SALEM SUNDARI- 3
சேலம் சுந்தரி-3
சுந்தரி, இன்னும்ஒரு
நபர் வேலை க்கு வரவில்லை என்று புகார்
சொன்னது திரு மாடசாமியைப்பற்றித்தான்
சுந்தரி நல்லவள் தான் தாயில்லாப்பெண் . நன்கு படித்து சொந்த முயற்சியில் போட்டித்தேர்வு எழுதி வேலை யில் சேர்ந்து இப்போது 14 மாதமாக வேலைபார்க்கிறாள். வேளையில் நல்ல கெட்டிக்காரி, கம்பியூட்டர் பயன்பாடு அறிந்தவள். சொந்த ஊரிலேயே தனியார் வியாபார ஸ்தலம் ஒன்றில் பில்லிங் செக்ஷனில் வேலைபார்த்தவள் . ஆனால் பலரின் போக்கு பிடிக்காமல் [குறிப்பாக சில மேலதிகாரிகள் மற்றும் உரிமையாளரின் மகன்கள் இருவர் -இவர்களின் பார்வையே பிடுங்கித்தின்பதாக இருப்பது] அவளால் பொறுக்கவோ புறக்கணிக்கவோ முடியவில்லை.
அதனால் அந்த நரகத்தை விட்டு வெளியேற அரசு வேலை குறிப்பாக மத்திய அரசு வேலை யில் எப்படியாவது தகுதி அடிப்படையில் சேர்ந்தால் தான் வாழவும் தங்கையை கரை சேர்க்கவும் இயலும் , என்று தீர்மானித்து விடா முயற்சியால் இப்போது வேலையில் இருக்கிறாள் .
[சுப்புரத்தினத்தின் ஹோட்டல் தோசை வயிறு காட்சி தற்செயல் நிகழ்வு] ;மேலும் அனுபவத்தில் இவர்கள் ML என்று கிளம்பிவிட்டால் , சில மாதங்களுக்கு டைப்பிஸ்ட் இல்லாமலே வேலைகளை கண்காணிக்க நேரும் என்ற எச்சரிக்கை உணர்வினால் வயிற்றை கவனிப்பவர் வேறு விபரீதங்களை அவர் இன்றளவும் நினைத்ததில்லை]
சுந்தரியின் தங்கை 8 வகுப்பு தான் படித்துள்ளாள் ஆனால் நல்ல திறமை சாலி ; டெய்லரிங் /எம்பிராய்டரி இரண்டிலும் நல்ல திறமையை வளர்த்துக்கொண்டு கௌரவமாக ஒரு பெண்மணியின் கார்மெண்ட் ஷோரூமில் குறைந்த வருமானத்தில் கௌரவமாகவாழ்கிறாள்.அவளுக்கு வயது 20 தாண்டிவிட்டது , அவளுக்கு ஒரு நல்ல பையனைப்பார்த்து கல்யாணம் செய்ய உள்ளூர தீவிர யோசனையில் இருக்கிறாள் சுந்தரி
சரி
இப்போது என்ன சுந்தரி புராணம் ?என்றொருவர் நறநறக்கிறார்.
இந்த தங்கை ப்பாசம் தான் காலையில் தன்னிலை மறந்து ஏதேதோ தவறுகளை செய்து HR வரை போய் வசவு வாங்கி வேதனையில் ஆழ்த்தியது. இதில் ஒரு வினோதம் இன்னும் சுந்தரிக்கே [26] மணமாகவில்லை.
நறநறத்தவர் இப்போது இரண்டு தாடையும் விலகி
பரிபூரணமாக பற்கள் தெரிய சிரிக்கிறார் வேறொன்றுமில்லை சுந்தரிக்கே இன்னும்
திருமணம் ஆகவில்லை என்ற தகவலை நான்
சொல்லிவிட்டேன் அல்லவா. மேலும் அவர் ELIGIBLE BACHELOR எனவே கொஞ்ச்சம் நிலை தடுமாறிட்டார் , பட்டால்,
தானே திருத்துவார்.
சரி லெட்டர் அடிக்க சொன்னாரே சுப்புரெத்தினம் .......
திடீரென்று அது ஞாபகம் வர 2 லெட்டரையும்
நீட்டாக அடித்து 2 ROUGH காபி எடுத்து சுப்புரெத்தினம் டேபிளில் வைத்டுவிட்டு
திரும்பினாள் மணி 12.05 ஒரு கையில் பெரிய மூட்டை மறுகையில் சூட்கேஸ் , அய்யனார் மீசையுடன் ஆஜானுபாகுவாக உள்ளே வந்தார் திரு
மாடசாமி இப்போது திரு மாடசாமி ஸ்பெஷல் SQUAD LEADER , தென்னக ரயில்வேயின் கேரளப்பகுதியில் ட்யூட்டி முடித்து
வருகிறார் வண்டி 3 மணி
நேரம் லேட். நல்லா இருக்கீங்களா என்று
சுந்தரிக்கு தான் முதல் விசாரிப்பு. பின்னர் ஒவ்வொருவராக விசாரித்துவிட்டு பெரிய
மூட்டையை பிரித்தார் .
மூட்டையில் என்ன என்று உள்ளூர எல்லோருக்கும் ஆவல் , இருக்காதா பின்னே ?
தொடரும்
அன்பன் ராமன்
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
ReplyDeleteஅண்ணா , திடீரென்று இப்படி தூக்குதூக்கியில் பாய்ந்துவிட்டீரே !!!!
ReplyDelete