Tuesday, March 5, 2024

SINGER: VANI JAYARAM

 SINGER: VANI  JAYARAM

வாணி ஜெயராம்

இயற் பெயர் கலை வாணி , பழைய வட ஆற்காடு மாவட்டம் -வேலூர் இவரது ஊர். கல்வி சென்னையில் -லேடி சிவசாமி அய்யர் பள்ளி மற்றும் ராணி மேரி கல்லூரியில். ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா வில் உயர் நிலையில் பணி புரிந்து சில ஆண்டுகள் கழித்து மும்பை யில் கால் பதித்தார். ஹிந்துஸ்தானி வகை இசை பயின்று மிக நுணுக்கமாக பாடும் திறன் பெற்று பலரின் பாராட்டுகளைப்பெற்றவர். இறுதி மூச்சு வரை அவர் சிலாகித்த இரு ஆசான்கள் 1 வசந்த் தேசாய்   2 மெல்லிசைமன்னர் எம் எஸ் விஸ்வநாதன். எம் எஸ் வி சொல்வது வாணிஜெயராம் blotting paper போல உடனே உறிஞ்சிக்கொள்வார் [அதாவது பாடல் சங்கதி /நுணுக்கங்களை] அதனால் மிக எளிதாகப்பாடிவிடுவார். இசைக்குழுவினருக்கு இது போல் பாடகர்கள் கிடைத்தால் நேர விரயம் இன்றி மிக விரைவாக பாடல் பதிவு செய்ய முடியும் எனவே VJ மற்றும் எஸ் பி பி இருவரையும் பெரும் மரியாதையுடன் அணுகுவதை பலரும் அறிவோம்.

இதைப்பாடினார் அதைப்பாடினார் என்று சொன்னாலும் வாணி ஜெயராம் வானுயரப்புகழ் கொண்டது என்னவோ

1 "மல்லிகை என் மன்னன் மயங்கும்" [தீர்க்க சுமங்கலி -1974] பாடல் வாலி இசை எம் எஸ் வி --மூலமே. அதியற்புதமான ஏற்ற இறக்கங்கள், சொல் பிரிப்புகள் , இயைந்து ஒலிக்கும் துடிப்பான இசைக்கருவிகளின் மதிமயக்கும் ஒலித்தொகுப்புகள் என ஒரு அற்புதக்கலவை. ஆழ்ந்து கவனித்தால் புரியும் இப்பாடல் முற்றிலும் மாறுபட்ட அமைப்புகளும் , இசைத்தொகுப்புகளும் கொண்டு கேட்கத்தெவிட்டாத ஒலி  அமைப்பு கொண்ட புதுமை என்று. இந்தப்பாடலுக்கு ஒப்பீடு இந்தப்பாடல் தான். VJ யின் திறமைகளை வெளிச்சம் போட்ட பாடல்.

https://www.google.com/search?q=malligai+en+mannan+mayangum+video+song+free+download&newwindow=1&sca_esv=bfe635aceca27846&sxsrf=ACQVn0_yyuL05SZxJa2T5tcxCJyQNJiEzA%3A1709453837392 DHEERGA SUMANGALI 1974 malligai vaali MSV VJ

2  ஆல  மரத்துக்கிளி [பாலாபிஷேகம் 1977] மருதகாசி , இசை ஷங்கர் கணேஷ் குரல் வாணிஜெயராம்

எதோ மண்ணியம்  நிறைந்த பாடல் என்றாலே நாங்க தான் என்று நம்பிக்கொண்டிருப்போரே இந்தப்பாடல் ஷங்கர் கணேஷ் இசை அமைப்பில் ஒரு தெம்மாங்கு வகை ,முற்றிலும் இயற்கை சூழலில் பாலாபிஷேகம் படத்தில் வாணியின் குரலில. தெம்மாங்கிற் கான சொல் பிரித்தல் -- ஆ.. .... ல ம ...ரத்து  கி ...ளி என்று       முறையாக கையாளப்பட்டு கேட்க கேட்க பரவசமூட்டும் ராக பாவம் மற்றும் இசை க்கோர்வைகள் நிறைந்த 1977 ம் ஆண்டில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் . வாணியின் குரலில் மற்றுமோர் சுகமான கீதம் கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=aala+maraththukkili+video+song+download&oq=aala+maraththukkili+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChig Shankar ganesh vj 1977

3  விண்ணுலகில் இருந்து தேவன் [புனித அந்தோனியார் -1977 ] கண்ணதாசன் எம் எஸ் வி, வாணிஜெயம்

இசை அமைப்பின் வகையிலேயே இது ஒரு தேவாலய கீதம் என்று பட்டவர்த்தனமாக தெரிவிக்கும் இசைக்கோலம் மெல்லிசை மன்னருக்கே உரித்தான நயம் மற்றும் நளினம்.காட்சிக்கேற்ற சொல் ஆட்சி எம் எஸ் வி யின் கோரஸ் அமைப்பு -கேட்பவரை வசீகரிக்கும் ஒரு அமைதி தரும் பாடல் வாணியின் குரலில். கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=vinnulagil+irundhu+devan+video+song+download&newwindow=1&sca_esv=d0136fcaccc01fe6&sxsrf=ACQVn0-v1-xkPf2yk7WEfpfSPkkfd3fDXA%3A1709478420159&ei=FJLkZbin punitha anthoniyar 1977 kd msv vj

4 பொங்கும் கடலோசை [மீனவ நண்பன் 1977] வாலி, எம் எஸ் வி, வாணிஜெயராம்

இது போன்ற கட்டங்களில் எம் எஸ் வி கட்டவிழ்க்கும் இசைக்கோலம் சொல்லில் அடங்காது . அதற்கென்றே விசேஷ ஒலிக்கலவைகளையும் தாள முறைகளையும் வித விதமாக அமைத்து பரவசப்படுத்துவது மன்னருக்கு கை வந்த கலை. எனினும் இந்த பாடலில் உள்ள பாவங்களும் ராக மாற்றங்களும் ஏராளம் கேட்க தெவிட்டாத வகை அமைப்பு பாடலின் சிறப்பு கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=konjum+kadalosai+video+song&newwindow=1&sca_esv=bfe635aceca27846&sxsrf=ACQVn0-DppbKnp3e0ZPfKk94Zldb_TELXw%3A1709454211379&ei=gzPkZdjXFs6qseMPnf6p-A PONGUM KADALOSAI MEENAVA NANBAN VAALI MSV V J 1977

QFR https://www.google.com/search?q=PONGUM+KADALOSAI+qfr+&newwindow=1&sca_esv=4c62ad2466e8c9fa&sxsrf=ACQVn0_9Qn0HzgvxT6RCzQA4tryziQ6bxQ%3A1709700214880&ei=dvTnZZOxNaKE4-EPuKyYoAU QFR

அனைத்து இணைப்புகளையும் ஆழ்ந்து ரசியுங்கள்

 தொடரும்

நன்றி  அன்பன் ராமன்

2 comments:

  1. மிக அருமையான பதிவு, வாணி ஜெயராமின் திறமை பற்றி, ஒரு சில உன்னத பாடல்களுடன். எம் எஸ் வி யின் மேல் அவர் கொண்ட தெய்வத்தனைய பக்தி நாம் நன்கு அறிந்ததே 👍

    ReplyDelete
  2. ஒரே நாள் உனை நான்
    மேகமே மேகமே
    நினைவாலே சிலை செய்து
    இவைகளெல்லாம் நான் ரசித்த வாணி ஜெயராம் பாடல்கள்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...