Wednesday, March 20, 2024

SINGER: VANI JAYARAM -3

 SINGER: VANI JAYARAM -3

வாணி ஜெயராம் -3

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் [அபூர்வ ராகங்கள், 1975] கண்ணதாசன் , எம் எஸ் வி,      குரல் வாணிஜெயராம் .

இந்தப்பாடல் முற்றிலும் ராக பாவங்கள் நிறைந்தது என்றாலும், கிட்டத்தட்ட அனைவரையும் முணுமுணுக்க வைத்த விந்தை. பொதுவாக பாரம்பரிய வகை இசை நுணுக்கங்கள் பாமரர்களுக்கு புரிந்து கொள்வது எளிதன்று; எனவே இதை போன்ற பாடல்கள் பலரையும் ஈர்க்க சில முன்னணிக்காரணிகள் இருத்தல் வேண்டும். 1. இசையின் வசீகரம்

 2 குரலின் மென்மையும், நளினமும் அல்லது ஆளுமை மிக்க கம்பீரம்

3 இசை அமைப்பின் துல்லியம். அது என்ன துல்லியம் ? என்றால், பாடலின் சொல் தரும் உணர்வை உரிய ராக அமைப்பில் பாட வைக்கும் போது இயல்பாக தடம் மாறும் [முட்டல்  மோதல் இல்லாத ஓட்டம் ] கவனமான பயணம்

4 இசைக்கருவிகளின் நேர்த்தியான ஒலி. இந்தப்பாடல் சாதாரண கச்சேரி வகை கருவிகள் கொண்டு பயணிப்பது ; அவை குறுக்கிடாமல் குரலை முன்னிலைப்படுத்திய நுணுக்கம். இதை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் பல தருணங்களில் வெளிப்படையாகவே சொல்வார் " வாத்தியம் எப்ப கேக்கணுமோ அப்பதான் தலையைக்காட்ட வேண்டும்; கருவிகள் இருப்பாதேலேயே அவற்றை ஒலிக்க தேவையில்லை " . அதை இந்தப்பாடலின் இலக்கணமாகவே காணலாம்.

இந்தப்பாடலை ஒரு விந்தை என்று ஏன் கூறுகிறேன். இவ்வகைப்பாடல்கள் பெரும்பாலும் பக்தி சார்ந்தவை யாக இருப்பன. ஆனால் இப்பாடல் வாழ்வின் பொது நிலை மற்றும் சில மன தடுமாற்றங்கள் குறித்து கவி அரசர் பதிவிட்டுள்ள சாரம் வசீகரம் மிக்கது . உதாரணம்

"காலை எழுந்தவுடன் "நாளைய " [அந்த நாள் குறித்த"] கேள்வி , "கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி "

ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் "இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும் ". இந்த வரியில் ஏன் என்ற கேள்வி என்னும் இடம் எவ்வாறு பாடப்பட்டுள்ளது என்று ஆழ்ந்து கேட்டால் எவ்வளவு கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று உணர்த்தும்.

"அதே போல கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் " என்ற வரியில் சந்தோஷத்தில் என்ற இடம் நோக்கி பறவை போல் இறங்கி அவனது கவனம் என்பதில் 'கவனம் 'என்ற சொல்லை  உயரப்பறக்க வைத்துள்ளார் இசை அமைப்பாளர்.

இது போன்ற பாடல்களில் இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த போட்டி தலை தூக்கும் -என்னவெனில் பாடலா இசையா  என்பது. இவை இணை பிறியா தண்டவாளங்கள் போல சேர்ந்தே பயணித்து இலக்கை அடைய உறுதுணை புரிவன. இதில் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவர். இது நீ இன்றி நானில்லை , நான் இன்றி நீ இல்லையே " என்ற வகை ஒத்துழைப்பு.. இசையின் வசீகரத்தில் பாடல் நம்மை ஈர்த்தாலும் , மனம் அசை போடுவது என்னவோ பொருள்பொதிந்த வாதங்களைத்தான். எண்ணற்ற தத்துவார்த்தங்களை அடுக்கடுக்காக வைத்த கவிஞரை நினைத்தால் கண்கள் குளமாவதை தடுக்கவோ மறைக்கவோ இயலவில்லை . அற்புதமான கண்கள் கொண்ட நடிகை, [ஸ்ரீ வித்யா]  50+ வயதில் மறையும் படி நிகழ்ந்ததை சொல்லாமல் கடக்க இயலவில்லை   கேட்டு மகிழ /  சிந்திக்க இணைப்பு

https://www.google.com/search?q=7+swarangalukkul+ethanai+paadal&oq=7+swarangalukkul+&gs_lcrp=EgZjaHJvbWUqCAgDEAAYFhgeMgwIABBFGA8YFhgeGDkyCggBEAAYgAQYxwUyCggCEAAYgAQYxwUyCAg

https://www.facebook.com/watch/?v=1992770147723253 QFR  7 SWARANGALUKKUL

அந்தமானைப்பாருங்கள் [அந்தமான்காதலி -1978] கண்ணதாசன், எம் எஸ் வி, கேஜே  ஜே , வாணி ஜெயராம்

ஒரு அருமையான ட்யூன் நெளிவு சுளிவுகளுடன். வலிமையான கிட்டார் ஒலியில் அதிலும் அவ்வப்போது இடை இசையில் கலக்கும் ஹவாயன் [HAWAIIAN  ]கிட்டார் மற்றும் தாள [கருவி] மாற்றங்கள் . மிக இயல்பான ஆர்ப்பாட்டம் இல்லாத பாடல் , காட்சி அமைப்பில் கூட எளிமை . ஒரு சிறு குறை மேக் அப்பில் கோட்டை விட்டது. முகம் , காது இர ண்டும்  வேறுபட்ட நிறங்களில் [சுஜாதா] அதே போல ஆடை மாறியஇறுதிப்பகுதியில் கை கால்கள் ஒரு நிறம், முகம் வேறு நிறம் என்று சற்று நெருடுவது. ஆயினும் பாடல் வெகு சிறப்பான இசையில் கேட்டு ரசிக்க + சுபஸ்ரீ அவர்களின் விளக்கங்களையும் கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=andhamanaipparungal+azhagu+qfr+song&newwindow=1&sca_esv=91d4ffdbafe144b1&sxsrf=ACQVn0-Oo-CMzYwK7CNm5FJoRaMLyZjIEw%3A1710732640089&ei=YLX3ZY QFR ANDHAMAANAI

https://www.google.com/search?q=andha+maanaippaarungal+azhagu+video+song&oq=andha+maanaippaarungal+azhagu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYo andhamaan kaadhali  msv kjj vj 1978

பாரதி கண்ணம்மா [நினைத்தாலே இனிக்கும் -1979] கண்ணதாசன், எம் எஸ் வி, எஸ்பிஐ பாலசுப்ரமணியன், வாணிஜெயராம்

1979 இல் விஸ்வநாதன் வெறி கொண்டவர் போல இசை அமைத்த படம் "நினைத்தாலே இனிக்கும்" படம், பாகவதர் காலத்து படம் போல 14 பாடல்களுடன் வெளிவந்த படம். விஸ்வநாதன் சிலிர்த்து எழுந்து இசை அமைக்க, இப்படத்தின் டைட்டிலே "இது ஒரு தேனிசை மழை" என்று ஆர்ப்பரித்தது வித விதமான பாடல்கள் , மாறுபட்ட இசை அமைப்பு. இந்த இசையின் நளினம் சிலருக்கு புளியைக்கரைத்தது என்பது மிகை அல்ல..பலரையும் மிரட்டி , பாடல்களுக்கென்றே புகழ் எய்திய படம். எம் எஸ் விக்கே  உரித்தான டூயட் சிருங்காரம் இப்பாடலின் சிறப்பு. தபலா நடையில் பெரும் புரட்சி என்றுபேசப்பட்ட பாடல் [தபலா பிரசாத் ] இடை இசை க்கோர்வைகள் வேறெதிலும் கேட்ககிடைக்காதன.

கேட்டு மகிழ இணைப்பு 

QFR

https://www.youtube.com/watch?v=sDliA0Co0Rg Bhrathi kannamma

https://www.google.com/search?q=BHARATHI+KANNAMMA+SONG+VIDEO&oq=BHARATHI+KANNAMMA+SONG+VIDEO+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE0MjM0ajBqN6gCALACAA&sourceid=chrome&ie=U 1979 NINAITHTHALE INIKKUM KD, MSV V J SPB [14 SONGS]

மேகமே மேகமே   [பாலைவனச்சோலை -1981] பாடல் வைரமுத்து , இசை ஷங்கர் கணேஷ் -வாணிஜெயராம்

இப்பாடல் மிக ஆழ்ந்து கேட்போரை வசீகரிக்கும். மிக நேர்த்தியான பயணமும் இசையின் ஆதரவுடன் பலநாட்கள் சிலாகிக்கப்பட்ட பாடல் . கேட்டு மகிழ

https://www.google.com/search?q=megame+megame+song+video+download&newwindow=1&sca_esv=7b95f69bc7151163&sxsrf=ACQVn0-0WQWDdt1PXnMy-h_OtYgbw8ePxQ%3A1709698149283&ei=ZeznZZfvEO-g megame paalaivanacholai 1981 S G VAIRAMUTHU VAANI JEYARAM

 

 இவ்வாறு எண்ணற்ற பாடல்களை தந்தவர்களில் வாணிஜெயராம் உள்ளிட்ட பலர் மறைந்து விட்டனர். ஆயினும் அவர்கள் தந்த இசைக்கோலங்களை ரசிப்போம்.

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பாடலில் மயங்காதோர் உண்டோ

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு..
    ஏழு ஸ்வர ங் கள் பாடலின் அலசல் அருமை . வரிகளின் உணர்வை எப்படி MSV இசையில், சங்கதி‌யி‌ல் கொண்டு வந்திருக்கிறார் என்பதன் விளக்கம் அபாரம்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...