IS LEARNING- BITTER?
கல்வி கற்றல் கசப்பானதா ?
இது என்ன ஏதோ அனுபவக்கதை போன்று தெரிகிறதோ? அனுபவக்கதை அல்ல
அனுபவம் விளைவித்த பார்வை. ஆம் நான் இது
காறும் குறிப்பிட்டு வரும் பல தலைப்புகளும், தகவல்களும் நான்
அறிந்த மற்றும் உணர்ந்தவையே . இவற்றில் மேலோட்டமான வாசகங்கள் எதையும் நான்
பேசுவதில்லை. எனவே பல குழந்தைகள்/சிறுவர்கள் போல நானும் இந்த கல்விகற்கும்
காலங்களில் உணர்ந்த இடர்ப்பாடுகளை, நானே ஆசிரியன் என்ற
நிலையை எட்டிய பின்னர் , பயில்வதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்த எனது அனுபவம் கொண்டு
, எனது செயல்
பாடுகளை படிப்படியாக வடிவமைத்தேன். அதனால் பெருவாரியான மாணவர்கள் எனது
வகுப்புகளில் நிச்சயம் குழப்பம் இல்லாத தெளிவு கிடைக்கும் என்று புரிந்து
கொண்டனர். . அதனால் என்னிடம் மிகவும் எதிர்பார்க்க தலைப்பட்டனர். இதை அவர்கள்
எதிர்நோக்குவதால் எனது பணியும் பொறுப்பும் அதிகமானது ;ஆனால் இதை ஈடேற்ற
ஆசிரியன் என்ற முறையில் மென்மேலும் தகவல்களையும் , சமகால
கருத்துகளையும் [contemporary
ideas ] தொடர்ந்து நானும்
பயின்று அதன் பின்னரே வகுப்புக்குள் நுழைவேன். அதற்காக ஒருநாளும் வகுப்புக்கு
போகாமல் இருக்க முடிஉயாது எனவே கூடுதல் நேரம் பல்கலைக்கழக லைப்ரரி /ஆராய்ச்சி
கட்டுரைத்தொகுப்புகள் குறித்து அறிய என்று அதிக
நேரம் வெள்ளி, சனி நாட்களில் தகவல் திரட்டுதல் எனது தேவை ஆயிற்று. இது
குறிப்பாக எங்கள் துறையில் பட்ட மேற்படிப்பு PG –[1984] துவங்கிய
நிலையில் எனது ஆசிரியப்பணிக்கு மிக வலுவாக கை கொடுத்தது.. என்ன சுய தம்பட்டம்
என்கிறீர்களா?
தம்பட்டம் அல்ல தான் பட்ட அனுபவம் என புரிந்துகொள்ளுங்கள்..
இப்போது எனது விளக்கம்
கல்வி ஏன் கசக்கும்?
பொதுவாக சுவை இன்றி இருக்கும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுப்பதும், சுவைத்துஉணர முடியாத உண்மை மண்டைக்குள் ஏற மறுப்பதும் இயற்கையில் நிகழ்வன; எனவே இதை தவறு என்பதே தவறு.
என்ன வேதாந்தம் பேசுகிறாய் ?
என்று கேட்கத்தோன்றுகிறதோ? தகவலைப்புரிந்து கொள்ளுங்கள். பயில வரும் எவரும் பயிலமாட்டேன் என்று வைராக்கியம் பூண்டவர் அல்லர். அந்த "பயில முடியாது,
எனக்கு இது வேண்டாம்” என்று அடம் பிடிக்கும் மன நிலை பள்ளி கல்லூரி நிலையில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். எனில் தவறு நிகழ காரணம் கல்விக்கூடங்கள் என்று உணர்வோம். இதை உணர முடியாதவர்கள் பின் வரும் வினாக்களுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மனதிற்குள் விடை தேடி புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் 4, 5 வகுப்பு வரை கல்வியின் மீது வெறுப்பு கொள்வதில்லை ஆனால்
சுமார் 8ம் , 9ம் வகுப்புகளுக்கு
வந்ததும் மெல்ல கல்வி மீது வெறுப்பு படருகிறதே ஏன். ?
நீங்கள் உங்கள் பயிலும் நாட்களில் இது போல் உணர்ந்தது உண்டா
?
சுமார் 60-65% நபர்கள் இந்த நிலையை உணர்தல் சகஜம்.. அது ஏன்?
இதுநாள் வரை எளிதாக இருந்த பள்ளிக்கல்வி இப்போது X
th போர்ட் எக்ஸாம் என்று திரும்ப திரும்ப
சொல்லி தேர்வு பற்றி ஒரு அச்சத்தை விதைக்கிறோம். மேலும் X
th std வரும் என்பது
எப்போதோ தெரியும் ஆனால் அப்போதெல்லாம் கவனக்குறைவாக [மாணவரும்/பெற்றோரும்]
இருந்தது மாபெரும் தவறு. கீழ் நிலை
வகுப்புகளில் 3 முதல் 8 வரை எந்தப்பாடத்தையயும் சரிவர புரிந்துகொள்ளாமல்
ஒப்பேற்றிவிட்டு இப்போது எல்லாமே மலைப்பாக தோன்றுவது மாற்றவொண்ணாதது. வலுவான
அஸ்திவாரம் கட்டமைக்கப்படவில்லை.
திடீரென்று பாடச்சுமை அதிகம் போல் உணருவது நமது வலுவில்லா அடிப்படையை
உணர்த்துகிறது
2 மேல் நிலை எட்ட எட்ட ஆசிரியர்கள் அதிக அளவிலான பாடச்சுமை [syllabus
]இருப்பதாக சொல்லிக்கொண்டு விரைந்து
பாடங்களை முடிப்பது -நான் போர்ஷன் முடித்துவிட்டேன் என்று மேலதிகாரிகளுக்கு
அறிவிப்பு செய்யவே. சரி மாணவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை எவரும் கேட்பதோ
தேடுவதோ இல்லை.
3புரிந்துகொள்ள / புரிய வைக்க இரு தரப்பும் [பயில்வோர்/பயிற்றுவிப்போர்]
முயல்வதே இல்லை அதிக அளவிலான பாடச்சுமை [syllabus]
என காரணம் காட்டி , விரைந்து ஓடுகிறார்கள்; பின்னர் டெஸ்ட் டெஸ்ட் என்று ஒவ்வொரு ஆசிரியரும் வாரா வாரம் செயல் பட , எனோ தானோ அணுகுமுறை பரவலாகி, இப்போது டெஸ்டில் மார்க் வாங்க முயல்வது காலத்தின் கட்டாயம்
ஆகிறது. டெஸ்டு களில் அநேகமாக 85-90% மார்க் பெற்றுவிடுகின்றன குழந்தைகள். சிறுசிறுக 2,3 படங்களில் டெஸ்ட் எனவே எளிதாக மனப்பாடம் செய்து
தப்பிக்கின்றனர் பயில்வோர். .
4 இப்படியாக 85-90% மார்க் நிம்மதி தர மாணவரும் பெற்றோரும் அமைதி கொண்டு
இருக்க,
ஐயோ பத்தாம் வகுப்பு வந்துவிட்டதே என்று ட்யூஷன் தினமும்
பசும்பால் கறப்பது போல் காலை மாலை இருவேளைகளிலும் .
ஆமாம் ஒட்ட கறந்து விடுகிறார்கள் பணத்தை பெற்றோரிடம்.
5 முக்கியமான கேள்வி என்று ஒரு 12-15 கேள்வி, பதில் தயார் செய்து தேர்வில் நன்றாக எழுதி மதிப்பெண் வாங்கி
அமைதியும் பெருமையும் கொள்வோர் பிளஸ் 2 நிலையில் பாடங்கள் அதிகம் -புரிந்து கொண்டால் தான் படிக்க
இயலும்,
இல்லையேல் கல்வி கசக்கத்தான் செய்யும். அப்படியானால் இதற்கு
தீர்வு தான் என்ன? அதை செயல் படுத்த இயலுமா ?
--முடியும் அடுத்த பதிவில்
தொடரும்
அன்பன் ராமன்
In English teachers should give exercises in grammar based on Wren & Martin
ReplyDeleteSocial studies teachers should use maps and make the students thorough about the location of countries and states in India besides taking them to different localities around the school to make the students understand how the life outside their home
The science teacher should teach with more of practical’s than theory
Maths teacher should initially make the students thorough with multiplication, addition and subtraction.