்கு வேலையே இல்லை இந்த அழகில் வேலை
நிறுத்தமாம் , அரசு உடமை என்பதால்
கொழுத்து அலைகிறீர்கள்; தனியார் வசம்
ஒப்படைத்து இருந்தால் உங்களை ஜூஸ் பிழிஞ்சிருப்பாங்க. இது போன்ற விமரிசனங்கள் வேறு
துறையினரால் வைக்கப்படுவது அன்றாட நிகழ்வு.
என்னது BSNL போராட்டமா அப்படி ஒண்ணு இருக்குதா ;ஸ்பெக்ட்ரம் விசயத்துக்கு அப்புறம் யாரு கருப்பு போன்
வெச்சிருக்கா? எல்லாம் வோடபோன்
உக்காரபோன், ஏர்டெல், ஜியோ, ஐயோ அது இதுனு போயாச்சு , இந்த அளகுல என்ன போராட்டம் வேண்டிக்கிடக்கு? முக்கால் வாசி golden
handshake வாங்கிக்கிட்டு போயாச்சு;
இப்ப வேலை இல்லாம
வயசாயி OLDEN HAND SHAKE -கை லொடலொடன்னு ஆடிக்கிட்டு
பென்ஷன் கேக்குறாங்க என்று விமரிசனம் .
உண்மை நிலவரம் என்ன?
ஒரு புறம் கடன் வசூலிக்க
சொல்லி உத்தரவு . மறுபெறம் ஆதார் அட்டையை சரிபார்த்துவிட்டு சாதாரண
கூலித்தொழிலாளிக்கு 25000/- ரூ வரை கடன்
வழங்கலாம் என்று சுற்றறிக்கை. வசூலில் சுணக்கம் இருந்தால் ஊழியர் மீது நடவடிக்கை
பாயும். செல்லையான்னு பேர் இருந்தா கோடிகோடியா கைல குடுத்து நீ நாட்டைவிட்டு
செல்லையா னு வழி அனுப்பி வைப்பாங்க. 1050 ரூ பாக்கி
உனக்கு ஒன்னும் கிடையாதுனு வக்கீல் நோட்டீஸ் வருது. என்று ஒரு சிறு வியாபாரி அலறி
ஊரைக்கூட்டுகிறார். இது புரியாம சம்பளத்துக்கு தான் போராட்டம் னு பிற பிரிவினர்
முடிவுகட்டுவது சாதாரண நிகழ்வு.
தொடரும்
அன்பன் ராமன்
In my bank I find more number of Muslim ladies to get மகளிர் உரிமைத்தொகை. It is annoying to see these Muslims with padtha with more of gold jewels in the neck and hand.
ReplyDelete