Sunday, March 24, 2024

CRIPPLING THE WORK -3

 CRIPPLING THE  WORK -3                            27-03

வேலை நிறுத்தம்-3

BSNL சங்கம் சொல்வதென்ன? நாடு முழுவதும் உள்ள ஏராளமான கோபுரங்களில் [டவர் களில்] தனியார் வாடகை பாக்கி பல கோடிகள் வசூல் ஆகாமல் இருக்கிறது. அதை வசூலித்தால் ஊழியர் பென்சன், BSNL மேம்பாடு என எல்லாம் செய்ய முடியுமே என்ற போராட்டம். அதற்கு வங்கியுடன் சேர்ந்துதான் போராட வேண்டுமா? 1000 பேர் போராடினால் கூட கண்டுகொள்ளாத அதிகார வர்க்கம், தனியே 13 பேர்  கூவினால் எளிதில் சிறையில் அடைத்துவிடும் அதனால் தான் வேறு பெரிய சங்கங்களுடன் சேர வேண்டியுள்ளது . பெரிய நியாயம் பேசும் அரசியல் வாதி பெரிய கட்சி ஆனாலும் கூட்டணி தேடுவான், ஊழியர் கூட்டணி வைத்தால் கொந்தளிப்பான் -எல்லாமே உனக்கு வந்தா தக்காளி சட்னி கேஸ் தான்

இதுபோல் பேசிக்கொண்டிருந்த கூட்டங்களில் ஆசிரியர்களும் உண்டு .

காட்சி-3  ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம் இது பல பெயர்களில் இயங்குவது அவை வெவ்வேறு படிநிலை சார்ந்தவை  ஆரம்பப்பள்ளி முதல் ஆராய்ச்சிப்படிப்பு இயங்கும் பல்கலை வரை தனித்தனி உறுப்பினர் கொண்ட வெவ்வேறு அமைப்புகளாக இருப்பவை. அரசுகள் மசிவதில்லை என்பதால் பெரிய குழவியாக எடுத்து உருட்டினால் தான் மசிக்க முடியும் என்பதால் இவ்வளவு பெரிய கூட்டமைப்பு. இவர்களின் முக்கியபோராட்ட களம் சென்னை தான், பிற மாவட்ட தலைநகர்களும் உண்டு.     பல அமைப்புகள் இணைவதால் , வலுவான ஒரு மைய கோரிக்கையும் , பிற பல கோரிக்கைகளும் முன் வைக்கப்படும் . சிலவற்றை நிறைவேற்றவே மிகுந்த மாநிலம் தழுவிய இடையூறுகள் செய்தால் தான் சில நிறைவேறும். இதனால் தான் ஆசிரிய சங்கங்கள் தேர்வு நேரம் பார்த்து போராட்டம் அறிவிக்கும் . இது பொதுமக்களிடையே கவலையை தோற்றுவிக்கும் ஐயோ என் மகன்[ள்] +2 ரிசல்ட் வராமல் மேற்படிப்புக்கு போக இடைஞ்சல் வரும் போலிருக்கிறதே என்று ஒரு சிலரேனும் அரசுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண கடிதம் வரைவர்.   இது ஒரு நுண் துளி ஆதரவு தான்.

சமுதாயக்காட்சி ;

சார் வருஷத்துக்கு 52 சனி ஞாயர் போச்சு சார். அப்புறம் பொங்கல் புளியோதரை தீபாவளி, க்ரிஸ்மஸ் மொஹரம், மஹாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, குடியரசுதினம் சுதந்திரதினம் , குட் பிரைடே னு ஒரு பக்கம் லீவா விடுவாங்க ;பத்தாததுக்கு குவாட்டர்லி , HALF YEARLY, ஆனுவல் லீவு ஒரு 80 நாள் பொகஞ்சிரும். பத்தாததற் கு  ஹிந்தி எதிர்ப்பு, இலங்கை தமிழர் ஒரு 20 நாள் காலி.

பேப்பர் திருத்த 1+1 ,2 மாசம் லீவு , ஹாக்கில ஜெயிச்சுட்டோம், கிரிக்கெட்ல தோத்துட்டம் ,  வாத்தியார் செத்துட்டாரு, அரசியல் வாதி போய்ட்டாரு னு மாறி மாறி லீவு. . மொத்தமே ஒரு வருசத்துக்கு  80-100 நாள் வேலை . இவனுக தான் உண்மையான நூறு நாள் வேலை திட்டம் செய்யறவனுக. இந்த அளகுல இன்னும் சம்பளம் குடு , பழைய பென்ஷன் கொண்டுவா னு கலெக்டர் ஆபீஸ் முன்னால பஸ் ஸ்டான்ட் மாதிரி கூட்டம் போடுறதே வேலை. அது மட்டுமா ஒவ்வொருத்தனும் தனித்தனியா   பள்ளிக்கூடம் மாதிரி ட்யூசன் நடத்துறான். சும்மா காசு கொட்டுதுய்யா , இதுக்கு மேல பென்ஷன் வேற

தொடரும்

அன்பன் ராமன்

 

 

1 comment:

  1. பொதுப் பார்வையில் ஆசிரியர் போராட்டம் என்பது ஒரு தேசத் துரோகம் போல் தெரிகிறது. ஆனால் ஆழ்ந்து நோக்குங்கள், நமது தேசத்தில் தான் அவர்களுக்கு மிகக் குறைவான சம்பளமும், இதர சலுகைகளும் என்பது தெரியவரும்.

    மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் ஆசிரியர்கள் பட்டி தொட்டிகள் முதற்கொண்டு பெரிய நகரங்கள் வரை உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் உருவாக்கிய சான்றோர்களினால் தான் இந்த உலகமானது பலவிதமான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. எனவே ஆசிரியர்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காணப்பட வேண்டியவர்கள்.

    ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியது.

    ReplyDelete

LEARNER ETHICS-4

  LEARNER ETHICS-4        [A silent process of shaping-3]. In my basic understanding ‘ethics’ gets infused into minds from day-to-day ha...