HONESTY
நேர்மை
'நேர்மை' பற்றி DEFINITION [விளக்கம் ]
யாதெனில்
உதட்டில் உறைவதும் , உள்ளத்தில் ஒளிந்து மறைவதும் என்ற ஒற்றைப்பண்பே 'நேர்மை' எனப்படும் .
நீ தர்மத்தைக்குழி
தோண்டி புதைத்துவிடுவாய் போலிருக்கிறதே என்று ஓர் நேர்மையாளர் பொங்கிக்கொதித்து
நெற்றிக்கண் திறக்கிறார். அன்புடையீர்
சற்று அமைதி கொள்வீர். அடியேனின் கூற்று இன்றையய வெகுஜன நிலைப்பாடு இதில் தாங்கள் குமுறுதல் ஏனையோரை எள்ளளவும் பாதிப்பதில்லை
என இன்னுமா உணர வில்லை.. அண்ணாமலையே தெய்வம் என்று படை எடுக்கும் பக்தர் கூட்டம்
கோயிலுக்கு வெளியே எவன் ஏமாறுவான் என்று வலை விரித்து காத்திருப்பதை அறியாதவரா
தாங்கள்? போகட்டும் இதுநாள் வரை இதே
நேர்மையின் பின் அணிதிரள்வோர்
செய்துகொண்டிருந்தது என்ன? நமது [அதாவது நம்
மக்களின்] நேர்மை பற்றிய
புரிதல் “ எல்லோரும் நேர்மை வழி நடக்கவேண்டும் , நான் அவ்வப்போது கருத்து சொல்வேன்.இயன்றபோதெல்லாம் வேறு
வழியில்லாமல் நேர்மையை பின் பற்றுவேன்” என்பதே பலரின் நிலைப்பாடு .
என்ன நாட்டில்
நேர்மையாளர்கள் இல்லையா? என்று வினா
எழுப்புவோர் கவனத்தில் கொள்க--. “'நேர்மை 'என்பது ஒரு கொள்கை வடிவில் அதிகமும் செயல் வடிவில்
அருகியும் விட்ட ஒரு செயல் முறை உபதே கள யதார்த்தம்”. . சரி இது ஏன் எனில் -கண்ணெதிரில் நிகழும் நடைமுறைகள்., ஊழல், லஞ்சம் , அபகரிப்பு போன்ற செயலில் திளைத்து பொருள்
குவிப்போர் பல்கிப்பெருகி விட , நேர்மையை பின்பற்றநினைப்போர் படும் துயர் எண்ணற்றது. ஏன்
எனில் நேர்மை என்பது .வேள்வி போன்றது . வேள்வியில் செயல் முறைகள் கடுமையானவை.. எதையும் வழுவாமல் பின்பற்றி நியாயத்தின்பால்
நிற்பது எளிதன்று. ஒரு சாதாரண செயல்பாட்டில் கூட நம்மால் நேர்மையைகைக்கொள்ளுவது 'வேப்பங்காய்' போல தோன்றுகிறது.
எங்கே மனசாட்சியை அடகு
வைக்காமல் சொல்லுங்கள். .. ஒரு விண்ணப்ப பாரம்
வாங்கும் வரிசையில் எப்படியாவது இடையில் நுழைந்துவிட முயற்சிக்காதவர்களா
நாம்? நான் அப்பவே வந்துவிட்டேன் தண்ணி குடிக்க போயிருந்தேன்
என்று நமக்கு முன்னே நிற்க எல்லா ஜாலவேலையும் நடப்பதை அன்றாடம் பார்க்கிறோமே. இதோ இருக்கே பானை -இதிலா என்று யாராவது கேட்டால் ஒருவினாடி
முகம் மாவடுவாய் சுருங்கி உடனே சுதாரித்துக்கொண்டு நான் அங்கே ஐஸ் வாட்டர்
குடிக்கப்போனேன் என்று ஒரு குழப்பமான திக்கில் கை காட்டி தப்பிக்கப்பார்ப்பார்.
அங்க ஏது ஐஸ் வாட்டர் என்று வேறொருவர்க்கேட்க, போனேன் ஐஸ்
வாட்டர் இல்ல -சரினு திரும்பி வந்துட்டேன் [பதில் =வந்துட்டேன் னு சொல்லு ரகம் ].
ஆஹா என்னே நமது நேர்மை?. பார்க்கவேண்டும்
இவர்கள் மகரிஷி போல் உபதேசிப்பதை.-- காணக்கண் கோடி வேண்டும்.. சரி நிகர் சமான சமத்துவம் க்யூ வரிசையில்
நிகழ்கிறது அல்லவா.? ஆம் சரி நிகர்
தான் பெண்கள் இது போல் நுழைவதில் கைகாரிகக்ள் என்பதை என்னால் அடித்துச்சொல்ல முடியும்.இயல்பாகவே பெண்கள் குறித்து 'போகட்டும்'என்று பலரும்
அனுமதிப்பதனால் இந்த மாதிரி இடைச்செருகல்
முயற்சிகளைவெகு சரியாக நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
நான்இந்த வகைஇடைச்செருகல்
முயற்சிகளை முற்றாக வெறுக்கிறேன் , என் வாழ்நாளில் அதை நான் செய்யவே மாட்டேன் என்று சொல்ல
எத்தனை பேரால் முடியும்? இதில் போலித்தனம்
இல்லாமல் விடை தேடுங்கள் அப்போது தெரியும் நாம் நேர்மைக்கு தரும் மதிப்பு
என்னவென்று. மற்றும் இரு நிகழ்வு கள் இவற்றையு ம் 'நேர்மையின் சான்றாக 'பார்க்கலாம்..
கல்லூரிகளில் செயல்முறை ரெக்கார்ட் /விடைத்தாள் / அசைன்மென்ட் கட்டுரையை
ஆசிரியரின் மேசையில் வைக்கும் போது, நாலா புறமும்
கண்ணை சுழலவிட்டு யாராவது பார்க்கிறர்களா என்று கவனித்து -யாரும் இல்லாதபோது தான்
அது வைக்கப்படுகிறது . எப்படி? பலரின் நோட்
/கட்டுரை / விடைத்தாள் இவற்றிற்கு அடியே சொருகுவார்கள் [ஆண் /பெண்
இருபாலரும்]. ஆசிரியர் இதை[ [எனது பேப்பரை] முதலில்பார்த்துவிட்டால் . --ஈவு இரக்கமின்றி
முட்டை போட்டுவிடுவான்; அதனால்
மெதுவாகப்பார்க்கட்டுமே என்றொரு நிலைப்பாடு. இரண்டாவது நான் முதலிலேயே
வைத்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்ள ஏதுவாக அடியில் சொருகிவிடுவது. என்ற ஒரு
கெட்டிக்கார த்தனம்.. இந்த ஜாலவித்தை அறியாதவனா என்ன அந்த ஆசிரியன்?
ரேஷன் கடை உட்பட எந்த
க்யூ வரிசையிலும் யாரை யாவது தனது பினாமி போல் நிறுத்தி , பொருள் வழங்க இன்னும்2 நிமிடம் என்ற நிலையில் பினாமிக்குப்பின் நின்று
கொண்டு நான் அப்போதே வரிசையில் இருந்தேன் என்று சால்ஜாப்பு சொல்லி பலர் கண்ணில்
மண்ணைத்தூவி ரேஷன் பொருள்வாங்கும் ஆண்
பெண் ,யுவன் யுவதி, ஏழை பணக்காரன்
எந்த பாகுபாடும் இன்றி எளிதாக ஏமாற்றும் அன்றாட வித்தையில் நம்மை வீழ்த்த யாரால்
முடியும்? புதிதாக யாரவது பிறந்து வந்தால் தான் உண்டு. இவை அனைத்தும்
உணர்த்துவது யாதெனில் concept ஆவது
கத்தரிக்காயாவது, convenience தான் முக்கியம்
என்று சொல்லாமல் சொல்லும் ஜாலம் இதற்கு நேர்மை உதவாது ; எனக்கு உதவாத நேர்மை எதற்கு என்று நேர்மையின் முகமதிப்பீடு
[face value ] நம்மை விட அறிந்தோர் இவ்வுலகில் உளரோ ? ஈசனுக்கே
வெளிச்சம் .
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment