DIRECTOR T PRAKASH RAO -2
இயக்குனர்
பிரகாஷ் ராவ் -2
திரு
பிரகாஷ் ராவின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு
அருமையான பாடல் காட்சி
"காத்திருப்பான் கமலக் கண்ணன்"
[உத்தம புத்திரன்[பாடல்
சுந்தர வாத்யார்] ஜி
ராமநாதனின் இசையும், பி லீலாவின் ஆளுமையும் இணைந்த பாடல். தமிழ்த்திரை படங்களில்
பி லீலாவின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. ஏனெனில் அவரது குரல் தனித்துவம் கொண்டது, கர்னாடக
ராகங்களை அனாயாசடமாகப்பாடும் வல்லமையும், இசை
அமைப்பாளர்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்நாளைய பின்னணிப்பாடகி. ஏராளமான
பக்திப்பாடல்களுக்கு கேரளாவில் வெகு பிரபலம். ஜி ராமநாதனுக்கு நன்கு வலு
சேர்த்தவர்கள் இருவர் ஒன்று பி லீலா 2 டி எம் சௌந்தரராஜன், இருவரையும்
பலபாடல்களில் வெகு சிறப்பாக பயன் படுத்திக்கொண்ட GR அவர்களை
நினைவு கூறுகிறேன். .இந்தப்பாடல் எவ்வளவு
விறுவிறுப்பாக அமைந்துள்ளது. நாட்டிய முத்திரைகளையும், பாவங்களையும்
அரங்கேற்ற உதவிய அற்புத இசை கொண்ட வெற்றிப்பாடல். திருவாங்கூர் சகோதரிகள் [பத்மினி
ராகினியின்] நடனம் இப்பாடலுக்கு உதவியதா அல்லது அவர்களின் முன்னேற்றத்திற்கு
இப்பாடல் உதவியதா எனில் , பின்னதே
முதன்மை பெறுகிறது என்பேன். பாடலின் நளின கம்பீரத்தைக்கேட்டு மகிழ இணைப்பு
இப்பாடல் ஒரு மேற்கத்தியபாணியில் அமைந்த தாளக்காட்டுகளும், க்ளாப்ஸ்
எனப்படும் கை தட்டல்களும் , ஒலிக்கலவைகளும்
கொண்டு பரிமளிக்க , பெரிதும் பேசப்பட்ட பாடல் [கு மா பாலசுப்ரமணியம் ] இசை ஜி
ராமநாதன் குரல்கள்: டி எம் சௌந்தரராஜன் AP கோமளா , ஜமுனா ராணி , ஜிக்கி மாறும்
பலர் என்ற பெருமைகொண்டது.
சிவாஜி கணேசன் அன்றி வேறு யாரும் இது போன்ற பாத்திரத்தில் இந்த அளவு சோபித்திருக்க இயலுமா என்பது கேள்வி.. சிவாஜிக்கு இரட்டை வேடம் .ஆ அது என்ன பெரிய விஷயமா என்போர் கவனிக்க , ஒளிப்பதிவாளர்களையே வியக்க வைத்த கைவண்ணம் ஏ வின்சென்ட் வெளிப்படுத்தியது இந்தப்படத்தில் தான். ஆம் லைட் மாஸ்க் என்ற அவரின் [வின்சென்டின்] பிரத்தியேக யுத்தி தான்-- டபுள் ஆக்ஷன் கட்டங்களில் இரண்டு சிவாஜிக்கும் இடையே மெல்லிய கீற்று போன்ற கோடு இல்லாமல் வெகு இயல்பான ஒளிப்பதிவு. இன்றும் கூட இது போன்ற காட்சிகளில் சொதப்பல் இல்லாமல் ஒளிப்பதிவு செய்வோர் மிகமிக குறைவு.
நான் கம்பியூட்டர்கொண்டு தவறு திருத்தி
வெளியிடும் காலத்தை பற்றி பேசவில்லை. அந்நாளில் post production correction இல்லாமல், தவறே இல்லாமல்
ஒளிப்பதிவு செய்தலைப்பற்றிக்குறிப்பிடுகிறேன். இன்று ஒளிப்பதிவு வெகு சிறப்பாக இருப்பதாக யாரும் மார் தட்ட
வேண்டாம்.பிலிம் பயன்படுத்தினால் தெரியும் ஒளிப்பதிவாளரின் வண்ட வாளம் மேலும்
ஜூம் [ZOOM ] என்ற அமைப்பு திரை
உலக பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே ஒரு பிரெஞ்சு சுற்றுலா பயணியின் காமெராவை
இரவல் வாங்கி அந்த லென்ஸை 16 mm கமெராவில் பொருத்தி படம் பிடித்து லண்டன் கோடாக்
நிறுவனத்திற்கு அனுப்பி 35mm அளவிற்கு பெரிது படுத்தி அதைசினிமாவில் நுழைத்தார்
வின்சென்ட் . லண்டன் கோடாக் நிறுவன டெக்னீஷயன்கள் எப்படி சினிமாவில் ஸூம் [ZOOM ]ஷாட் ? என்று -வியந்தனர்
என்பது அந்நாளைய பரபரப்பு. அதை வின்சென்ட் கூறியதாக தி ஹிந்து பத்திரிகை வெளிட்ட
தகவல் இணைத்துள்ளேன். பாடலையும் இணைப்பையும் கீழே காண்க
Vincent recalled shooting a song sequence at Brindavan Gardens, Mysore:
Padmini was standing on the first floor of the hotel and Sivaji
Ganesan was at a waterfall in the garden below. To show them in the same frame
I had placed the camera at a distance but in that long shot the images were not
visible properly. Then I saw a French lady tourist taking snaps. I borrowed her
camera, took out its lens and fitted it to the Paillard Bolex 16 mm camera that I had with me. The lens gave a zoom
effect. I could now film the actors in one shot and, without cutting the shot,
I also took the close-up of Padmini. Since I had taken this particular block of
the song in 16 mm colour film, we sent it to the Kodak lab in London
for processing and blew it to 35 mm. The
technicians there were surprised at the result and asked me how I had taken the
shot. We had no zoom lens in India then. --A vincent
வளரும்
நன்றி
அன்பன் ராமன்
உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே
ReplyDeleteகாத்திருப்பான் கமல் கண்ணன்
இந்தப் பாடல்களை ஆயிரம முறை கேட்டாலும் அலுக்காது