Sunday, April 7, 2024

A hesitancy to biology- why?

 A hesitancy to biology- why?

பயாலஜி என்றால் ஒரு தயக்கம் -ஏன் ?

பலரும் எஞ்சினீரிங் / மருத்துவம் , பின்னர் பல் வைத்தியம் , பிஸியோதெரபி , கம்பியூட்டர் சயன்ஸ் , IT என்ற இன்பர்மேஷன்  டெக்னாலஜி,, காமர்ஸ்  , ஆடிட்டிங் என்று +2க்குப்பின் விருப்பக்கல்வியாக பட்டியலிடுவர் , மறந்தும் கூட மருந்துக்கும் கூட பயாலஜி என்ற திசையைக்கூட பார்க்க தயங்கு கிறார்கள். .ஏனைய கல்வித்திட்டங்களை புரிந்துகொண்டதைப்போலவும் , இந்த பாயாலஜியில் அவ்வளவு நாட்டமில்லை என்றும் வீராப்பு பேசுவார்கள். உள்ளூர அவர்களின் எண்ணம் பயாலஜியில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்ற ஒரு கற்பனை நிலைப்பாடு. 

உங்கள் நிலைப்பாடே தவறு என்று சரியாக புரிந்து கொள்ள ஒரே ஒரு அடிப்படை கேள்வி. 

பயலாஜிக்கல் ரியாக்ஷன்கள் ஏதேனும் ஒன்றையாவது நம்மால் நிறுத்தவோ,திருத்தி அமைக்கவோ முடியுமா? முடியாது- ஏன்? நாம் அறிந்த கெமிஸ்ட்ரி ஒருவகை விளக்கம் தந்தாலும் , உயிரினங்கள் உண்மையிலேயே விதவிதமான செயல்களை அவ்வப்போது மாற்றுப்பாதைகள் [alternative pathways] வாயிலாக வெவ்வேறு அசாதாரண சூழல்களை கடந்து செல்லும் ஆற்றல் படைத்தவை. இது போன்ற செயல் திறன்களை அடிப்படை பயாலஜி கல்வித்திட்டத்தில்பெருமளவில்  போதிப்பதில்லை . எனவே நாம் தவளையின் படமும் குவளை மலரின் குறுக்குவெட்டுத்தோற்றமும் தான் பயாலஜி போலும் என்று மிகக்குறுகிய எல்லைக்குள்பயாலஜியை  அடைந்துவிட்டோம்  . . 

எதிர்காலத்தில் பயோடெக் வகை கல்வியில் நுழையும் தகுதியை அடைய சிறப்பாக வளர்ச்சி முறைமைகள் [developmental regulations] மாலிகுலார் கட்டுப்பாடுகள்  [molecular controls, [physiological modulations ]செயலியல் ஏற்ற இறக்கங்கள் உள்ளடக்கிய அஸ்திவார க்கல்வி, =2 / கல்லூரி முதல் ஆண்டு பாடத்திட்டங்களில் வந்தாலும் வியப்பில்லை  

தாவர / விலங்கு வகை செல் செயல்பாடுகள் இப்படித்தான் பயணிக்கும் என்று நாமாக தீர்மானிக்க இயலாது. உட்புற சூழல்/தேவைக்கேற்ப செயல் பாடுகள், குறைந்த எனெர்ஜி செலவில் நிகழ்த்துவது தான் உயிரின அமைப்புகளின் வல்லமை. தாவரங்கள் வெளிவிடும் ஆக்சிஜன் அளவு

சுமார் நாள் ஒன்றுக்கு இருமரங்கள் வெளிவிடும் ஆக்சிஜென் ஒரு நபரின் தேவையை பூர்த்தி செய்கிறது. இதற்கு விலை கொடுத்தால் சுமார் 2000/-ரூபாயை தாண்டும்.. இது போன்ற உயிரின செயல்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளவும் உரிய வகை உயிரினங்களை ஈடுபடுத்தவும் நுணுக்கமான தகவல்களை அளிக்க வல்ல துறைதான் பயாலஜி. இதன் விளைவாக நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மனிதகுலத்திற்கு பலன் அளித்துவருகிறது. விவரமறிந்தோருக்கு பயாலஜி ஒரு தங்க களஞ்சியம்/ தங்க சுரங்கம்.

சரி எதற்காக பயாலஜி குறித்து ஆதங்கம் கொள்ள வேண்டும் --என்றால், முன்னாட்களைப்போல் அல்லாமல், வரும் காலத்தில் செயல்படுத்தக்கூடிய அறிவார்ந்த தொழில்நுட்பம் சார்ந்து பயாலஜி விரைந்து முன்னேறிக்கொண்டு வருகிறது. இன்றைய பயாலஜி பலர் நினைப்பதைப்போல தவளையும் , குவளையும் அல்ல ;மாறாக பல்வேறு அறிவியல் துறைகளின் ஒருங்கிணைப்புக்களமாக செயல் வடிவம் பெற்றுள்ளது பயாலஜி துறை [field]. இன்னும் நுணுக்கம்,ஆக ஆய்ந்தால் IISc [இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்  சயின்சஸ் ],TIFR எனப்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் எப்போதோ [30-40] ஆண்டுகள் முன்னேயே இந்தவகை கல்விமற்றும் ஆராய்ச்சிகளில் இறங்கி உயர்வகை ஆய்வுகளில் புகழ் எய்தியுள்ளனர். 

இது போன்ற உயர் தர பயிற்சி பெற்றோர் இந்தியாவில் மேம்பட்ட ஆய்வு நிறுவங்களிலோ/ மேலை நாடுகளில் புகழ்பெற்ற பல்கலை கழங்களிலோ அல்லது உயர்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலோ மிக நல்ல பதவிகளில் அமர்கிறார்கள். சமீப காலங்களில் தென் தமிழ்நாட்டின் பல்கலைகள் மதுரை, காரைக்குடி, நெல்லை போன்ற வற்றில் முனைவர்பட்டம் பெற்ற பயாலஜி துறைசார்ந்தோர் அமெரிக்க கல்விநிலையங்கள்/ஆராய்ச்சி நிலையங்களில் பணியில் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு வாய்ப்பு இருப்பதையே அறியாமல் அல்லது விரும்பாமல் ஏதாவது ஒரு எஞ்சினீரிங் காலேஜில் எஞ்சினீரிங்/ பயோடெக் சேர்வேன் என்போர் கருத்தில் கொள்க , பயோடெக் கல்வியும் பயிற்சியும் , செயல்பயிற்சி [ப்ராக்டிக்கல் ட்ரெய்னிங்]. முறையில் கற்பிக்க மற்றும் கற்கப்பட வேண்டிய கல்வி முறை. 

புத்தக கோட்பாடுகளை கேள்வி பதில் முறையில் பயின்று தேர்ச்சி பெறலாம்;ஆனால் களப்பணிக்கு வேண்டிய செய்முறை அணுகுமுறைப்பயிற்சி மற்றும் செல்களைக்கையாளும்  , விரைவும் , துல்லியமான பார்வை எனும் OBSERVATION அனுபவமும் தான் வேலை யில் ஈடுபடுத்தவல்ல பயிற்சிகள். மிகவும் தரமான அனலிடிக் கருவிகள், ஒருபொருள் கொண்டுள்ள எடை, தன்மை இவற்றை வினாடியில் பகுத்துச்சொல்லும் ஸ்கேனர் வகை கருவிகள் பயிற்சிகள், மிகத்துல்லியமாக வடிவமைக்கப்படும் வளர் ஊடகங்கள் [GROWTH MEDIA ] தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாத நிறுவனங்களில் பிடெக் பயோடெக் பயில்வது, கிளிஜோதிடம் உட்பட  கிட்டத்தட்ட எந்த நன்மைக்கும் உதவாது. 

இது போன்ற பட்டதாரிகள் சிலர் பயோடெக் போதிக்கும் சில கல்லூரிகளில் ஆசிரியப்பணியில் சேர்ந்து அல்லலுறுவதைப்பார்க்கிறோம். ஏனெனில் BSc பயோடெக் போதிக்க வலுவான பயாலஜி ஞானமும் அடிப்படை செயல் முறைகளான இனம் காணுதல் [identification] ,போற்றிக்காத்தல் [preservation ] செல் தனிமைப்படுத்துதல் [செல் isolation] biochemical assay [பயோகெமிக்கல்சோதனைகள்] போன்ற வை நன்கு தெரிந்தோர் பிறருக்கு பயிற்றுவித்தல் முறையானது, எளிது. இவ்வனைத்துமே எஞ்சினீரிங்போல ஸ்கெட்ச்சிங் [sketching] / formula என்று போதிக்க முடியாது. அந்த வகை பயிற்சி  எதிர்கால வாழ்வுக்கு உதவாது. எனவே வளரும் துறைகள், அணுகுமுறைகள் பற்றி அறிந்தோரிடம் அறிந்து விவாதித்து இளையோர் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் . 

அணுகுமுறைகள் முற்றிலும் வேறு திசை நோக்கி பயணிப்பது என்பதையே இன்னும் புரிந்துகொள்ளாமல் காலம் தாழ்த்துவது நமது வளர்ச்சிக்கு உகந்ததல்ல. பயாலஜிக்காக ஏன் வாதாடுகிறேன் எனில் இப்போது கணித தேர்ச்சி குறைவானவர்கள் கவலைகொள்ள த்தேவை இல்லை.  செயல்முறையில் பயின்று முன்னேற்றம் அடைய இன்றைய பயாலஜி ஒரு நல்ல வாய்ப்பு என்பதே எனது பார்வை. ஆனால் நல்ல நிறுவனங்களில் சேர்ந்து பயிலுங்கள் என்றுஎச்சரிக்கையாக அறிவுறுத்துகிறேன்.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. ஒரு காலத்தில் பயாலஜி படிக்க குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே
    வருவார்கள் . பயாலஜியின் அருமை இப்போது தெரிய வந்துவிட்டதால் physics, chemistry படிக்க ஆர்வம் குறைந்துவிட்டது.Crowdpulling is a sort of cycle. This cycle may change after some years. It may not be a surprise that Philosophy May attract more students in future.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...