Thursday, April 11, 2024

Director P MADHAVAN

  Director P MADHAVAN

இயக்குனர் திரு பி. மாதவன்

திரு பி மாதவன் துவக்கத்தில் இயக்குனர் TR ரகுநாத் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் ஸ்ரீதரிடம் இணை இயக்குனராக பனி புரிந்தார். 1963 முதல் தனித்து இயக்குநராகபயணித்து தனக்கென முத்திரை பதித்தவர். திரு சிவாஜிகணேசனின் பல படங்களை இயக்கிய பெருமை திரு பி. மாதவன் அவர்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட அதே பெருமை திரு சி வி ராஜேந்திரன் அவர்களுக்கும் உண்டு. இவர்கள்           இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் இயக்குனர் ஸ்ரீதரின் உதவியாளர்கள் .அதன் தாக்கமோ என்னவோ, இவர்களின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திரு பி என் சுந்தரம் அவர்கள், அதேபோல இவர்களின் பெருவாரியான படங்களுக்கு இசைத்துறைக்கு கண்ணதாசனும் ,எம் எஸ் விஸ்வநாதனும் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது.மாதவன் அந்தக்காலத்திய BA பட்டதாரி. கம்பீரமாக ஆங்கிலம் பேசுபவர். யதார்த்தகதைப்போக்கு இவரின் சிறப்பு. அடிதடி சண்டைகள் இவர் படங்களில் வெகு குறைவு ஆனால் மனப்போராட்டங்கள் தொடர்பான காட்சிகள் இருக்கும். எனவே இவரின் அநேக படங்கள் கருப்புவெள்ளை வகையினை, சில வண்ணப்படங்களும் உண்டு.

இவரின் முதல் படம் மணி ஓசை

மணி ஓசை [1963] ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப்பாரு " கண்ணதாசன் இசை வி-ரா , குரல் எல் ஆர் ஈஸ்வரி . [ஆட்டுக்குட்டிக்கு குரல் சதன் ]

பாடல்,   நாயகன் கல்யாணகுமாரின் பண்புகளை விவரிக்கும் களம்.  இந்தப்பாடலில் சிங்கள் கிளாப் [SINGLE CLAP ]அழகாக ஒலிக்கிறது .எவ்வளவு உழைத்திருக்கின்றனர் அந்தக்காலத்தில்? . கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=AATTUKKUTTI+AATTUKKUTTI+MAAMAAVAIPPAARU+VIDEO+SONG&oq=AATTUKKUTTI+AATTUKKUTTI+MAAMAAVAIPPAARU+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUy

தேவன் கோயில் மணி ஓசை கண்ணதாசன் , வி-ரா , சீர்காழி கோவிந்தராஜன்

நம்மை அறியாமல் ஒரு மௌன சூழலை விதைக்கும் பாடல். கண்ணதாசன் சொல்லாட்சி மிளிரும் பாடல், துன்பப்பட்டோருக்கு ஆறுதல் தரும் சொற்கள், தெய்வீக இசை மற்றும் விசேஷமாக ஒலித்த மணி [அதற்கு ஒரு பின்னணி உண்டு ]உரிய நேரத்தில் அதைப்பற்றி பேசுவோம்]. பாடலு க்கேற்ற  ஒளிப்பதிவு [சுந்தரம்].. கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=devan+koilk+mani+osai+video+song+download&newwindow=1&sca_esv=835ba0ee2498b9ce&sca_upv=1&sxsrf=ACQVn0_M85HDWAjE-wNEedOAf1B2lEmm8w%3A171282

அன்னை இல்லம் [1963], மடிமீது தலை வைத்து -கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , டி எம் எஸ், பி சுசீலா

அமைதியான இரவுப்பாடல் அச்சு அசல் மஹாதேவ இசைக்கருவிகள் , அவற்றின் மென் அதிர்வுகள் , நிகழ்வுகளை மிகவும் கௌரமாக வர்ணித்த பாடல். மீண்டும் சுந்தரம் ஒளிப்[பதிவாளராக  பரிமளிக்க பாடல்.கேட்க இணைப்பு

https://www.google.com/search?q=MADIMEEDHU+THALAI+VAITHTHU+VIDEO+SING+&newwindow=1&sca_esv=28539f6bd3358b60&sca_upv=1&sxsrf=ACQVn0_FYXr76S8i4XBhAKMVvb5OZNmPZg%3A1

தெய்வத்தாய்  ஒரு பெண்ணைப்பார்த்து நிலாவைப்பார்த்தேன் -[1964]   வாலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி டி எம் எஸ்      பி சுசீலா

நான் பேசி விளக்கவொண்ணாத வகைப்பாடல்

பட்டையை கிளப்பிய டிரம்ஸ் போங்கோ சஞ்சாரம், குரலில் கம்பீரம் நடையில் மிடுக்கு , சொல்லில் துடுக்கு, என்று அடுக்கலாம். மிகவும் துடிப்பான நடன அசைவுகள். எடுத்த எடுப்பிலேயே மிரட்டும் [DRUM], NOEL GRANT/

[BONGO] GOPALKAKRISHNAN இருவரும் பின்னிப்பெடல் எடுத்த பாடல், அதுவும் இறுதியில் விழும் தாள வீச்சு கள் அனாயாசம் கேட்டு குதூகலிக்க இணைப்பு.

https://www.google.com/search?q=ORU+PENNAIPPAARTHTHU+NILAVAIPPAARTHTHEN+VIDEO+SONG&oq=ORU+PENNAIPPAARTHTHU+NILAVAIPPAARTHTHEN+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAE

இன்னும் வளரும்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. சீர் காழிக்கென்றே சில பாடல்கள் . வேறு யாரும் பாடினால் எடுபடாது. அதில் ஒன்று
    தேவன்கோவில் மணிஓசை பாட்டு

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...