T PRAKASH RAO -4
பிரகாஷ் ராவ் -4
என்னருமை காதலிக்கு [எல்லோரும் இந்நாட்டு மன்னர்-1960] பட்டுக்கோட்டை , டி ஜி லிங்கப்பா , டி எம் எஸ்
இது ஒரு தூது விடும் பாடல், வெண்ணில வே தூதுக்கு தேடப்படும் கட்டம் . லிங்கப்பா வின்
இசை யில் பெரும்பாலும் பாடல்கள் அடேங்கப்பா ரகம் தான். இதுவும் அப்படியே. கவிதை
நயமும் டி எம் எஸ்ஸின் குரலும் தெளிவான உச்சரிப்பும் நம்மை சிறைபிடிக்கும், ஒளிப்பதிவு -வேறு யார் ?பிரகாஷ் ராவின்
பழைய ஆஸ்தானம் வின்சென்ட் தான் , காட்சியில் வெளிப்படுகிறதே . அந்நாளைய பாடல்-- கேட்டு ரசிக்க
தொட்டால் பூ மலரும் [படகோட்டி- 1964] வாலி, வி-ரா, டி எம் எஸ் , பி சுசீலா
தமிழ்த்திரையின் பொற்கால இசை என்றழைக்கப்பட்ட 1960- 1968 காலத்தில் படகோட்டி
பெரும் வரவேற்பு கண்டது பாடல்களுக்கெனவே எனில் மிகை அன்று. படத்தின் அனைத்து
பாடல்களும் இன்றளவும் சுவை குன்றாமல் உலவி வருவதைக்காணலாம். இவற்றையும் விட கவிஞர்
வாலி யை எம் ஜீ ஆரின் மனம் கவர்ந்த கவிஞர் நிலையில் கொண்டு சேர்த்ததும் படகோட்டி
பாடல்கள் தான். அவை ஒவ்வொன்றும் எம்ஜியாருக்கெனவே தைக்கப்பட்ட உடைகள் போல கன
கச்சிதமாகப்பொருந்த , பின்னர் நிகழ்ந்தவை சரித்திர பதிவுகள் ஆயின. தொட்டால் பூ
மலரும் மட்டுமே படகோட்டியில் MGR -சரோஜாதேவி இருவருக்கான டூயட்
தொட்டால் பூ மலரும் [படகோட்டி -1964] வாலி, வி-ரா, டி எம் எஸ் , சுசீலா
மாறுபட்ட வகை இசை அமைப்பு , உயிர்த்துடிப்பான குரல்கள். அகன்று விரிந்து பரந்த
காட்சிக்களம் , பார்க்கவே
ரம்மியம். மேலும் விளக்கவொண்ணா ஈர்ப்பு இக்காட்சியில் இருப்பதும் ,
பாடலின் ரீங்காரம் நம்மை விட்டு விலக வெகு நேரம் ஆவதும்
நான் பல தருணங்களில் புரிந்துகொள்ளப்பார்த்து வந்துள்ளேன் . மேலோட்டமாகப்புரிந்தது
காட்சியின் ஒளிப்பதிவும் [PL ராய்], ஒலிப்பதிவும் இவ்வளவு நேர்த்தியாக பல தருணங்களில்
இணைவதில்லை . அதிலும் ராக மாறுபாடுகள் நம்மை சுற்றிச்சுற்றி வட்டமிடுவதாக உணர
முடியும். பாடலின் வரிகளில் ஒவ்வொரு இறுதிச்சொல்லும் சற்று நீட்டி வளைத்து
பாடப்பட்டுள்ள அழகை ஊன்றி கவனியுங்கள் சுத்த தன்யாசி ராகம் என்கின்றனர் , சுத்த சந்யாசியைக்கூட மடக்கிப்போட்டு விடும் போல் இருக்கிறது. கேட்டு
ரசியுங்கள் / சுபஸ்ரீ அவர்களின் விளக்கங்கள் புரிந்து கொள்ளப்படவேண்டியவை
PADAGOTTI
Also watch QFR
319
என்னை எடுத்து
தன்னை கொடுத்து [படகோட்டி-1964]
வாலி, வி-ரா, பிசுசீலா
சோகத்தை பிழிந்து குழைத்து
குழைத்து வடித்த பாடல் . சொல்லை சொல்வதா , ஏக்கத்தை சொல்வதா , ராகத்தை சொல்வதா? மென் கருவிகளின்
நுண் இயக்கத்தை சொல்வதா ?
இருக்கும்
துயரத்தை இமயம் வரை உயர்த்த்திய ஓலத்திற்கு, எம் எஸ் வி தந்த குரலின் வீச்சை சொல்வதா. தமிழைச்சங்கம்/
கண்ணதாசன் அறக்கட்டளை இயக்கத்தின் திரு லக்ஷ்மணன் செட்டியார் சொன்னார், இந்தப் பாடல்
பதிவின் போ து எம் எஸ் வி வெளிப்படுத்திய சோகம், இவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி
நடுங்கும் நிலை வந்தது , அவ்வளவு
உருக்கமாக பின்னணியில் குரல் கொடுத்தார். கேளுங்கள் அந்த கருத்தின் ஆழத்தை பாடலுக்கு
இணைப்பு
https://www.google.com/search?q=PADAGOTTI+QFR+SONG&newwindow=1&sca_esv=f1fcaf6411aede3e&sxsrf=ACQVn0_4H_igRtTuOHzV4XW-CoaL0-gzmw%3A1709110848188&ei=QPbeZZePC_r14-EPv6KiuAc&ud
PADAGOTTI 1964 VAALI V R PS [ PIECE NO.
3]
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment