IS LEARNING- BITTER? --2
கல்வி கற்றல் கசப்பானதா? –2
கல்வி கசப்பதாக தோன்றுவது, கற்றல் ஏற்படுத்தும் கசப்பே அன்றி கல்வி அல்ல. இது சற்று
நுணுக்கமாக உணரப்பட வேண்டிய பகுதி. கல்வி [கற்றல் ] ஏன் கசக்கிறது எனில்
1 அது கடினம், நமக்கு இயலாது, எதுவும்
புரியவில்லை என்று எடுத்த உடனே ஆணித்தரமாக நம்புகிறோம்.
2 நமது நிலைப்பாட்டில்
உள்ள உண்மை”, எதுவும் புரியவில்லை" என்பது தான்.. ஏன் புரியவில்லை, எப்படிப்
புரியாமல் போகும் என்ற 2 கேள்விகளை நமக்கு
நாமே கேட்டுக்கொண்டால் , ஒரு சில உண்மைகளேனும் புலப்பட த்துவங்கும்
.பாடம் போதிக்கப்படும் போது, வேறெதையோ பார்த்துக்கொண்டோ அல்லது சிந்தித்துக்கொண்டோ மனம்
சிதறுகிறது. திடீரென்று சுயநினைவுக்கு வந்து மீண்டும் கவனிக்க முயலும் போது
புரிதல் அரைகுறையாக அமைய , மீண்டும் கவனச்சிதறல் நமது மனத்தினை ஆட்கொள்கிறது . பயில் வோரின் வயது
அடிப்படையில் அமைவது தான் கவனச்சிதறல் .
கவனச்சிதறல் தானாகவே தோன்றும்,யாரும் யாருக்கும்
போதிக்கத்தேவை இல்லை. என்ன வினோதம் இது, சொல்லித்தருவது
மனதில் தங்கவில்லை, சொல்லாமலே புகுந்து ஆட்டிப்படைக்கும் கவனச்சிதறல். என்று இயற்கையின்
விநோதங்கள் ஏராளம்
கவனச்சிதறல் மனம் சார்ந்தது, எனினும், இதற்கு கதவைத்திறந்து விடுவது பயில்வோரின் கண்களே. பார்வை
தான் நமது கவனத்திற்கு உதவும் புலன் . அதை நிலைப்படுத்த கூர்ந்த முனைப்புடன் பாடம்
கேட்பது அவசியம் . இப்போது களம் குழப்ப விளிம்பில் இருக்கிறது. கூர்ந்த
பங்களிப்புடன் பாடம் கேட்பது கொடுக்கல்-வாங்கல் நிலை என்பதே அடிப்படை உண்மை. ஆம்
வாங்குபவர் -பயில்பவர் [ஆணோ பெண்ணோ -யாராயினும்], கொடுப்பவர் ஆசான்
[ஆணோ பெண்ணோ -யாராயினும்], இவ்விடத்தில் தான் யுத்தகளம் பிறக்கிறது. வழங்குபவர்
குழப்பம் இன்றி தெளிவாக திறம்பட உரைத்தல் வேண்டும் ,அதோடு அனைவரும்
தன்னை பின்பற்றி வருகின்றனரா என்பதை [VIP யின் மெய்க்காப்பாளர்
போல] சுற்றிச்சுற்றி பார்த்தபடியே பேசி-விளக்க வேண்டும்.
ஆசானின் வாய் கருத்தை சொல்லிக்கொண்டே
வர, அவரின் கண்கள்
ஊடுருவிப்பார்க்க , எந்த பயில்வோருக்கும் கவனம் வேறிடத்தில் திரும்பாது. ஐயோ
இவன்[ள்] கண்குத்திப்பாம்பு என்று அனைவரும் இயல்பாகவே பாடம் கேட்கும் மன நிலையை
ஏற்படுத்தும் சூழல் உருவாகும் . இது
தான் பயில்விப்போரின் [ஆசானின்] தொழில் உத்தி. இந்த உத்தி அறிந்தோர், எவரும் தப்பிவிடாமல் தெளிவாக கூர்ந்து நோக்கி கற்பிப்பர்.
இந்தப்புள்ளியில் தீவிர கவனம் செலுத்தாமல், நான் சொல்லத்தான்
செய்வேன், படிப்பதும் , விடுவதும் தனி
நபர் தலை எழுத்து என்று கடந்து செல்லும் ஆசான்களும் உண்டு. இவ்வகை ஆசான்களின்
திறனால் ஈர்க்கப்பட்டு பயில்வோர் 65-70% என்ற அளவில் இருக்கும் . முன்னவர், [கழுகுப்பார்வை-கிடுக்கி
ப்பிடி . வகை ஆசிரியர் ] கோபித்துக்கொள்வார் என்று அவருக்காக கவனம் செலுத்தி
காலப்போக்கில் இதுவே பழக்கம் ஆகி பயில்வோர் -75-80% என்ற அளவில் இருக்கும். ஒரு
10-15% நபர்கள் கழுகுப்பார்வைக்காக மேம்போக்காக பயின்று நிச்சயம் தேர்ச்சி
பெறுவார். இதில் இரண்டு காரணிகளின் இயக்கம் புதைந்துள்ளது அவை :
1 ஆசான் இடைவிடாது மேற்பார்வை கொள்ளுதல் 2 அது மட்டுமே கவனிக்க வைக்காது
-அவ்வகை ஆதிக்கம் பயனுள்ளதாக அமைய ,ஆசான்
தெள்ளத்தெளிவாக கற்பிக்க அனைத்து முயற்சிகளையும் உத்திகளையும் பின்பற்ற தன்னை
முறையாக கட்டமைத்துக்கொள்ளவேண்டும் . இந்தப்புள்ளியில் ஒரு நுணுக்கம் இருக்கிறது
அது என்ன எனில் அநேக டாக்டர்கள் தான் ஒரு டாக்டர் என்பதில் பெருமை
கொள்கிறார்கள், அதுபோன்றே IT துறையில் பலரும்
தான் ஒரு IT விற்பன்னர் என்று உள்ளூர பேருவகைகொண்டு பணியாற்றுகின்றனர்.
. ஆசிரியர்களில் பலர் தங்களை உயர்வாக எண்ணுவதில்லை. பலர் தாழ்வு மனப்பான்மை எனும்
பீடிப்பில் சிக்கி தங்களை முன்னிலைப்படுத்த முனைவதே இல்லை.
இதற்கு ஒரு பலமான காரணி அவர்களின் பலவீனமான மொழி ஆளுமை [தமிழோ/ ஆங்கிலமோ/
வேறெதுவோ] அவர்களை ஆணித்தரமாக பேசவிடாமல் குறுக்கிடுகிறது. இவர்கள் பாடத்தில்
பாண்டித்யம் கொண்டிருந்தாலும் அதை செலுத்தும் மொழியில் தளர்ச்சி கொண்டு தயக்கம்
மேம்பட வாழ்பவர்கள்.. மாணவர்கள் சொல்லும் விமரிசனம் அவருக்கு நல்ல STUFF இருக்கு ஆனா பேச
வராது . இவ்வகை நபர்களிடம் மாணவர்கள் அச்சம் கொள்வதே இல்லை. எனவே அவர்களின்
முயற்சிகளை முழுமனதுடன் கவனிக்காமல் கவபனச்சிதறல் ஏற்பட்டு எனோ தானோ என்று அணுகு
கின்றனர். அதனால் அவ்வாசானின் பெரும் முயற்சிகள் கூட நிறைந்த பலன் தர இயலாமல்
சற்று தொய்வடைவதை வருத்தத்துடன் பதிவிடுகிறேன்
எவரையும் குறை கூற வில்லை ஆயினும் நான் குறிப்பிட விழைவது பயில்வோரின் கவனத்தை
ஈர்த்து தன் பால் நிறுத்தும் வல்லமையை
ஆசிரியக்ப்பணியில் முத்திரை பதிக்க நினைப்போர் கண்டிப்பாக செயல் உத்தியாக அறிதல்
வேண்டும் .
அவற்றில் குறைந்தது 3 படி நிலைகள் உண்டு ,அவை 1. தகவல், 2 தெளிவு 3
ஒருங்கிணைத்தல்[அதாவது ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதிக்கான அனைத்து
தகவல்களையும் ஒருங்கிணைத்துக்காட்டுதல்]. .
இம்மூன்றும் பணி சார்ந்த தேவைகள். இவை பரிமளிக்க ஆசான் குறித்த
சமூக மதிப்பீடு[SOCIAL
ESTIMATION ] மிகுந்த வல்லமையும் முக்கியத்துவமும் உடையது. அவை
தோற்றுவிக்கும் பிம்பம் ஒரு ஆசானை பெரிதும் ஏற்புடைய ஒரு வல்லமையாக பிறரை
உணரவைக்கும் .
இவற்றை அடைதல், நிர்வகித்தல் குறித்து பின்னர் பார்ப்போம் .
தொடரும்
அன்பன் ராமன்
கணக்கு எனக்கு வராது என்று தனக்குள்ளே கூறிக கொள்ளும் நபர்கள் ஏராளம் .சொல்லிக்கொடுப்பவர்களும் syllabus ஐ முடிக்க வேண்டும் என்று பாடம் நடத்தினால் அந்தப் பாடம் எப்படி மனதில் பதியும்
ReplyDelete