Wednesday, April 10, 2024

SINGER-- P LEELA

 P LEELA

பி லீலா

தாய் மொழி மலையாளம் எனினும்  தமிழில் ஒலித்த முதல் சில பெண் குரல்களில் லீலா மிகவும் பிரசித்தம் . அந்தககாலகட்டத்தில் முற்றிலும் கர்நாடக வகை பாடல்களில் பாட சங்கீத ஞானம் ஒரு பெரும் மூலதனம். அவ்வகையில் லீலா முன்னணிப்பாடகி எனில் மிகை அன்று [அன்றைய பிறர் ஜமுனா ராணி, ஜிக்கி, ஏபி கோமளா , எம் எஸ் ராஜேஸ்வரி -இவர்களே. பின்னர் தான் சுசீலாவின் இசையப்பயணம் துவங்கியது]. லீலா ஒரு மகத்தான பாடகி என்பதை மறுப்பதற்கில்லை .

1 மிஸ்ஸியம்மா [1955] என்னை ஆளும் மேரி  மாதா , தஞ்சை ராமையாதாஸ் , இசை ராஜேஸ்வரராவ் ,குரல் பி லீலா

 

மிகவும் உருக்கமான பாடல் நான் அறிந்தவரை , தமிழ் சினிமாவில் தோன்றிய முதல் சர்ச் வகைப்பாடல் இதுதான் என்றெண்ணுகிறேன். பெரும் வரவேற்பு பெற்ற இசை குரல், கவிதை. சாவித்ரியின் அசாத்திய திறமைகளில் மிளிர்ந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று . கேட்டு ரசிக்க

https://www.youtube.com/watch?v=zAdH32ONpJY

2  மிஸ்ஸியம்மா [1955] வாராயோ வெண்ணிலாவே , தஞ்சை ராமையாதாஸ் , இசை ராஜேஸ்வரராவ் ,குரல் பி லீலா

வாராயோ வெண்ணிலாவே என்று ஏ எம் ராஜா அழைத்துப்பாட , சாவித்திரியும் அதே நிலவை வைத்துப்பாட ஒரு சுவையான பாடல் , லீலாவின் மென் குரலில் சாவித்ரியின் வெகு இயல்பான நடிப்பை காணலாம். இருவர் இடையே நிகழும் வாதங்கள் தான்  பாடல் ;அன்றைய வெற்றிப்பாடல்களில் ஒன்று .

 இணைப்பிற்கு

https://www.youtube.com/watch?v=IgwgUekr-68

3 குலேபகாவலி [1955] வில்லேந்தும் வீரரெல்லாம்  -தஞ்சை ராமையதாஸ் , விஸ்வநாதசுன் ராமமூர்த்தி, பி லீலா, ஜி கே வெங்கடேஷ் .

இது ஒரு பகடை விளையாட்டுப்பாடல் பின்னணியில் சதி செய்து ஏமாற்றுவதாக கதை.டீ ஆர் ராஜகுமாரிக்கு குரல் கொடுத்துள்ளார் பி லீலா . கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.google.com/search?q=villendhum+veerarellaam+song+video&oq=villendhum+veerarellaam+song+video+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIH  P LEELOA, GK V V-R,

4 உத்தம புத்திரன் [12958] காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல் -சுந்தர வாத்யார் , இசை ஜி ராமநாதன், குரல் பி லீலா .

அந்நாளில் பலரையும் கட்டிப்போட்ட நாட்டியப்பாடல் , ஜி ஆர் அவர்களின் இசை நளினம் பரிமளிக்க உத்தம புத்திரன் [12958] காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல் -சுந்தர வாத்யார் , இசை ஜி ராமநாதன், குரல் பி லீலா .அந்நாளில் பலரையும் கட்டிப்போட்ட நாட்டியப்பாடல் , ஜி ஆர் அவர்களின் நளினம் பரிமளிக்க உலவிய பாடல் லீலாவின் குரலில், சங்கதிகளை எப்படி உள்வாங்கிப்பாடியுள்ளார் லீலா. பாடலுக்கு இணைப்பு இதோ 

 பாடல் லீலாவின் குரலில், சங்கதிகளை எப்படி உள்வாங்கிப்பாடியுள்ளார் லீலா. பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=KAATHTHIRUPPAAN+KAMALAKKANNAN+VIDEO+SONG&oq=KAATHTHIRUPPAAN+KAMALAKKANNAN+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIR

5 பாகப்பிரிவினை [1959] தாழையாம் பூ  முடிச்சு -கண்ணதாசன் , வி-ரா , டி எம் எஸ், பி லீலா அந்த நாளில் பெரிதும் வலம் வந்த கிராமியப்பாடல் . எம் எஸ் வி யின் நெடிதுயர்ந்த குரலில் கிராமத்து ஆலாபனை முழங்கி இறுதியில் சட்டென்று '' என்று நிறுத்தி அசாதாரண தாக்கம் தந்த பாடல். கவிஞர் தந்த சொற்களில் எவ்வளவு கருத்துச்செறிவு. . கேட்கக்கேட்க நம்மை ஆட்கொள்ளும் கம்பீரம். லீலா கிராமத்து மரபில் சொற்களைப்பாடி அசத்தி இருக்கிறார். அது ஒருபுறம். . கை ஊனம் ஆயினும் குதித்துக்களித்து நடம் புரியும் சிவாஜி.

ஒரு கேள்வி. இன்று எந்த ஹீரோவாவது எருமையின் மீது அமர்ந்து நடிப்பாரா? அப்படி எனில் கிராபிக்ஸ் எருமையை வைத்து வேண்டுமானால் நடக்கலாம் . போகட்டும் . காட்சியில் தான் ஏழ்மையே அன்றி கவிதையோ செழிப்பானது . வாதப்பிரதிவாதங்களை கேளுங்கள். இந்தக்கவிஞன் அசாத்திய திறமையாளன்

"தாயாரின் சீதனமும் தம்பி மார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாபிமானங்களைக்காக்குமா ?” என்று கேட்கும் ஆண்  

மானமே ஆடுகளாம் , மரியாதை பொன் நகையாம் , நாணமாம் குணம் இருந்தால் போதுமே , எங்கள் நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே என்று பெண் பதில் சொல்ல பாடல் இயல்பாக பயணிக்கிறது. இந்தப்பாடலை அதி அற்புதமாக சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்துடன் திரு நாராயணன் மற்றும் சாஸ்வதி இருவரும் வழங்கி பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது .எனவே முதலில் QFR பாடலை கேட்டு விட்டு பின்னர் ஒரிஜினல் [திரைக்காட்சியை ] மிகுந்த கவனத்துடன் கேளுங்கள் .சில கருத்துகளை முன் வைக்கிறேன்

https://www.google.com/search?q=thaazhaiyaam+poo+mudichu+qfr+song&newwindow=1&sca_esv=40ca4543c95fb865&sca_upv=1&sxsrf=ACQVn09PFJxprLBd6x_Gcosn0wI8lZHLwA%3A1712537078240&ei=9j0TZou qfr 110

சொல்லை ப்புரிந்து கொள்ளாமல் பாடி, கவிதையின் நேர்த்தி குன்றி கதாபாத்திரங்களின் நிலைப்பாடு தடுமாறுகிறது. இது போன்ற குறைகளை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் இந்தப்பழி கவிஞருக்கு போய் சேரும் அபாயம் உள்ளது.

மானமே ஆடுகளாம் , மரியாதை பொன் நகையாம் என்ற விளக்கத்தை

மானமே ஆடுகளாம் , மரியாதை புன்னகையாம் என்று பாடி, பொன் நகைக்கு ஈடாக புன்னகையை வைத்துவிட , [பொன் நகையும், ஆடுகளும் சீதனம் ஆகும்], புன்னகை எப்படி சீதனம் ஆகும்? இந்த சொல்லாட்சி பொருந்துமா? கவிஞர் மானம்[ஆடு] மரியாதை[பொன் நகை]  இரண்டும் சீதனம் என்கிறார் அதை மாற்றி புன்னகை என்று பாட,  பொருள் மாறிவிட்டதே என்பதே ஆதங்கம் .இப்போது திரையில் வந்த பாடலைக்கேளுங்கள் , நான் சொல்வது என்ன என்று புலப்படும்

https://www.google.com/search?q=thaazhaiyaam+poo+mudichu+video+song&oq=thaazhaiyaam+poo+mudichu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigAd thazhaiyaam poo pl tms msv tkr

இது போன்ற பல பெருமைமிக்க பாடல்களை வழங்கிய லீலா 2005 ம் ஆண்டில் மறைந்தார்.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. காத்ததிருப்பான் கமலக்கண்ணன் பாட்டு மனதை தொடும்
    எனக்குப்பிடித்த பாட்டு
    கர்நாடக இசை தழுவியது

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...