Monday, March 4, 2024

GRATIFICATION- CRIPPLING WORK -4

 GRATIFICATION- CRIPPLING WORK -4             

லஞ்சம்/ வேலை நிறுத்தம்  -4

சென்ற பதிவில்...

அடுத்தவாரம் வாங்க என்று உங்களுக்கு சற்று மூச்சு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்

  அடுத்த வாரம் நாம் போய் நம்ம தெரு ஆசாமியை பார்த்தால் வாங்க என்று 2 வது மாடியில் ஒருத்தி பி [கமிஷனர் க்கு] என்ற அந்தஸ்த்தில் வெறும்கை மட்டும் விளிம்பு வழியே ஓரமாக கீழிறங்கி முதுகின் கீழ்ப்பகுதியில் ஒட்டிக்கொண்டு முதுகு வெட்ட வெளிச்சமாக இருப்பவர் [அப்புறம் தான் தெரியும் முகத்தைக்காட்டி பயன் இல்லை -முதுகை காட்டிக்கொண்டிருக்கிறார் - ஓஹோ அப்படியா என்று . ] அவரைக்கடந்ததும் சீனியர் பி குமாரவேலு, நெற்றியில் விபூதி, குங்குமம், உப்பு மிளகு கலவை மீசை, பளீரென்ற பல் வரிசையில் பக்கவாட்டில் தங்கப்பல் -வாங்க என்று பெரிய கும்பிடு ; விஷயம் கேட்டு, நீங்க டெஸ்பாச் ல  தானே கொடுத்தீங்க, அக்கினாலஜ்மென்ட் தந்திருப்பாங்களே, அதைக்கொண்டுவந்து, உங்க லெட்டர் ஜெராக்ஸ் காபியை தாங்க 2 நாள் முடிச்சுறலாம் என்பார்.. 

டெஸ் பாச் வேண்டாம் நானே கொண்டுபோறேன் என்று கிளம்பிய தெரு ஆசாமி இப்போது பேப்பரை தொலைத்துவிட்டான் .அதை சொன்னால் தெருவில் மனஸ்தாபம் வரும் . சரிங்க டெஸ்பாச் காயிதம் இல்லாட்டி என்னங்க செய்ய? என்றதும் நீங்க வெள்ளிக்கிளமை வாங்க கமிஷனர் கேம்ப் போய்யிருவாரு மத்த பேப்பர் எல்லாம் ரெடிபண்ணி முடிச்சுடுவோம் என்பார் கோல்டன் டூத் குமாரவேலு. கேம்ப் போனா நீங்க

நான் போகமாட்டேன் கேம்புக்கு அந்தம்மாதான் போகும் என்று தகவலை கசிய விட்டார். மெல்ல வெளிய வந்து கொஞ்சம் செலவு ஆவும் - தம்பி என்று ஒரு வழுக்கைத்தலையன் காதில் ஓத , அதாவது ...ஹி ஹிஹி வந்து...வந்து [1500/- ரூவா கொண்டாந்துருங்க -கச்சிதமா முடிச்சிருவோம் என்பான்]. வேறு வழியின்றி தலையை ஆட்டி விட்டு தெரு ஆசாமியிடம்

 [1.5 என்று கிசுகிசுத்தால் , சார் உங்க பேப்பரையே  காணுமில்ல ,ரொம்ப யோசிக்காம டக்குனு முடிச்சுக்குங்க கமிஷனர் போலீஸுனு போனீங்க இன்னும் 3 தலைமுறைக்கு உங்க வேலை முடியாது என்று இன்னும் புளியைக்கரைப்பார்] தெரிந்த வழியே போய் வேலையை முடிக்கப்போனால் இப்படி ஏதாவது சிக்கலை உண்டாக்கி கறந்து விடுவார்கள். .தெருமுனையில்  லஞ்சம் குறித்து கொதித்த நண்பர்  .இப்போது மறைமுக ஏற்பாட்டில் உங்களிடமே கறந்து விட்டார். இது லஞ்சம் குறித்த வெளி உருவத்திற்கும், அதே நபரின் செயலுக்கும்  உள்ள இடை வெளி. இதைத்தான் தகிடுதத்தம் என்ற வகையில் அனைவரும் உணர வேண்டும். 

நீங்கள் தெரு நண்பரிடம் கேட்டால், நானும் ரொம்பதூரம் பேசித்தான் பாத்தேன் மனுஷன் பிடி குடுக்க மாட்டேங்கறாரு. கமிச்ர்னு கிட்ட போனா கண்டிப்பா புது அப்ப்ளிகேசன், இன்ஸ்பெக்சன் , எஸ்டிமேட்டு னு காலம் கடத்திடுவாரு. 1500/- பாக்காமே மள மள னு முடிங்க. வெள்ளிக்கிழமை போய் பாத்துருங்க -ஆமா என்பார். ஆனா ஒன்னு சார் பணம் படிஞ்சிருச்சுன்னா வேலையை முடிச்சுருவாரு -அதுக்கு நான் கியாரண்டி 

[ அந்த சதிகார வளையத்தில் இவரும் ஒருவர் என்று இப்போது புரிகிறதா? ]  இப்படித்தான் புற செயல் வெள்ளைப்புறா , உள்ளூர பெருச்சாளி வகை நிலைப்பாடு தான் பொதுமக்களின் லஞ்சம் குறித்த நிலைப்பாடு. லஞ்சத்தை அவதூறாகப்பேசும் பலர் தனது வாழ்வில் லஞ்சம் பெறாமல் இருக்கிறார்களா? எனில் பேச்சை மாற்றுவார்க;ள்

அதாவது நான் வேண்டுமானால் லஞ்சம் வாங்காமல் இருக்கலாம் , ஆனால் என் வேலைகளுக்கு நான் கொடுக்காமல் இருக்க முடியாதே என்று அங்கலாய்ப்பர்.   "நான் வேண்டுமானால் லஞ்சம் வாங்காமல் இருக்கலாம்" என்றால் என்ன ? வேண்டுமானால் ---- இருக்கலாம் [அதாவது வேண்டுமானால் இருக்கலாம் -இப்போது அப்படி இல்லை என்பது மறைமுக வாக்கு மூலம்] இதற்கு மேலும் சான்றிதழ் வழங்குவர் -சார் யார் வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது , எல்லாரும் வாங்கி பளகிட்டாங்க , அது இல்லாம முடியாது

எவன்தான் வாங்கலை என்று நியாயப்படுத்திடும் செயலில் இறங்குவர். அவனுகளைப்பூரா சொத்தையயும் பிடுங்கிகிட்டு ஜெயில் போட்டு 40 வருஷம் கெடங்கடா னு தூக்கி உள்ளவெச்சுப்புடனும் என்று ஒருவர் வாயைத்திறந்ததும் வீரவசனம் பேசியவர் முகம் விளக்கெண்ணெய் குடித்தமாதிரி  மாறி நைசாக நழுவிவிடுவார் தெரு நண்பர். 

 லஞ்சம் பெறுவோரின் தாரக மந்திரம் யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது, நான் மட்டும் வாங்குவேன் அது தவறில்லை என்பதே

ஆஹா என்னே கோட்பாடு. வெவாசி ஏகமா இருக்குது மேல் வருமானம் இல்லைனா ஒன்னும்   ஜமாளிக்க முடியாதென்று IMF CHIEF போல முழங்குவார்; பிற 'ல' வாங்குவோர் ஆமா ஆமா என்று கீழே குனிந்தபடி ஒத்து ஓதுவர். இதுவே நமது திருநாட்டின் தனிச்சிறப்பு. பின் இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு பண அடிப்படையில் பிணம் போல் ஓட்டு  போடும் உத்தமர்கள் தானே -வேறென்ன நியாயம் கிடைக்கும்.?   சிந்திப்பீர்

அன்பன் ராமன்   

2 comments:

  1. இப்போ பல கட்சிகள் உண்டியல் எடுப்பதை விட்டுவிட்டு பெரிய கட்சிகளிடம் மொத்தமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாய்களை இறுக்கமாக கட்டிக கொண்டுள்ளார்கள். தொட்டதற்கெல்லாம் போராடியவர்கள் இப்போது மௌனிகளாக் மாறிவிட்டார்கள்.

    ReplyDelete
  2. முன்பெல்லாம் உண்டியல் குலுக்கினவனுக்கும் பங்கு தர வேண்டும் ;இப்போது அது கிடையாது . மொத்தமா க ஒரு தொகை -அதனால் ஒருமித்த மௌனம் ஆனால் அவ்வப்போது உளறுவது கடமை.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...